ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

ஆரோக்கிய நன்மைகளுக்காக பிரவுன் சுகர் பயன்படுத்துபவரா நீங்கள்? - நிபுணர்கள் சொல்வதை கேளுங்கள்..!

ஆரோக்கிய நன்மைகளுக்காக பிரவுன் சுகர் பயன்படுத்துபவரா நீங்கள்? - நிபுணர்கள் சொல்வதை கேளுங்கள்..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Health Care | பலரும் நினைப்பது போல பிரவுன் சுகர் உண்மையில் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லதா என்ற கேள்விக்கு பிரபல ஊட்டச்சத்து நிபுணர் சரண்யா சாஸ்திரி பதில் அளித்து உள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நாம் தினமும் குடிக்கும் டீ, காபி முதல் பல இனிப்பு உணவுகள் வரை சுவையாக இருக்க முக்கிய காரணம் சர்க்கரை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் உணவின் ஒரு பகுதியாக இருக்கிறது சர்க்கரை.

தினமும் நாம் சாப்பிடும் பெரும்பாலான உணவுகளின் சுவையை அதிகரிப்பதில் சர்க்கரையும், உப்பும் தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனினும் அதிக சர்க்கரை நுகர்வு உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் மற்றும் இதய பிரச்சனைகள் போன்ற பல நோய் அபாயங்களுடன் தொடர்புடையதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சர்க்கரையில் பல வகைகள் இருந்தாலும் பிரவுன் சுகர் மற்றும் ஒயிட் சுகர் மிகவும் பிரபலமானவை.

நம் டயட்டில் இருந்து சர்க்கரையை முற்றிலும் நீக்குவது உண்மையில் சாத்தியமில்லாத விஷயம். எனினும் வெள்ளை சர்க்கரைக்கு ஆரோக்கியமான மாற்றாக நாட்டு சர்க்கரையை (பிரவுன் சுகர்) பலரும் கருதுகிறார்கள். ஆனால் பலரும் நினைப்பது போல பிரவுன் சுகர் உண்மையில் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லதா என்ற கேள்விக்கு பிரபல ஊட்டச்சத்து நிபுணர் சரண்யா சாஸ்திரி பதில் அளித்துள்ளார்.

Read More : பூண்டின் மருத்துவ குணங்களை முழுமையாக பெற இந்த 10 நிமிட ரூல்ஸ் அவசியம் - ஊட்டச்சத்து நிபுணர்

 சாதாரண ஒயிட் சுகரை விட பிரவுன் சுகர் கால்சியம் போன்ற சில கூடுதல் தாதுக்களை நமக்கு வழங்கலாம் என்றாலும் இதை சேர்த்து கொள்வதால் ஆரோக்கியத்திற்கு ஸ்பெஷல் நன்மைகள் எதுவும் இல்லை என்கிறார். இந்த கருத்தை ஆமோதித்துள்ள பிரபல மருத்துவர் அஜய் நாயர், நம் டயட்டில் சத்துக்களை சேர்ப்பதில் பிரவுன் மற்றும் ஒயிட் சுகர் இடையே சிறிய வித்தியாசம் தான் உள்ளது என கூறியுள்ளார்.

இது பற்றி விரிவாக பேசி இருக்கும் அஜய் நாயர், உங்களுக்கு எந்த சுகர் ஏற்றது என்பதை பொதுவாக சுவை மற்றும் நிறத்தின் அடிப்படையில் தீர்மானிப்பீர்கள். ஒப்பீட்டளவில் ஒயிட் சுகரில் இருக்கும் தாதுக்களை விட பிரவுன் சுகரில் அதிகம் இருக்கின்றன என்றாலும் இந்த தனிமங்களின் அளவு மிகவும் குறைவு என்பதால் பெரியளவில் குறிப்பிடத்தக்க ஆரோக்கிய நன்மைகள் எதுவும் நம்மால் பெற முடியாது என்றார். பிரவுன் சுகர் எப்போது உயர்ந்ததாக கருதப்படுகிறது என்ற கேள்விக்கு பதிலளித்த மருத்துவர் அஜய் நாயர், பிரவுன் சுகர் வெல்லப்பாகு சேர்க்கப்படுவதால் பிரவுன் நிறமாகிறது.

ஈர்க்க கூடிய சுவை, அதிக ஈரப்பதம் மற்றும் மெல்லும் தன்மை கொண்டபேக்கிங் ரெசிபிகளில் ஒயிட் சர்க்கரைக்கு பதில் பிரவுன் சர்க்கரை சேர்ப்பது நல்ல தேர்வாக இருக்கலாம் என குறிப்பிட்டார். மேலும் கால்சியம், இரும்பு மற்றும் துத்தநாகம் போன்ற சில தாதுக்களை பிரவுன் சுகர் கொண்டிருந்தாலும் சர்க்கரை நுகர்வு என்பது ஒட்டுமொத்தமாக நம் ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக இருக்கிறதா என்பதை பார்ப்பது முக்கியம் என்றார்.

100 கிராம் பிரவுன் சுகரில் 83 மி.கி கால்சியம் இருக்கும் அதே நேரம் ஒயிட் சுகரில் 1 மி.கி கால்சியம் மட்டுமே இருக்கிறது. இதே நிலை தான் இரும்பு மற்றும் துத்தநாகம் போன்றவற்றுக்கும். ஆனால் அதற்காக பிரவுன் சக்கரை முற்றிலும் ஆரோக்கியமானது என்று கூற முடியாது. ஏனென்றால் நாம் தினசரி சேர்த்து கொள்ள போவது ஒருசில டீஸ்பூன் மட்டுமே. ஏனெனில் சர்க்கரை ஒரு ஊட்டச்சத்து நிறைந்த உணவு அல்ல. மாறாக சுவைக்காக சேர்த்து கொள்ளப்படும் பொருள் என்று மற்றொரு உணவியல் நிபுணரான பிரியங்கா ரோஹத்கி கூறி இருக்கிறார்.

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்ப பிரவுன் சுகர் அதிகமாக சேர்த்து கொள்வதால் நீரிழிவு அபாயம், எடை அதிகரிப்பு மற்றும் ஈஸ்ட் தொற்று உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படலாம். எனவே பெண்கள் ஒரு நாளைக்கு 6 டீஸ்பூன், ஆண்கள் 9 டீஸ்பூன்களுக்கு மேல் இரு வகை சர்க்கரைகளையுமே சேர்த்து கொள்ள கூடாது என்று அறிவுறுத்தி உள்ளார்.

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Health, Health Benefits