ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

Bedtime Stretches : தூங்கி எழுந்ததும் இந்த ஸ்ட்ரெட்சுகளை செய்தால் உடல் அசதி நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும்..!

Bedtime Stretches : தூங்கி எழுந்ததும் இந்த ஸ்ட்ரெட்சுகளை செய்தால் உடல் அசதி நீங்கி புத்துணர்ச்சி கிடைக்கும்..!

படுக்கை நேர ஸ்ட்ரெச்சஸ்

படுக்கை நேர ஸ்ட்ரெச்சஸ்

நமக்கு இருக்கும் கவலை மற்றும் ஸ்ட்ரெஸ் போன்றவற்றில் இருந்து விடுதலை தருவதாக பயிற்சிகள் அமையும். நம் தசைகளை ரிலாக்ஸ் செய்யவும், உடல் உறுப்புகளுக்கு தளர்வான சூழலை உருவாக்கவும் பயிற்சி உதவிகரமாக இருக்கும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

மனிதனுக்கு நல்ல தூக்கம் என்பது 7 முதல் 8 மணி நேரங்களுக்கு இருக்க வேண்டும். இரவு நன்றாக தூங்கி எழுவது மட்டுமல்லாமல் காலையில் நம்மை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள பல்வேறு பயிற்சிகளை நாம் ரெகுலராக செய்ய வேண்டும். அதே சமயம் காலையில் எழுந்தவுடன் குளிக்கச் செல்வது சிலருக்கு புத்துணரச்சியை தரும். இரவில் தான் ஒரு மனிதனின் உடல் முழுமையாக ரிலாக்ஸ் அடையும்.

நமக்கு இருக்கும் கவலை மற்றும் ஸ்ட்ரெஸ் போன்றவற்றில் இருந்து விடுதலை தருவதாக பயிற்சிகள் அமையும். நம் தசைகளை ரிலாக்ஸ் செய்யவும், உடல் உறுப்புகளுக்கு தளர்வான சூழலை உருவாக்கவும் பயிற்சி உதவிகரமாக இருக்கும்.

முன்னோக்கி உடலை மடக்குவது

படத்தில் இருக்கிறபடி தரை அல்லது மேட் மீது அமர்ந்து கால் இரண்டையும் நேராக நீட்டிக் கொள்ள வேண்டும். இப்போது முதுகை வளைத்து முழங்கால் பகுதிக்கு கொண்டு வருவதுடன், கைகள் இரண்டையும் நீட்டி கணுக்கால் பகுதிக்கு கொண்டு வர வேண்டும். இது உடலுக்கு ரிலாக்ஸ் தருவதுடன், உடலின் செரிமான சக்தியை தூண்டுகிறது. ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்.

குழந்தை போல படுத்துக் கொள்வது

குப்புறப் படுத்து நம் கைகள் இரண்டையும் முன்னோக்கி நீட்டிக் கொண்டு, முகத்தை தரையில் வைத்துக் கொள்ள வேண்டும். முழங்கால்களை மடக்கி, தரையில் சர்ப்போர்ட் கொடுத்து கவிழ்ந்து கொள்ள வேண்டும். இரண்டு முதல் 5 நிமிடங்கள் வரை இப்படி இருப்பதன் மூலமாக உடலுக்கு நல்ல ரிலாக்ஸ் கிடைக்கும்.

நெடுஞ்சான்கிடையாக படுத்துக் கொள்வது

காலையில் உடற்பயிற்சிகளை செய்து முடித்த பிறகு, உடலுக்கு போதுமான ஓய்வு கொடுக்க இப்படி நெடுஞ்சான்கிடையாக படுத்துக் கொள்ளலாம். உடலில் உள்ள முக்கியமான தசைகளுக்கு இது வலுவூட்டும். நாள் முழுவதும் நம் உடலுக்கு ரிலாக்ஸ் கொடுக்கும் அளவுக்கு செல்களை தயார் படுத்தும். சுமார் இரண்டு நிமிடங்கள் இந்த போஸில் இருப்பது போதுமானது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் 4 யோகாசனங்கள்... 

பீஜியான் ஸ்ட்ரெச்

நாள் முழுவதும் சேரில் அமர்ந்து வேலை செய்யக் கூடியவர்களுக்கு இந்த போஸ் மிகவும் உதவியாக இருக்கும். ஒரு காலை பின்னோக்கி நீட்டிக் கொண்டு, மற்றொரு காலின் பலத்தில் அமர்ந்து கொள்ள வேண்டும். கைகள் இரண்டையும் தரையில் நேராக வைத்துக் கொண்டு, உடல் நேராக நிமிர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும். இதே போஸை இரண்டு காலையும் மாற்றி, மாற்றி 5 நிமிடங்கள் செய்தால் போதுமானது.

ஸ்பிங்க்ஸ்

படத்தில் இருப்பதைப் போல குப்புற படுத்துக் கொண்டு முதுகையும், தலையையும் மேல்நோக்கி தூக்கி கொள்ள வேண்டும். முதுகெலும்பு மற்றும் தசைகளுக்கு இது முழுமையான ரிலாக்ஸ் கொடுக்கும். நமது இடுப்பு மற்றும் தொடைப்பகுதிகள் வலுவடையும். 5 நிமிடங்கள் இந்த பயிற்சியை செய்தால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Stretches