ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

குளிர்காலத்தில் தண்ணீரை செப்பு பாத்திரத்தில் சேமித்து வைத்து குடியுங்கள்... ஆயுர்வேத நிபுணரின் பரிந்துரை..!

குளிர்காலத்தில் தண்ணீரை செப்பு பாத்திரத்தில் சேமித்து வைத்து குடியுங்கள்... ஆயுர்வேத நிபுணரின் பரிந்துரை..!

செப்பு பாத்திரத்தில் குடிநீரை சேமித்து வைத்து குடிப்பதால் எண்ணற்ற நன்மைகள்

செப்பு பாத்திரத்தில் குடிநீரை சேமித்து வைத்து குடிப்பதால் எண்ணற்ற நன்மைகள்

செப்பு வாட்டர் பாட்டில் தண்ணீர் குடிக்க தினமும் பயன்படுத்துகிறீர்கள் எனில் வாரம் 2 முறை கழுவுவது நல்லது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஒவ்வொரு பருவநிலைக்கு ஏற்ப நம் உணவு முறை மற்றும் அன்றாட பழக்கங்களை அந்த தகவமைப்புக்கு ஏற்ப மாற்றிக்கொள்வது இயல்பு. அந்த பருவநிலையில் நம்மை தாக்கும் தொற்று நோய்களுக்கு நம்மை தயார் படுத்திக்கொள்வதும் அவசியம். அப்படி நீங்கள் குளிர்காலத்தில் செப்பு பாத்திரத்தில் குடிநீரை சேமித்து வைத்து குடிப்பதால் எண்ணற்ற நன்மைகள் இருப்பதாக ஆயுர்வேத நிபுணர் தீக்‌ஷா கூறுகிறார்.

  அவருடைய பதிவில் “ நான் இந்த கதகதப்பான குளிர்காலத்திற்கு குடிநீரை செப்பு பாத்திரத்தில்தான் சேமித்து வைத்து குடிக்கிறேன். இது என்னை மிகவும் புத்துணர்ச்சியாகவும் , சுறுசுறுப்பாகவும் வைத்துக்கொள்கிறது. அதோடு அந்த நீரை இன்னும் டேஸ்டாக மாற்றுகிறது. இனிக்கிறது” என கூறியுள்ளார்.

  மேலும் அப்படி குடிநீரை சேமிப்பதால் சுவையை தாண்டி என்னென்ன நன்மைகள் என்பதையும் பகிர்ந்துள்ளார். அதில்...

  • உடல் எடையை குறைக்க உதவுகிறது
  • செரிமானத்தை மேம்படுத்துகிறது
  • வயது முதிர்ச்சியை குறைக்கிறது
  • இதயத்திற்கு நல்லது. குறிப்பாக ஹைப்பர்டென்ஷன் மற்றும்
  • கொலஸ்ட்ராலுக்கு நல்லது.
  • மூட்டு வலி, எலும்பு ஆரோக்கியத்திற்கு நல்லது
  • அனீமியா நோய்க்கு நல்லது.
  • காயங்களை விரைவாக ஆற்ற உதவும்
  • தைராய்டு சுரப்பியை சீராக்கும்.
  • மெலனின் உற்பத்தியை அதிகரித்து சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும்.
  • நோய் எதிர்ப்பு சக்தி தரும் மற்றும் தொற்றை எதிர்த்து போராட உதவும் என்று கூறியுள்ளார்.

  Also Read : குளிர்காலத்தில் காது வலியால் அவஸ்தைப்படுகிறீர்களா..? என்ன காரணம்..? சரி செய்யும் 10 வழிகள்..!

  இதனை தொடர்ந்து அப்படி பயன்படுத்தும் செப்பு பாத்திரத்தை எப்படி சுத்தம் செய்ய வேண்டும் என்ற குறிப்பும் கூறியுள்ளார்.

  செப்பு பாத்திரத்தை எப்படி சுத்தம் செய்ய வேண்டும்..?

  1 ) உப்பு மற்றும் எலுமிச்சை : எலுமிச்சையை பாதியாக நறுக்கி அதன் ஒரு பாதியை உப்பில் தொட்டு பாத்திரத்தில் தேய்த்து கழுவலாம்.

  2) வினிகர் மற்றும் உப்பு : ஒரு கப் வெள்ளை வினிகருடன் ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு கலந்து அதை ஒரு துணியில் தொட்டு பாத்திரத்தை தேய்க்கவும் அல்லது மூன்று கப் தண்ணீரை பாத்திரத்தில் ஊற்றி அதில் வினிகர் , உப்பு சேர்த்து அடுப்பில் கொதிக்க வைக்க அதன் கறை நீங்கி பளிச்சென மாறும்.

  செப்பு வாட்டர் பாட்டில் தண்ணீர் குடிக்க தினமும் பயன்படுத்துகிறீர்கள் எனில் வாரம் 2 முறை கழுவுவது நல்லது என கூறியுள்ளார் தீக்‌ஷா.

  Published by:Sivaranjani E
  First published:

  Tags: Ayurvedic medicine, Copper benefits, Drinking water