ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

தூங்குவதற்கு முன் குளிப்பது நல்லதா..? உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும்..?

தூங்குவதற்கு முன் குளிப்பது நல்லதா..? உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும்..?

மாலை குளியல்

மாலை குளியல்

தூங்குவதற்கு முன்பாக குளிப்பது என்றால் எவ்வளவு நேரம் இடைவெளி இருக்க வேண்டும் என்ற சந்தேகம் உங்களுக்கு வரக்கூடும். மாலையில் வீடு திரும்பியவுடன் குளிப்பதா அல்லது தூங்குவதற்கு ஓரிரு நிமிடங்களுக்கு முன்பாக குளிப்பதா என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கலாம்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒவ்வொரு நாளின் இறுதியிலும் தூங்கச் செல்வதற்கு முன்பாக உள்ள பொழுதை நீங்கள் எப்படி கழிக்கிறீர்கள்? பலர் டிவியில் சீரியல்கள் பார்க்கின்றனர். சிலர் வெப் சீரிஸ் பார்ப்பது உண்டு. சிலர் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை நோட்டமிட்டபடி மெத்தையில் படுத்துக் கொள்கின்றனர்.

நீங்கள் எதை செய்தாலும் சரி, நல்ல சுகமான, ஆழ்ந்த உறக்கம் தான் நம் உடலையும், உள்ளத்தையும் புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும் என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது. அந்த வகையில் ஆழ்ந்த உறக்கம் ஏற்பட வேண்டும் என்றால் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பாக குளிப்பது நல்ல பலனை தரும். நாள் முழுவதும் வெளியிடங்களில் சுற்றி திரிந்து கலைத்துப் போன நம் உடலில் நிறைய அழுக்குகள் சேர்ந்திருக்கும். அத்துடன் உடலும் மிகுந்த சோர்வு அடைந்திருக்கும். இதே சோர்வுடன் நீங்கள் தூங்க சென்றால் தூங்குவதில் சிரமம் ஏற்படும். ஆகவே, குளித்துவிட்டு உறங்கினால் ஆழ்ந்த உறக்கத்திற்கு உத்தரவாதம் உண்டு.

குளித்துவிட்டு தூங்குவதால் கிடைக்கும் பிற பலன்கள்

நம் உடலில் உள்ள சோர்வு அனைத்தையும் நீக்குகிறது. சருமத்தில் சேர்ந்துள்ள அழுக்கு, வியர்வை, எண்ணெய் பிசுக்கு போன்ற அனைத்தையும் நீக்க உதவுகிறது. உடலில் ரத்த ஓட்டம் மேம்படுகிறது. மனதுக்கு புத்துணர்ச்சி தருகிறது.

சூடான தண்ணீர் அல்லது குளிர்ந்த தண்ணீர் - எதில் குளிக்க வேண்டும்

இரவு குளிப்பது என்று முடிவாகிவிட்டது. ஆனால், எந்த தண்ணீரில் குளிப்பது என்று உங்களுக்கு சந்தேகம் வருகிறதா? சிலர் வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்க ஆசைப்படுவர். சிலர் குளிர்ந்த நீரில் குளிப்பதற்கு விரும்புவார்கள். எனினும், நம் உடலும், தசைகளும் சோர்வடைந்துள்ள நிலையில் அவற்றை ரிலாக்ஸ் செய்ய வேண்டும் என்றால் சுடு தண்ணீரில் குளிப்பது நல்ல பலனை தரும்.

தசை வலி, இடுப்பு வலி போன்றவற்றை நீக்குவதற்கு இது உதவிகரமாக இருக்கும். அதே சமயம் கோடை காலத்தில் நீங்கள் சுடு தண்ணீரில் குளிக்க முடியாது. இந்த சமயத்தில் குளிர்ந்த தண்ணீரில் குளிப்பது நல்ல அனுபவத்தை தரும். ஆக, இரவு தூங்கச் செல்வதற்கு முன்பாக குளிப்பது என்று முடிவு செய்துவிட்டால், எந்த தண்ணீரில் நீங்கள் குளிக்க வேண்டும் என்பதை அப்போதைய பருவகால சூழ்நிலை தான் முடிவு செய்கிறது.

எந்த நேரத்தில் குளிக்கலாம்?

தூங்குவதற்கு முன்பாக குளிப்பது என்றால் எவ்வளவு நேரம் இடைவெளி இருக்க வேண்டும் என்ற சந்தேகம் உங்களுக்கு வரக்கூடும். மாலையில் வீடு திரும்பியவுடன் குளிப்பதா அல்லது தூங்குவதற்கு ஓரிரு நிமிடங்களுக்கு முன்பாக குளிப்பதா என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கலாம். ஆனால், பொதுவாக தூங்குவதற்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக குளிப்பது நல்ல பலனை தரும். தூங்குவதற்கு முன்பாக நமது உடல் வெப்பநிலையை சீரான அளவில் வைத்துக் கொள்ள இது உதவும்.

Also Read : சால்ட் பாத் குளியலால் இவ்வளவு நன்மைகளா..? ஒரு முறை டிரை பண்ணி பாருங்க... உங்களுக்கே தெரியும்..!

எனினும், நீண்டகால சரும நோய்கள் இருப்பவர்கள் இரவில் குளிப்பதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். தேவைப்படும் பட்சத்தில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை இரவில் குளித்தால் போதுமானது என்று தெரிவிக்கின்றனர்.

Published by:Josephine Aarthy
First published:

Tags: Bathing, Sleep