• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • Yoga Day 2021 : தம்பதிகளுக்குள் நெருக்கத்தை ஏற்படுத்தும் யோகாசனங்கள்..!

Yoga Day 2021 : தம்பதிகளுக்குள் நெருக்கத்தை ஏற்படுத்தும் யோகாசனங்கள்..!

யோகா

யோகா

உங்கள் பார்ட்னருடன் இணைந்து செய்யக்கூடிய வகையில் உள்ள சில யோகா பயிற்சிகள் உள்ளன. இவை உங்களுக்கு இடையிலான நெருக்கத்தை அதிகப்படுத்துவதுடன், ஏற்கனவே இருக்கும் மன அழுத்தத்தில் இருந்து வெளியே வருவதற்கும் மிகவும் உபயோகமாக இருக்கும்.

  • Share this:
கொரோனா காலம் ஏற்படுத்தியிருக்கும் மன அழுத்தம் மற்றும் பொருளாதார இழப்புகள் தம்பதிகளுக்கு இடையிலான பரிசத்தையும், நெருக்கத்தையும் குறைத்திருக்கிறது. இதில் இருந்து விடுபடுதற்கு வெளியில் செல்லலாம் என்றால், அதற்கான நேரமும் இப்போது இல்லை. இந்த சூழலில் இருந்து விடுபட எண்ணியிருக்கும் தம்பதிகள் என்றால், நீங்கள் செய்ய வேண்டியது யோகா. தனிப்பட்ட முறையில் யோகா செய்வது என்பது உங்களுக்கு விருப்பம் இல்லாமல் கூட இருக்கலாம்.

ஆனால், உங்கள் பார்ட்னருடன் இணைந்து செய்யக்கூடிய வகையில் உள்ள சில யோகா பயிற்சிகள் உள்ளன. இவை உங்களுக்கு இடையிலான நெருக்கத்தை அதிகப்படுத்துவதுடன், ஏற்கனவே இருக்கும் மன அழுத்தத்தில் இருந்து வெளியே வருவதற்கும் மிகவும் உபயோகமாக இருக்கும். அதற்கு முன்பு தம்பதிகள் இருவர் இணைந்து செய்தால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

நம்பிக்கை

தம்பதிகளுக்கு இடையில் மிகவும் உறுதியாக இருக்க வேண்டியது நம்பிக்கை. எதற்காகவும் நான் இருக்கிறேன் என்ற வார்த்தையும், அணுகுமுறையும் இருவருக்கும் இடையில் எப்போதும் இருக்க வேண்டும். உடலோடு உரசிக் கொண்டு இருவரும் யோகா பயிற்சி செய்யும்போது இயல்பாகவே ஒருவர் மீது ஒருவருக்கு கரிசனமும், பாசமும் வெளிப்படும். பயிற்சிகளின்போது பார்டனரை தாங்கும்போது, இருவருக்கும் உணர்ச்சிகள் சங்கமிக்கும். அப்போது, மனம் திறந்து பேசுவதற்கு உரிய இடமாகும் மாறும்.

நெருக்கம்

உடலுடன் உடல் மோதிக்கொண்டு யோகா செய்யும்போது விளையாட்டுகளும், கிண்டல்களும் தம்பதிகளுக்குள் இயல்பாக வெளிப்படும். ஆசையாக பார்டனரை சுமக்கும்போது, உடல் உறுப்புகள் மீது மோதிக்கொள்ளும்போது நெருக்கத்தை ஏற்படுத்தும். மனம் ஒன்றிய நிலையில் பரிசம் பரவசமாக மாறும். தம்பதிகளுக்குள் மகிழ்ச்சி மேலோங்கும். இருவரும் இணைந்து யோகா செய்யும்போது சாத்தியப்படும்.



திருப்தி

சாதாரண நாட்களில் இருவரும் உடலுறவு கொள்ளும்போது தம்பதிகளுக்குள் திருப்தி ஏற்படாமல் போகலாம். ஒருவரின் ஆசை உடலளவில் பூர்த்தியாகி இருக்கலாம். ஆனால், எண்ணத்தில் ஒரு வெற்றிடம் இருந்து கொண்டே இருக்கும். அதனை நிரப்ப வேண்டும் என்றால், தம்பதிகள் இருவரும் ஒன்றாக இணைந்து யோகா செய்யும்போது, அந்த உணர்ச்சிக்கான அறிகுறி தெரியும். ஏனென்றால், யோகா செய்யும்போது விளையாட்டாக ஒருவரை ஒருவர் தொடுவீர்கள். அப்போது, ஏற்படும்ஆசை, பாசம், நெருக்கம் ஆகியவை அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கான உணர்ச்சியை இருவருக்குள்ளும் பற்ற வைக்கும். பிறகு, தம்பதிகள் முழு திருப்தியையும் உணர முடியும்.

