Home /News /lifestyle /

எடை இழப்பிற்கு உதவும் லெமன் டீ யில் இத்தனை நன்மைகள் இருக்கா? இதோ முழு விபரம்!

எடை இழப்பிற்கு உதவும் லெமன் டீ யில் இத்தனை நன்மைகள் இருக்கா? இதோ முழு விபரம்!

லெமன் டீயின் நன்மைகள்.

லெமன் டீயின் நன்மைகள்.

எலுமிச்சை தேநீர் அதாவது லெமன் டீயை நாம் பருகும் போது உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற பெரும் உதவியாக உள்ளது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
    தினமும் இரண்டு வேளை லெமன் டீ அருந்தினால் உடல் எடையை வேகமாகக் குறைத்து விடலாம். அதே சமயம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் மெட்டபாலிசத்தை அதிகரிப்பது போன்ற பல்வேறு நன்மைகளை நாம் பெற முடிகிறது.

    இன்றைக்கு மக்களிடையே மாறிவரும் உணவு பழக்கவழக்கங்கள், உடல் உழைப்பு இல்லாத வேலை போன்ற பல காரணங்களால் உடல் எடை அதிகரித்து விட்டது. இதோடு கூடவே பல உடல் உபாதைகளும் ஏற்படுவதால் எப்படியாவது உடல் எடையைக் குறைத்து விடுவதற்கு முயல்கின்றனர்.

    இதற்காக ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி மேற்கொள்வது, டயட் போன்றவற்றைப் பின்பற்றுகின்றனர். இதனுடன் உடல் எடையைக் குறைப்பிற்கு லெமன் டீ அருந்துவதையும் மக்கள் தினமும் கடைப்பிடிக்கின்றனர்.

    பொதுவாக எலுமிச்சையில் வைட்டமின் சி, வைட்டமின் பி 6, பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் உடலுக்கு ஆரோக்கியம் அளிப்பதோடு இயற்கையான முறையில் உடல் எடை குறைக்கவும் உதவியாக உள்ளது. எனவே தான் உயரத்திற்கு ஏற்ற உடல் எடையை வைத்திருக்க வேண்டும் என்ற முயற்சியில் இருப்பவர்கள் லெமன் டீ அருந்துகின்றனர். எப்படி லெமன் டீ உடல் எடைக்குறைப்பிற்கு உதவியாக உள்ளது மற்றும் அதன் நன்மைகள் குறித்து இங்கே அறிந்து கொள்வோம்.

    வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது:

    எலுமிச்சை தேநீர் அதாவது லெமன் டீயை நாம் பருகும் போது உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி வளர்சிதை மாற்றத்தைத் துரிதப்படுத்த உதவுகிறது. நாள் முழுவதும் நம்மைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் உதவியாக உள்ளது. மேலும் உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கவும், மாதவிடாய் நின்ற பிறகு பெண்களுக்கு இன்சுலின் எதிர்ப்பை மேம்படுத்தவும் உதவியாக உள்ளது.

    நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்:

    எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி உடலில் உள்ள திசுக்களின் வளர்ச்சிக்கு முக்கியமானதாக உள்ளது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதோடு உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் அபாயத்தை நிர்வகிக்கவும் உதவியாக உள்ளது.

    செரிமானப் பிரச்சனைக்குத் தீர்வு:

    எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் உடலில் உள்ள செரிமானத்தை மேம்படுத்துவதோடு சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலைப் பாதுகாக்கிறது. லெமன் டீ அருந்துவதால் உடலில் தேவையில்லாமல் உள்ள அதிகப்படியான சோடியத்தை வெளியேற்ற உதவியாக உள்ளது.

    பசியின்மைக்குத் தீர்வு:

    லெமன் டீயில் இஞ்சியைச் சேர்த்துப் பருகுவது உடலுக்குத் தேவையான அழற்சி எதிர்ப்புப் பண்புகளை நமக்கு வழங்குகிறது. குமட்டல் மற்றும் தசை வலியைக் குறைக்க உதவுவதோடு பசியை அடக்கும் மருந்தாகவும் உதவுகிறது. மேலும் இஞ்சியில் அதிக நார்ச்சத்து இருப்பதால் உடல் செரிமானத்திற்கு உதவுகிறது.

    மேலும் லெமன் டீயில் உள்ள பொட்டாசியம், மெக்னீசியம், சிங்க், காப்பர் போன்ற பல சத்துகள் போன்றவைக் கலந்து கிடைப்பதால் நமது மூளையை சுறுசுறுப்பாகிறது. எனவே லெமன் டீயைக் குடித்தால் நம் மனநிலையே புத்துணர்ச்சியாக வைத்திருப்பதோடு மன அழுத்தம் இன்றி நிம்மதியாக வைத்திருக்க உதவுகிறது.
    Published by:Saravana Siddharth
    First published:

    Tags: Lemon, Weight loss

    அடுத்த செய்தி