• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • PCOS உள்ளவர்கள் கருத்தரிக்க முயற்சி செய்ய சரியான நேரம் இதுதான்..!

PCOS உள்ளவர்கள் கருத்தரிக்க முயற்சி செய்ய சரியான நேரம் இதுதான்..!

கருத்தரித்தல்

கருத்தரித்தல்

PCOS என்பது மிக முக்கியமாக ஒரு ஹார்மோன் கோளாறு என்றாலும் கூட, இந்நிலை பெண்களின் இனப்பெருக்கக் குழாய்களில் நீர்க்கட்டிகள் ஏற்பட வழிவகுக்கும்.

  • Share this:
பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் என குறிப்பிடப்படும் PCOS என்பது ஒரு பெண் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் வளர்சிதை மாற்ற பிரச்சனைகளை எதிர்கொள்ளும் ஒரு நிலையாகும். மேலும் இது பெண்களின் கருவுறாமை சிக்கலுக்கான பொதுவான காரணம். PCOS நிலை இருக்கும் ஒரு பெண் கர்ப்பமே தரிக்க முடியாது என்பதல்ல. கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பை இது தடுக்கிறது அல்லது தாமதப்படுத்துகிறது என்று கூறலாம். PCOS அறிகுறிகளைத் தடுக்கவும், ஆரோக்கியமான கர்ப்பத்திற்கான வாய்ப்புகளை அதிகரிக்கவும் மருத்துவ சிகிச்சை அல்லது வாழ்க்கை முறை மாற்றங்கள் உதவும்.

வாழ்க்கை முறை அபாயமாகு இருக்கும் PCOS -ஆல் இந்தியாவில் 5-ல் ஒரு பெண் பாதிக்கப்பட்டுள்ளார். இது ஒழுங்கற்ற மாதவிடாய், ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் ஆரோக்கிய பாதிப்பு மட்டுமல்லாமல், கருவுறுதலில் சீகாழி ஏற்படுத்துவதால் பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

கருவுறுதலை ஏன் பாதிக்கிறது?

PCOS என்பது மிக முக்கியமாக ஒரு ஹார்மோன் கோளாறு என்றாலும் கூட, இந்நிலை பெண்களின் இனப்பெருக்கக் குழாய்களில் நீர்க்கட்டிகள் ஏற்பட வழிவகுக்கும். இதனால் ஆண் பாலியல் ஹார்மோன்கள் எனப்படும் ஆண்ட்ரோஜன் உற்பத்தி பெண்களில் அதிகரிக்கும். இது கருப்பையில் இருந்து முட்டைகள் வெளியாவதை தடுக்கிறது. இதனால் ஏற்படும் அண்டவிடுப்பின்மை கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பை கடினமாக்குகிறது. PCOS மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்படும் பெண்கள் சாதரணமாக இருக்கும் பெண்களை விட கர்ப்பமாக அதிக நேரம் எடுக்கும் அல்லது மருத்துவ உதவி தேவைப்படலாம்.



கர்ப்பமாக சிறந்த வயது

எனவே கருவுறாமை தொர்பான பிரச்சனைகளை சமாளிக்க சிறந்த வழி சரியான நேரத்தில் நோயறிதல் மற்றும் அதனை தொடர்ந்து மேற்கொள்ளும் கவனிப்பு என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதே போல ஒரு பெண் 30 வயதிற்கு மேல் இருக்கும் போது (அதாவது கருவுறுதல் அளவு குறையத் தொடங்கும் வயதிற்குப் பிறகு) கண்டறியப்படாத அல்லது நிர்வகிக்க முடியாத PCOS பிரச்சனைகள் மிகவும் சிக்கலானதாக இருக்கும். பெண்களில் 32 வயதிற்கு பிறகு கருவுறுதலுக்கான வாய்ப்பின் அளவு குறைய தொடங்குகிறது. 37 வயதிற்கு பெருமளவு குறைந்து விடுகிறது. எனவே இயற்கையாகவே கர்ப்பம் தரிக்க போராடும் PCOS உள்ள பெண்கள், கர்பமாவதற்கு அடிக்கடி முயற்சி செய்வதே சிறந்த வழி என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.



கருத்தரிக்கும் வாய்ப்புகளை அதிகரிக்க :

PCOS இருக்கும் பெண்கள் தங்கள் கர்ப்பமாவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க சீரான உடல் எடையை பராமரிப்பது, நல்ல உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையை பின்பற்றுவது, தினமும் உடற்பயிற்சிகளை செய்வது, துணையுடன் அடிக்கடி உடலுறவு கொள்வது (அண்டவிடுப்பு வரை 5 நாட்கள்), சீரற்ற மாதவிடாய் இருந்தால் அண்டவிடுப்பு நேரங்களைக் கண்காணித்து அதற்கேற்ப உடலுறவில் ஈடுபடுவது, மருத்துவரின் அறிவுறுத்தினால் கருவுறுதலை சாத்தியப்படுத்தும் மருந்துகளை எடுத்து கொள்வது உள்ளிட்டவற்றில் ஈடுபடலாம்.

பெண்கள் பிறப்புறுப்பை கெமிக்கல் பொருட்களை பயன்படுத்தாமல் சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி ?

PCOS இருக்கும் போது கர்ப்பமானால் வெளிப்படும் அறிகுறிகள் :

அதிக சோர்வு, மார்பகங்களில் வலி, நீடித்த தலைவலி, அடிக்கடி மனநிலை மாறுவது, கீழ்முதுகில் நீடிக்கும் வலி உள்ளிட்ட அறிகுறிகள் காணப்பட்டால் பரிசோதனை செய்து பார்க்கலாம்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: