முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / சுகரை குறைக்கும் இன்சுலின் செடி பற்றி தெரியுமா?

சுகரை குறைக்கும் இன்சுலின் செடி பற்றி தெரியுமா?

இன்சுலின் செடியின் பயன்கள்

இன்சுலின் செடியின் பயன்கள்

Insulin Plant | இன்சுலின் தாவரத்தின் இலைகளிலிருந்து பெறப்படும் சாறு இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கிராமங்களில் மிகவும் இயல்பாக இன்சுலின் செடி கிடைக்கிறது. இஞ்சி, மஞ்சள் வகையைச் சேர்ந்த இந்த இன்சுலின் செடி காஸ்டஸ் பிக்டஸ் என்ற தாவர பெயரை கொண்டதாகும். நாம் இதை வீட்டுத் தோட்டங்களிலும் தொட்டிகளிலும் கூட வளர்க்கலாம். இது மலைக் காடுகளிலும் நீர் நிலைப் பகுதிகளிலும் 10 அடி உயரத்திற்கு மேல் வளரக்கூடியது. மாதவிடாயை முறைப்படுத்துகிறது. மேலும் கருப்பை நீர் கட்டிகளையும் இந்த கஷாயம் குணப்படுத்துகிறது.

இன்சுலின் செடியின் 2 இலைகளை சர்க்கரை நோயாளிகள் தினமும் பச்சையாக காலையில் சாப்பிட்டு வரலாம். இதன் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு வெகுவாக கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த இன்சுலின் செடியை வீட்டிலே வளர்த்து அவற்றை நாம் சர்க்கரை நோய்க்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

நோயாளிகளுக்கு இன்சுலின் செடியின் இலை உடலுக்கு தேவையான அதிக பயன்களைத் தருகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இன்சுலின் மருந்து பயன்படுத்த வேண்டும் என்பது கட்டாயமாகிவிட்டது. இதை முதல் நிலை சர்க்கரை நோயாளிகளை தவிர்த்து 2ஆம் நிலை சர்க்கரை நோயாளிகள் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வதைத் தவிர்த்து இன்சுலின் செடியின் இலை ஒன்றை தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

இந்த இலையைத் தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார்கள் ஐரோப்பிய, அமெரிக்க விஞ்ஞானிகள். ஆரம்ப நிலை சர்க்கரையாளர்களுக்கு காஸ்டஸ்பிக்டஸ் எனும் இன்சுலின் செடி அதிக பலன் தருகிறது என அவர்களின் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர்.

சர்க்கரை நோயாளிகளுக்கு இதைவிட மாற்று மருந்து ஏதும் இல்லை. இன்சுலின் மருந்து மாத்திரை வடிவிலோ, திரவ மருந்தாகவோ இன்னும் கண்டு பிடிக்கவில்லை. ஊசிமட்டுமே ஒரே வழியாகும். தாவரத்தின் இலைகளிலிருந்து பெறப்படும் சாறு இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதோடு இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆவலையும் படிப்படியாக குறைக்கிறது.

உடலில் இன்சுலின் சுரப்பு குறைபாடு ஏற்படும் போது அதற்கு இந்த இன்சுலின் இலை மருந்தாக அமைகிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதால் உடலில் நமைச்சல் ஏற்படுகிறது. சர்க்கரை உடல் உறுப்புகளை சிறிது சிறிதாக பாதிக்கும் இயல்பு கொண்டது. முதலில் கண்களை பாதிக்கும். பின்னர் நரம்புகளை பாதிக்கும். எனவே சர்க்கரை நோய்க்கு இந்த இன்சுலின் இலைகள் சிறந்த மருந்தாகிறது என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

First published:

Tags: Blood Sugar, Insulin Resistance, Plants