Home /News /lifestyle /

டிஜிட்டல் தடுப்பூசியும் அதன் பயன்பாடுகளும்!

டிஜிட்டல் தடுப்பூசியும் அதன் பயன்பாடுகளும்!

டிஜிட்டல் தடுப்பூசியின் பயன்பாடு என்ன?

டிஜிட்டல் தடுப்பூசியின் பயன்பாடு என்ன?

digital vaccine | டிஜிட்டல் வாக்சின் எனப்படுவது 2 முதல் 18 வயதிலான குழந்தைகளுக்கு உணவு பழக்கத்தை சீர் படுத்த உதவுகிறது என சோதனைகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

    மூளையில் சில தேவையான எதிர்வினைகளை ஏற்படுத்தி அதன் மூலம், மனிதரின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி நோயை தடுக்கும் வகையிலான டிஜிட்டல் வேக்சின் எனப்படுபவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் தடுப்பூசி எனப்படுவது என்ன? அதன் பயன்பாடுகள் என்ன? என்பது குறித்து தெரிந்துக் கொள்ளலாம்.

    உடலில் நேரடியாக மருந்தை செலுத்தி நோயை தடுக்கும் தடுப்பூசிகள் தான் நமக்கு தெரிந்தவை. ஆனால் மருந்துகள் ஏதும் இல்லாமல் உடலில் இருக்கும் நோயை கண்டறிந்து அவற்றை குணப்படுவதுதான் டிஜிட்டல் வேக்சின். அமெரிக்க வாழ் தமிழர் பார்கவ் ஸ்ரீ பிரகாஷ் 12 ஆண்டுகள் உழைத்து, டிஜிட்டல் வாக்சினுக்கான காப்புரிமையை அமெரிக்கா காப்புரிமை சங்கத்திடமிருந்து பெற்றுள்ளார்.

    Fooya எனும் கேமிங் ஆப் தரவிறக்கம் செய்து, அதில் விளையாடும் போது குழந்தைகளின் நிஜ வாழ்வில் உணவுப் பழக்கம் குறித்த நேர்மறையான விளைவுகள் ஏற்படுவதாக பார்கவ் ஸ்ரீ பிரகாஷ் கூறுகிறார். இது மெடாவர்ஸ் எனப்படும் மெய்நிகர் உலகில் விளையாடப்படும் விளையாட்டுகள் ஆகும். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு avatar இருக்கும்.

    குழந்தை அந்த ஆப்பில் விளையாடும் போது தேர்ந்தெடுக்கும் உணவுகளுக்கு ஏற்ப அந்த avatarல் விளைவுகள் ஏற்படும். இதை தொடர்ந்து விளையாடும் போது குழந்தையின் நிஜ வாழ்க்கையில் உணவுப் பழக்கத்தில் மாற்றங்கள் ஏற்படுவதாக பார்கவ் ஸ்ரீ பிரகாஷ் கூறுகிறார்.

    தற்போது குழந்தைகளிடையே சர்க்கரை நோய் அதிகமாக காணப்படுகிறது. எனவே குழந்தைகளில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வகையிலான உணவு பழக்கங்களை உருவாக்க Fooya ஆப் உதவும் என வி.எச்.எஸ் மருத்துவமனையின் உட்சுரப்பியல் மருத்துவர் உஷா ஸ்ரீராம் கூறுகிறார்.

    பார்கவ் ஸ்ரீ பிரகாஷ்


    Also see... வயதாகும் அறிகுறிகளை அகற்றும் போடாக்ஸ் சிகிச்சை பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்...

    இந்த ஆப் மூலம் சென்னை வி.எச்.எஸ் மருத்துவமனையில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உணவுப் பழக்க கட்டுப்பாடுகள் ஏற்படுத்த முடியுமோ என கண்டறிய சோதனைகள் தொடங்கவுள்ளன.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Chennai, Vaccine

    அடுத்த செய்தி