முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / PCOS உள்ள பெண்களுக்கு பெர்ரீ பழங்கள் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா..? கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை...

PCOS உள்ள பெண்களுக்கு பெர்ரீ பழங்கள் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா..? கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை...

பெர்ரி

பெர்ரி

PCOS Care | PCOS சிக்கல் உள்ள ஒருவர் தங்களது கோளாறை நிர்வகிக்க உதவும் டயட்டை பின்பற்றுவது அவசியம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS) என்பது 10 பெண்களில் 2 -3 பேருக்கு காணப்படும் பொதுவான ஹார்மோன் கோளாறு ஆகும். PCOS பாதித்த பெண்கள் ஒழுங்கற்ற மாதவிடாய், எளிதில் கருவுறாமை, எடை அதிகரிப்பு, நீரிழிவு, இதய நோய்கள், மனச்சோர்வு மற்றும் முடி உதிர்தல் உள்ளிட்ட பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள்.

PCOS சிக்கல் உள்ள ஒருவர் தங்களது கோளாறை நிர்வகிக்க உதவும் டயட்டை பின்பற்றுவது அவசியம். ஆனால் PCOS தொடர்பான பல விஷயங்கள் இன்டர்நெட்டில் உலா வருவதால் டயட்டில் உண்மையில் எதை சேர்க்க வேண்டும், சேர்க்க கூடாது என்பதில் குழப்பம் ஏற்படுகிறது. PCOS உள்ளவர்கள் தங்கள் டயட்டில் பழங்களை அறவே சேர்க்க கூடாது என்ற தகவல் பலரது குழப்பியுள்ளது. ஆனால் இது தவறு என்கிறார் பிரபல் ஊட்டச்சத்து நிபுணர் Martha Mckittrick. PCOS-க்கு பழங்கள் பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும் என்று தனது சமீபத்திய இன்ஸ்டா போஸ்ட்டில் கூறி இருக்கிறார்.

பழங்களில் ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, ராஸ்பெர்ரி மற்றும் ப்ளாக்பெர்ரி போன்ற பெர்ரிக்கள் PCOS-ஐ நிர்வகிக்க பெரிதும் உதவுகின்றன என்பது நிபுணர்களின் நம்பிக்கை. இதனிடையே தன்னுடைய இன்ஸ்டாவில் பெர்ரிக்கள் பற்றி Martha குறிப்பிட்டுள்ளார். பெர்ரிக்களில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் ஃபைபர் நிரம்பியுள்ளதாக கூறி இருக்கிறார். அதிலும் குறிப்பாக ஃப்ரெஷ்ஷாக இருக்கும் பெர்ரிக்கள் சிறந்த ஆரோக்கிய நன்மைகளை அளிக்கின்றன என்று கூறி இருக்கிறார்.

Read More : மஞ்சள் அதிகம் சாப்பிட்டால் என்ன நேரிடும்.? இவர்கள் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது - எச்சரிக்கும் சுகாதார நிபுணர்கள்.!

PCOS இருப்பவர்கள் பெர்ரிக்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பட்டியலிட்டுள்ளார். இது பற்றிய இன்ஸ்டா போஸ்ட்டில், "எனது மந்திரங்களில் ஒன்று, உங்கள் டயட்டில் நீங்கள் என்ன உணவைச் சேர்க்கலாம் மற்றும் எந்த உணவுகளை நீங்கள் கட்டாயம் நீக்க வேண்டும் என்பதை பற்றி சிந்திப்பது. ஊட்டச்சத்து என்று வரும் போது பெர்ரிக்கள் எனக்கு மிகவும் பிடித்தவை. மேலும் இவை பி.சி.ஓ.எஸ்-ஐ நிர்வகிப்பதில் பயனுள்ளவை " என்று கூறி இருக்கிறார்.


மேலும் பெர்ரிக்கள் இன்சுலின் எதிர்ப்பு (Insulin resistance), அழற்சி (Inflammation), குடல் ஆரோக்கியம் (Gut health) உள்ளிட்ட PCOS ஏற்படுவதற்கான முக்கிய மூன்று காரணிகளை மேம்படுத்த உதவுகின்றன. PCOS இருப்பவர்கள் இனிப்புகளை சாப்பிட வேண்டும் என்று ஏங்குகிறர்களா.! நேச்சுரல் கேண்டியான பெர்ரிக்களை முயற்சி செய்து பாருங்கள் என்று கூறி இருக்கிறார். பெர்ரிக்களில் ஃபைபர் அதிகம் உள்ளது, இது ரத்தத்தில் சர்க்கரையை உறிஞ்சுவதை மெதுவாக்குகிறது மற்றும் சாப்பிட்ட பிறகு இன்சுலின் வெளியீட்டைக் குறைக்கிறது, இது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த உதவுகிறது. அதே போல PCOS உள்ள பெரும்பாலான மக்களில் இன்சுலின் எதிர்ப்பு ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது.

PCOS விஷயத்தில் நாள்பட்ட அழற்சியானது அண்டவிடுப்பின் சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.பெர்ரிக்களில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள், பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் ஆகியவை உடலை ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்கின்றன மற்றும் வீக்கத்தை எதிர்த்து போராடுகின்றன.

ஊட்டச்சத்து மற்றும் வாழ்க்கை முறை இன்சுலின் எதிர்ப்பை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று குறிப்பிட்டு உள்ளார். பிசிஓஎஸ் உள்ள பல பெண்களுக்கு குடல் நுண்ணுயிரி (அதிக மோசமான பாக்டீரியா) உள்ளது. இது PCOS-ஐ தூண்ட கூடும். பெர்ரிக்களில் இருக்கும் கரைய கூடிய நார்ச்சத்து பெருங்குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு உணவளிக்கிறது மற்றும் குடலில் பாக்டீரியா சமநிலையை மேம்படுத்துகிறது என்றும் நிபுணர் Martha கூறியுள்ளார்.

First published:

Tags: Health, PCOS, PCOS Diet