Home /News /lifestyle /

தொப்பை கொழுப்பைக் குறைக்கும் சுரைக்காய் ஜூஸ்..! வெயில் காலத்தில் நல்லா ஒர்க்அவுட் ஆகும்..டிரை பண்ணி பாருங்க..!

தொப்பை கொழுப்பைக் குறைக்கும் சுரைக்காய் ஜூஸ்..! வெயில் காலத்தில் நல்லா ஒர்க்அவுட் ஆகும்..டிரை பண்ணி பாருங்க..!

சுரைக்காய் ஜூஸ்.

சுரைக்காய் ஜூஸ்.

சிறந்த எடை இழப்பு முடிவுகளை பெற நீங்கள் காலையில் வெறும் வயிற்றில் இந்த சுரைக்காய் ஜூஸை குடிப்பது நல்லது. மேலும், சாறு மிக வேகமாக ஆக்சிஜனேற்றம் அடையும் என்பதால் ஜூஸை நீண்ட நேரம் வைத்து குடிக்கக்கூடாது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
உடல் எடையை குறைக்க பல்வேறு வழிகள் இருக்கின்றன. உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, உணவு முறை என பல உள்ளன. ஆனால், இவற்றை எல்லாம் தவிர்த்து மிக எளிதில் அதிலும் இயக்கையான முறையில் உங்கள் உடை எடையை குறைக்க ஒரு வழி இருக்கிறது. கூடுதல் கொழுப்பை வேகமாக குறைக்க சுரைக்காய் நிச்சயமாக உதவும் என்று ஒரு ஆராய்ச்சியில் தகவல் வெளியாகியுள்ளது.

சுரைக்காய் ஜீரணத்தை எளிதாக்குவது மட்டுமல்ல, விரைவான கொழுப்பு இழப்புக்கும் வழிவகை செய்கிறது. இந்திய சமையலறைகளில் காணப்படும் பொதுவான காய்கறிகளில் சுரைக்காயும் ஒன்று. மேலும் இந்த காய்கறியில் எண்ணற்ற நன்மைகள் இருப்பதால் இதனை நமது வழக்கமான உணவில் சேர்த்துக்கொள்வது மிக அவசியம்.

காய்கறி மட்டுமல்ல, அதன் சாறும் கூட கூடுதல் கொழுப்பைக் குறைப்பதற்கு சிறந்ததாகக் கருதப்படுகிறது. சுரைக்காய் சாற்றை ஒரு சக்திவாய்ந்த சுகாதார பானம் என்று அழைப்பது சரியாக இருக்கும். இதில், தண்ணீர் மற்றும் ஃபைபர் ஏராளமாக உள்ளது. எடை இழப்பு தவிர, அமிலத்தன்மை, அஜீரணம், வயிற்றுப் புண்கள் மற்றும் மலச்சிக்கல் ஆகியவற்றிற்கு சிகிச்சையளிக்க இது ஒரு சிறந்த மருந்தாக செயல்படுகிறது. சுரைக்காயில் சுமார் 92% தண்ணீர் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது. இது உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்க இது உதவுகிறது.

ஆர்மேனிய வெள்ளரிக்காயின் மருத்துவ குணங்களைப் பற்றிய தெரியுமா..? வெயில் காலத்தில் தினமும் சாப்பிடலாம்..!

சுரைக்காயில் எவ்வளவு கலோரி உள்ளது?

கலோரி உள்ளடக்கத்தைப் பொறுத்தவரை, 100 கிராம் சுரைக்காயில் சுமார் 15 கலோரிகளும், வெறும் 1 கிராம் கொழுப்பு மட்டுமே உள்ளன. இதில் நிறைவுற்ற கொழுப்பு மற்றும் கொலஸ்டிரால் மிகவும் குறைவாக உள்ளது. இந்த காய்கறி அனைத்து நீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒன்று என்பதால் உங்களை நீண்ட நேரம் பசியின்மையோடு முழுமையாக வைத்திருக்க உதவுகிறது. கடந்த 2012ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆசிய பசிபிக் ஜர்னல் ஆஃப் டிராபிகல் மெடிசினில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, விலங்குகள் மீது நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், எலிகளின் எடை அதிகரிப்பைக் குறைக்க சுரைக்காய் உதவியது என்று கண்டறியப்பட்டுள்ளது.இருப்பினும், இதுபோன்ற எந்த ஆராய்ச்சியும் இதுவரை மனிதர்களில் நடத்தப்படவில்லை. உடலில் இருந்து கொழுப்பை எரிக்கத் தேவையான நீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் சுரைக்காயில் நிறைந்துள்ளது. இதுதவிர இந்த காய்கறியில் வைட்டமின் சி, வைட்டமின் பி, வைட்டமின் கே, வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, இரும்பு, ஃபோலேட், மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன.

