ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

கடுகு எண்ணெய் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..

கடுகு எண்ணெய் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

கடுகு எண்ணெய் இயற்கையாகவே உடலுக்கு கெடுதல் செய்யும் பாக்டீரியாக்களை கொள்ளும் தன்மையை உடையது. இதனால் காதில் ஏற்படும் தொற்றுகள் மற்றும் அரிப்பு ஆகியவற்றை சரி செய்ய பயன்படுத்தப்படும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நம் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் கடுகு எண்ணெயை வெறும் சமையலுக்காக மட்டுமே ஏற்றது என்று நினைத்திருப்போம். ஆனால் கடுகு எண்ணெயை சமையலில் தவிர வேறு பல விஷயங்களுக்கும் ஆரோக்கியமான வழிகளில் பயன்படுத்த முடியும். அவ்வாறு நம் உடலையும் அழகையும் மேம்படுத்தி கொள்ள கடுகு எண்ணெயை எந்தெந்த வழிகளில் பயன்படுத்தலாம் என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

முடி வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம் : தலைக்கு கடுகு எண்ணெய் பயன்படுத்தும் போது அதிகப்படியான மற்றும் ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. ஆனால் தலையில் கடுகு எண்ணெயை பயன்படுத்துவதை சிலர் அருவருப்பாக நினைக்கலாம். ஏனெனில் கடுகு எண்ணெயில் இருந்து வரும் வாசனை பலருக்கு குமட்டலை ஏற்படுத்தும். ஆனால் அதன் மூலம் கிடைக்கும் நன்மையை கருத்தில் கொண்டால் இந்த லேசான வாசனையை நம்மால் புறக்கணித்து விட முடியும். கடுகு எண்ணெய் தலையில் பயன்படுத்தும் போது, அந்தப் பகுதியில் உள்ள ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி தலைமுடியின் அடர்த்தியான வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் முடியின் வேர்க்கால்களுக்கு வலிமையை அதிகப்படுத்தி முடி உதிரும் பிரச்சனையிலிருந்து விடுதலை அளிக்கிறது.

காது சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு பயன்படுத்தலாம் : கடுகு எண்ணெய் இயற்கையாகவே உடலுக்கு கெடுதல் செய்யும் பாக்டீரியாக்களை கொள்ளும் தன்மையை உடையது. இதனால் காதில் ஏற்படும் தொற்றுகள் மற்றும் அரிப்பு ஆகியவற்றை சரி செய்ய பயன்படுத்தப்படும். மருத்துவ பொருட்களில் கடுகு எண்ணெய் சேர்க்கப்படுகிறது. மேலும் காதில் உள்ள அழுக்கை நீக்குவதற்கும் கடுகு எண்ணெய் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. உங்கள் காதுகளில் ஆரோக்கியத்தை அதிகபடுத்த விரும்பினால், ஒவ்வொரு காதிலும் ஐந்து சொட்டு கடுகு எண்ணெய் விட்டு காதில் உள்ள அழுக்கை நீக்கலாம். ஆனால் இதை செய்வதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

சரும ஆரோக்கியத்திற்கு உதவுகிறது : சருமத்திற்கு தேவையான முக்கிய வைட்டமின்கள், ஒமேகா 3 ஆகியவை கடுகு எண்ணெய்யில் இயற்கையாகவே உள்ளது. இதனால் நம் சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த கடுகு எண்ணெய் அதிக அளவில் உதவுகிறது. மேலும் முகப்பருக்களையும் அதனால் ஏற்பட்ட தழும்புகளையும் கடுகு எண்ணெய் பயன்படுத்தி மறைய செய்யலாம். இதனை தவிர்த்து சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை கொடுப்பதுடன், சருமத்தை மென்மையாகவும், வழுவழுப்பாகவும் மாற்றுகிறது. இரவில் நீங்கள் தூங்கச் செல்லும் போது உங்கள் முகத்தில் கடுகு எண்ணெயை தடவி காலை எழுந்ததும் கழுவி விடலாம்.

மசாஜ் செய்வதற்கு ஏற்றது : நீங்கள் மசாஜ் செய்ய விரும்பினால் கடுகு எண்ணெய் பயன்படுத்தி வலி அதிகம் உள்ள இடங்களில் மசாஜ் செய்ய வலி பறந்து போகும். தற்போது பிரபலமாக உள்ள மசாஜ் சென்டர்களில் கூட கடுகு எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.

சமையலுக்கு பயன்படுத்தலாம் : இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். கடுகு எண்ணெய் பயன்படுத்தி சமைக்கும் போது ஒட்டுமொத்தமாக உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அதில் உள்ள முக்கிய வைட்டமின்களும் மினரல்களும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்கின்றன. மேலும் பொதுவாக ஏற்படும் உடல் நலக் கோளாறுகளான தோல் பிரச்சனை, முடி உதிர்வு, மூட்டு வலி, மற்றும் தசை பிடிப்பு, இதய சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் போன்ற பல பிரச்சனைகளுக்கு கடுகு எண்ணெய் நல்ல நிவாரணியாக செயல்படுகிறது.

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Health, Lifestyle, Mustard oil