ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

மாரடைப்பு வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்..? இளஞர்களை தற்காத்துக்கொள்ளும் வழிகள்..!

மாரடைப்பு வந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்..? இளஞர்களை தற்காத்துக்கொள்ளும் வழிகள்..!

மாரடைப்பு

மாரடைப்பு

மாரடைப்பு என்பது எப்போது ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரியாது. திடீரென உடல் நிலையில் தொய்வு, இதயத்துடிப்பு மற்றும் சுவாசம் நின்றுவிடுவது, உணர்ச்சியின்மை, மார்பு வலி, உடல் அசௌகரியம், பலவீனம், மூச்சுத்திணறல் போன்றவை அறிகுறிகளாக உள்ளது. அதிக வியர்வையும் இதில் அடங்கும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நம்முடைய முன்னோர்கள் 50 வயதைக் கடந்துவிட்டாலே மாரடைப்பு வந்துவிடுமோ? என்ற அச்சத்தில் உணவு முறைகளில் மாற்றம் செய்வது வழக்கம். ஆனால் இன்றைக்கு இந்த நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. மாறிவரும் கலாச்சாரம் மற்றும் உணவு பழக்க வழக்கங்களால் 20 வயதைக் கடந்தாலே மாரடைப்பு ஏற்பட்டு இளைஞர்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக இளம் வயது திரையுலக பிரபலங்களான தமிழ் நடிகர் சேதுராமன், கன்னட நடிகர் ராஜ்குமாரின் ஆகியோரின் மரணச்செய்தியிலிருந்தே மீள முடியாமல் ரசிகர்கள் உள்ள நிலையில், தற்போது 24 வயதான வங்க மொழி நடிகை ஐந்த்ரிலா சர்மா மரணம் ரசிகர்கள் மட்டுமில்லை நம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வங்க மொழி நடிகை மரணம்..

மேற்கு வங்காளத்தில் உள்ள பெர்ஹாம்பூரில் பிறந்து வளர்ந்தவர் தான் ஐந்த்ரிலா சர்மா. ஜூமுர் என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் அறிமுகமான இவர், மகாபீத் தாராபீத், ஜிபோன் ஜோதி மற்றும் ஜியோன் கதி போன்ற நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார். இது தவிர அமி திதி நம்பர் 1 மற்றும் லவ் கஃபே போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கென்று வங்காளத்தில் தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. நடிப்பில் சிறந்து விளங்கும் இவருக்கு முன்னதாக இரு முறை புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு மீண்டு வந்ததோடு தன்னுடைய திரைப்பயணத்தையும் தொய்வின்றி நடித்து வந்தார்.

இச்சூழலில் தான், சமீபத்தில் பல முறை அடிக்கடி மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதோடு நவம்பர் 1 ஆம் தேதி ஜந்த்ரிலா சர்மாவுக்கு மூளை சாவு ஏற்பட்டது. அவரின் மண்டையோட்டுக்குள் ரத்தக்கசிவு ஏற்படவே கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் இடது முன்பக்க டெம்போரோபரியட்டல் டி- கம்ப்ரசிவ் கிரானியோட்டமி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனையடுத்து சுய நினைவை இழந்த இவர், அப்படியே உயிரிழ்ந்துவிட்டார். இந்நிகழ்வு ரசிகர்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுப்போன்று இளம் வயதில் மாரடைப்பு ஏற்படுவது என்பது திரையுலக பிரபலங்களுக்கு மட்டுமில்லை அனைத்துத்துறையைச் சார்ந்தவர்களும் ஏற்படுகிறது. இந்நிலையில் ஏன் ஏற்படுகிறது? ஒருவேளை மாரடைப்பு ஏற்பட்டால் எப்படி தடுக்க வேண்டும்? என்பது குறித்து இங்கே தெரிந்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.. இதோ முழு விபரம் இங்கே…

மாரடைப்பு என்றால் என்ன?

கார்டியாக் அரெஸ்ட் அதாவது மாரடைப்பு என்பது திடீரென ஏற்படும் இதயத்தின் செயல் இழப்பாகும். மூளை, நுரையீரல் மற்றும் பிற உறுப்புகளுக்குப் போதுமான அளவு இரத்தத்தை பம்ப செய்வதைக் கடினமாக்குவதால் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. சில நொடிகளிலே சுய நினைவை இழக்க நேரிடுவதோடு இதயத்துடிப்பும் நின்றுவிடுகிறது.

மாரடைப்பிற்கான அறிகுறிகள் :

மாரடைப்பு என்பது எப்போது ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரியாது. திடீரென உடல் நிலையில் தொய்வு, இதயத்துடிப்பு மற்றும் சுவாசம் நின்றுவிடுவது, உணர்ச்சியின்மை, மார்பு வலி, உடல் அசௌகரியம், பலவீனம், மூச்சுத்திணறல் போன்றவை அறிகுறிகளாக உள்ளது. அதிக வியர்வையும் இதில் அடங்கும்.

எனவே இதுப்போன்ற நிலையை நீங்கள் அனுபவிக்கும் சூழல் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். ஒருவேளை நீங்கள் முன்னதாக முதலுதவி செய்ய வேண்டும் என்றால் இரத்த ஓட்டத்தை மீட்டெடுக்க வேண்டும். ,இதோடுஆஸ்பரின் மாத்திரைகள் எடுத்துக்கொள்வதற்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இது உங்கள் தமனிக்குள் உருவாகும் இரத்தக் கட்டிகள் சிலவற்றை உடைக்க உதவும். மாரடைப்பின் போது தமனியில் இரத்த ஓட்டத்தைத் தடுக்கிறது. இந்த மாத்திரையை விழுங்கி சாப்பிடுவதற்குப் பதிலாக அப்படியே மென்று சாப்பிட வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர் மருத்துவர்கள்.

ஒருவேளை திடீரென மாரடைப்பு ஏற்பட்டவர்கள் சுவாசிக்கவில்லை மற்றும் நாடித்துடிப்பு இல்லாத நிலை ஏற்பட்டால், இரத்த ஓட்டத்தைத் தக்க வைத்துக் கொள்ள சிபிஆர் (CPR – Cardiopulmonary Resuscitation) செய்ய வேண்டும். இதைச் செய்வதற்கு முதலில், பாதிப்பு ஏற்பட்ட நபரின் மார்பின் மையப்பகுதியில் கைகளை வைத்து வேகமாக அழுத்த வேண்டும்.

Also Read : மாரடைப்பு வராமல் இருக்க கட்டாயம் பின்பற்ற வேண்டிய உணவு முறைகள்...

இதுப்போன்ற விஷயங்களை நீங்கள் மனதில் கொண்டு செயல்பட்டாலே மாரடைப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியும். முக்கியமாக அதிக நேரம் இரவில் கண் விழிப்பதும் தீடீர் மாரடைப்பிற்கு காரணம் என்று கூறப்படுவதால், தூக்கத்தை சரியாக நிர்வகிக்க வேண்டும் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். ஒருவேளை நீங்கள் பின்பற்ற தவறினால் இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்படும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

First published:

Tags: Cardiac Arrest, First Aid, Heart attack