ஆரோக்கியம்

இருவரும் இணைந்து யோகா செய்யும்போது, ஒருவர் மீதான ஆரோக்கியம் குறித்த அக்கறை எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். உணவு முறை பழக்கம், வாழ்க்கை முறையை மாற்றியமைப்பதில் இயல்பாக இருவரின் கவனமும் மேலோங்கும். உடல் குறித்த அக்கறை ஏற்படும்போது, நெருக்கமும், பாசமும் எப்போதும் பிணைந்து இருக்கும். தேவையற்ற குழப்பங்கள் ஏற்படாது. என்ன செய்ய வேண்டும் என்பதில் இருவரும் தெளிவாக இருப்பீர்கள்.



தம்பதிகள் செய்ய வேண்டிய யோகாசனம்

மூச்சப்பயிற்சி

தம்பதிகளுக்கான மூச்சுப் பயிற்சி என்பது முதுகுபுறத்தில் மோதி இருக்கும் வகையில் நெருக்கமாக இருவரும் அமர்ந்து கொள்ள வேண்டும். ஒருவர் மூச்சை உள்ளிழுக்கும்போது, ஒருவர் மூச்சை வெளியே விட வேண்டும். 5 நிமிடங்களுக்கு தொடர்ந்து இதனை செய்யலாம். வார்த்தையின்றி பார்ட்னரின் எண்ண ஓட்டத்தை புரிந்து கொள்ளவும் இந்த பயிற்சி உதவும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நாற்காலி நிலை

நாற்காலி போன்று முழங்காலை மடித்து இருவரும் நிற்க வேண்டும். தனித்தனியாக இல்லாமல் முதுகுபுறத்தில் நெருக்கமாக இணைந்து நிற்க வேண்டும். கைகளை தொடை மீது வைத்துக்கொள்ளுங்கள். 5 முதல் 10 முறை மூச்சுப் பயிற்சி செய்தபிறகு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் முயற்சிக்கலாம். கால் எலும்பு, தொடை, முதுகு பலப்படும். தம்பதிகளுக்குள் நெருக்கமும் மேலோங்கும்.



 

பார்ட்னர் டிவிஸ்ட்

மூச்சுப் பயிற்சிக்கு அமர்ந்ததுபோல் முதுகுபுறத்தில் இணைந்து இருக்குமாறு நெருங்கி அமர்ந்து கொள்ளுங்கள். கால் பாதங்கள் தொடை மீது இருக்குமாறு மாற்றி வைத்துக்கொள்ளுங்கள். பின்னர், உங்கள் கைகளை பின்னோக்கி கொண்டு சென்று பார்டனரின் தொடை மீது வைக்க வேண்டும். அதேபோல், அவருடைய கைகளை உங்கள் தொடை மீது வைக்க வேண்டும். இந்த நிலையில், ஒருவர் மூச்சை இழுக்கும்போது இன்னொருவர் மூச்சை விடுங்கள். தொடர்ந்து 5 முறை செய்துவிட்டு இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும்.

Yoga Day 2021: கருவுறுதலுக்கு உதவும் யோகாவின் நன்மைகள்.! 5 சிறந்த ஆசனங்கள்

டபுள் டவுன்வார்டு நிலை

பார்ட்னரில் ஒருவர் விரிக்கப்பட்ட விரிப்பில் கை, கால்களுக்கு இடையே குறிப்பிட்ட இடைவெளி விட்டு நீண்ட வாக்கில் குனிய வேண்டும். அவருக்கு முன்பு, மற்றொருவர் இரு கைகளையும் நிலத்தில் ஊன்று, ஏற்கனவே குனிந்திருக்கும் தன் பார்னரின் முதுகில் இரண்டு கால்களை வைத்து, குனிந்து கொள்ள வேண்டும். இந்த நிலையில், 5 முதல் 10 மூச்சுப் பயிற்சிகள் எடுத்த பிறகு இயல்பு நிலைக்கு திரும்பலாம்.



படகு போஸ்

ஒரே தரை விரிப்பில் இருவரும் எதிரெதிராக அமர்ந்து கொள்ள வேண்டும். பின்னர், இருவரும் கால்களை மேல்நோக்கியவாறு உயர்த்தி, பாதங்களை ஒன்றாக இணைத்துக்கொள்ள வேண்டும். அதேநேரத்தில் தொடைக்கு நேராக கைகளை நீட்டி மிகவும் இறுக்கமாக பிடித்துக்கொள்ளுங்கள். தொலைவில் இருந்து பார்க்கும்போது படகின் நடுவே இருக்கும் பாய்மரத்தைப் போல் இருவரும் அமர்ந்திருக்கும் நிலை இருக்கும். கை, கால் எலும்புகளில் இருக்கும் இறுக்கம் குறைந்து இலகுவாக இருப்பதற்கு இந்த பயிற்சி உதவும். தம்பதிகளின் அன்யோனியத்தையும், நம்பிக்கையையும் பலப்படுத்தும் மிக முக்கியமான பயிற்சியாகும்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: