Home /News /lifestyle /

இஞ்சி டீ அருந்துவதால் இத்தனை நன்மைகளா ?

இஞ்சி டீ அருந்துவதால் இத்தனை நன்மைகளா ?

இஞ்சி டீ

இஞ்சி டீ

தசைப்பிடிப்புகள் மற்றும் மூட்டு வலிகளுக்குச் சிறந்த வீட்டுக் குறிப்பு இஞ்சி டீ தான்.

  • News18
  • Last Updated :
மாலையில் சூடாக இஞ்சி டீ அருந்தினால்தான் நாள் முழுமையடையும் எனப் பேசும் ஆளா நீங்கள் ? மன ஓய்வுக்காகவும், அதன் நறுமணத்திற்காகவும் அருந்திய உங்களுக்கு அதில் இருக்கும் பல நன்மைகள் தெரியுமா? உங்களுக்கே தெரியாமல் பல நன்மைகளை உடலுக்கு அளித்திருக்கிறீர்கள் என்னென்ன என்பதைக் காணலாம்.

குமட்டலை நீக்கும் :  பயணத்தின் போது வாந்தி எடுப்போருக்கு இஞ்சி நல்ல மருந்து. வாந்தி வருவது போன்ற அறிகுறி தெரிந்தாலே இஞ்சி டீ சூடாக அருந்தினால் அடங்கிவிடும்.

வயிறு பிரச்னை இன்றி இயங்கும் : இஞ்சி டீ அருந்துவதால் ஜீரண சக்தி அதிகரிக்கும். வயிறு மந்தமாக இருந்தாலும் சரி செய்யும். பசியை அதிகரிக்கும்.

இஞ்சி டீ : அஜீரணக் கோளாறு, வாயுப் பிரச்சனைகளை நீக்கக் கூடியது. தினமும் ஒரு கப் குடித்தால் கெட்டக் கொழுப்புகளும் கரையும்.


வலி நிவாரணி : இஞ்சி டீ அருந்தினால் நீங்கள் ரிலாக்ஸாக உணர்வதற்குக் காரணம் உங்கள் தசைப் பிடிப்புகளை இலகுவாக்குவதுதான். மூட்டு வலிகளையும் குறைக்கும். தசைப்பிடிப்புகள் மற்றும் மூட்டு வலிகளுக்குச் சிறந்த வீட்டுக் குறிப்பு இஞ்சி டீ தான்.

சுவாசப் பிரச்னைகள் நீங்கும் : தொற்றுக் கிருமிகளால் ஏற்படும் சளி, இருமல் அதனால் ஏற்படும் சுவாசப் பிரச்னை போன்றவற்றை இஞ்சி டீயில் சரி செய்யலாம்.

இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் : வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் அமீனோ ஆசிட் ஆகியவை இஞ்சி டீயில் நிறைந்திருப்பதால் அவை இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதனால் இதயக் கோளாறு பிரச்னைகளும் தடுக்கப்படும். இது கெட்ட கொழுப்புகளையும் தங்க விடாமல் கரைக்கும். மாரடைப்பு, பக்க வாதம் போன்ற பிர்சனைகள் இல்லாமல் வாழலாம்.

இஞ்சி டீ | Ginger Tea

மாதவிடாய் வயிற்று வலிக்கு நிவாரணி : மாதவிடாய் காலத்தில் அடி வயிறு இறுக்கிப் பிடித்து வலிக்கும். அப்போது வெதுவெதுப்பாக ஒரு கப் இஞ்சி டீ அருந்தினால் வலி குறையும். தசைகள் இலகுவாகும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் : இஞ்சியில் அதிக அளவிலான ஆண்டி ஆக்ஸிடண்ட் இருப்பதால் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்பெறச் செய்து , அதிகரிக்கவும் செய்யும்.

அழுத்தத்தை நீக்கும் : உங்களுக்கு பதற்றம், அழுத்தம் இருந்தால் சூடாக இஞ்சி டீ அருந்தினால் போதும். எல்லாம் பறந்து போகும். அதன் நறுமணம் மற்றும் மருத்துவ குணம் நம்மை இலகுவான மனநிலைக்கு கொண்டு செல்லும்.




லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Published by:Sivaranjani E
First published:

Tags: Ginger Tea

அடுத்த செய்தி