சசுரைக்காய் எடை இழப்பு திட்டத்திற்கு ஒரு சிறந்த திட்டமாக அமைகிறது. ஏனெனில் ஆற்றல் அடர்த்தி குறைவாக இருக்கும் உணவு எடை இழக்கவும், பராமரிக்கவும் உதவக்கூடும் என்று மே 2012 இல் அகாடமி ஆஃப் நியூட்ரிஷன் அண்ட் டயட்டெடிக்ஸ் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வாரத்தில் குறைந்தது 4 நாட்களாவது சுரைக்காய் சாற்றை வெறும் வயிற்றில் இதை உட்கொள்வது வயிற்று கொழுப்பை வேகமாக குறைக்க உதவும் என்று கூறப்படுகிறது. ஆனால் வயிற்றுப் பகுதியில் உள்ள கூடுதல் பவுண்டுகளை குறைக்கும் வேலையை சுரைக்காய் ஜூஸ் மட்டும் செய்யாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவை கடைப்பிடிப்பதில் இருந்து உடல் பயிற்சிகள் செய்வது வரை ஒட்டுமொத்தமாக ஒரு நல்ல எடை இழப்பு முறையைப் பின்பற்றுவது முக்கியம்.எப்போது உட்கொள்ள வேண்டும்?

சிறந்த எடை இழப்பு முடிவுகளை பெற நீங்கள் காலையில் வெறும் வயிற்றில் இந்த சுரைக்காய் ஜூஸை குடிப்பது நல்லது. மேலும், சாறு மிக வேகமாக ஆக்சிஜனேற்றம் அடையும் என்பதால் ஜூஸை நீண்ட நேரம் வைத்து குடிக்கக்கூடாது. உடனடியாக உட்கொள்ள வேண்டும். சுரைக்காய் அரைத்து சல்லடை மூலம் சாற்றை வடிகட்டக்கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதனால் நீங்கள் நார்ச்சத்தை இழக்க நேரிடும். ஏனெனில் கூடுதல் கிலோவைக் குறைப்பதற்கு அவை மிக முக்கியமாகும். அதன் சுவையை அதிகரிக்க சுரைக்காயுடன் எலுமிச்சை மற்றும் புதினாவை சேர்த்து அரைத்து குடிக்கலாம்.

இருப்பினும், சுரைக்காய் ஜூஸை அதிக அளவில் குடிப்பதால் குமட்டல், புண்கள், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி போன்ற பல மோசமான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம். எனவே, ஆபத்தை குறைக்க நல்ல சுரைக்காயில் ஜூஸ் போட்டு குடிக்க வேண்டும். கசப்பான சுவை கொண்ட ஒன்றை உட்கொள்ளக்கூடாது. சுரைக்காய் சாற்றின் கசப்பான சுவை அதில் உள்ள கக்கூர்பிடசின் சேர்மங்களால் ஏற்படுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இது மக்களுக்கு நச்சுத்தன்மையை உருவாக்குகிறது.

எவ்வளவு உட்கொள்ள வேண்டும்?

ஒரு நாளில் மூன்று அவுன்ஸுக்கு அதிகமாக (தோராயமாக 88 மில்லி) சுரைக்காய் சாற்றை ஒருவர் குடிக்கக் கூடாது என்று சர்வதேச ஊட்டச்சத்து, மருந்தியல், நரம்பியல் நோய்கள் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Belly Fat Reduce, Bottle Grourd, Fitness

அடுத்த செய்தி