தூக்கமின்மைக்கும், படுக்கையறைக்கும் தொடர்பு உண்டு தெரியுமா?

Sivaranjani E | news18
Updated: January 12, 2019, 6:24 PM IST
தூக்கமின்மைக்கும், படுக்கையறைக்கும் தொடர்பு உண்டு தெரியுமா?
மாதிரிப் படம்
Sivaranjani E | news18
Updated: January 12, 2019, 6:24 PM IST
நாள் முழுவதும் உழைத்த களைப்பை போக்க தூக்கம் மிக முக்கியம். ஆனால் வேலையின் அழுத்தம் சிலரை தூக்கமின்மைக்கு தள்ளுகிறது. இதை சரிசெய்ய வீட்டின் படுக்கை அறையில் சில மாற்றங்களைச் செய்தால் போதும். தூக்கமின்மை பிரச்சனை பறந்து ஓடும். அறிவியல் வல்லுநர்கள் படுக்கை அறையின் நறுமணமும், வண்ணமும் உடலளவிலும் மனதளவிலும் மாற்றத்தை ஏற்படுத்துவதாக கூறுகின்றனர். எவ்வாறு என்பதைக் கீழே காணலாம் .வண்ணங்களில் மாற்றம் வேண்டும்

படுக்கை அறையின் வண்ணங்கள் மற்றும் அலங்காரங்கள் நம் தூக்கத்திற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. அதாவது கண்களில் உள்ள காங்லியன் செல்கள் (ganglion cells) நிறங்களை உள்வாங்கி மூளைக்கு செலுத்துகிறது. அதன் அடிப்படையில் நம் எண்ணங்களும் செயல்களும் அமைகின்றன. இதனால் நம் தூக்கமும் பாதிப்பிற்குள்ளாகிறது. எனவே சரியான வண்ணங்களை தேர்வு செய்வது நிம்மதியான உறக்கத்திற்கு வழிவகை செய்கிறது.
அதேபோல் வண்ணங்கள் நம் தூக்க நேரத்தையும் நிர்ணயிக்கிறது. அதற்கும் காங்லியன் செல்களே காரணம்.நீல நிறம் உங்கள் உறக்கத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இரவின் ரம்மியத்தைக் கண் முன்னே காட்சிபடுத்துகிறது. அதுமட்டுமன்றி நீலம் குளிர் மற்றும் அமைதியின் பிரதிபளிப்பு என்பதால்  மனதளவில் தூக்கத்திற்கு உங்களைத் தயார்படுத்துகிறது.

ஒரு ஆய்வின் மூலம்,  இந்த நீல நிறம் குறைந்தது 7 மணி நேரம் 52 நிமிடங்கள் உங்கள் தூக்கத்திற்கு உத்திரவாதம் அளிக்கும் என தெரியவந்துள்ளது. இது உங்கள் இதயத் துடிப்பைச் சீராக்கி ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. இதனால்  மகிழ்ச்சியுடனும் புத்துணர்வுடனும் காலை விடியல் அமையும்.பச்சை மற்றும் மஞ்சள் நிறம் 7 மணி நேர உறக்கத்தை உறுதி செய்கிறது. இந்த இரு நிறங்களைக் காட்டிலும் சில்வர், ஆரஞ்சு, சிவப்பு மற்றும் தங்க நிறம் குறைந்த அளவிலான உறக்கத்தையே அளிக்கின்றன. கிரே மற்றும் கருஞ்சிவப்பு நிறங்கள் சோர்வான உணர்வை அளிக்கிறது. ஊதா நிறம் வெறும் 5 மணி நேரம் 56 நிமிடங்கள் மட்டுமே உறக்கத்தை தக்க வைக்கிறது. அப்போது  கெட்ட கனவுகள் உங்கள் தூக்கத்தை தொந்தரவு செய்வதாக இருக்கும். மேலும் அது அன்றைய நாளின் அழுத்தத்தை மேலும் அதிகரிக்கச் செய்கிறது. காலை விடியல் அத்தனை இன்பமானதாக இருக்காது.நறுமணங்களும், உங்கள் உறக்கத்திற்கு முக்கியப் பங்கு வகிக்கிறது. அதனால் உங்களின் படுக்கையறையை உங்களுக்கு பிடித்த வாசனையால் நிரப்புங்கள். இதனால் உங்கள் மனதும் ஓய்வு நிலையை அடைகிறது.நறுமணங்கள் உடலளவில் பல மாற்றங்களைத் தருகின்றன. அது அந்த வாசனை இருக்கும் வரை நீள்கிறது. வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்துவது சிறந்தது. இது மன அழுத்தத்தை நீக்கி சிறந்த உறக்கத்தை அளிக்க உதவுகிறது. லாவண்டர், கெமொமைல், சிட்ரஸ் வகை நறுமணங்கள், மல்லி, ரோஜா மற்றும் சந்தனம் ஆகியவை சிறந்த வாசத்தை அளிக்கின்றன. கூடவே புத்துணர்வையும் அளிக்கின்றன.அதேபோல் சரியான வாசனை திரவியத்தை  (எண்ணெய்) தேர்வு செய்யுங்கள். அதை உங்கள் கைகளில் தடவிக் கொள்ளங்கள். அல்லது உங்கள் படுக்கைக்கு முன் ஒரு  குளியல் போடுங்கள். அந்த தண்ணீரில் ஒரு சொட்டு எண்ணெயை விட்டு குளித்துப் பாருங்கள்.  ஆழ்ந்த தூக்கத்தால் சொர்க்கத்தையே அடைந்து விடுவீர்கள். இல்லையெனில் வாசனை எண்ணெயால் உருவாக்கப்பட்ட மெழுகுவர்த்திகளை படுக்கையறையில் ஏற்றி வையுங்கள். அந்த வாசனை அறை முழுவதும் நிரம்பியிருக்கும். இவ்வாறு செய்வதால் உங்களின் மன அழுத்தம் முற்றிலும் நீங்கி ஆழ்ந்த தூக்கம் தானாக வரும்.லாவண்டர் எண்ணெயை உங்கள் தலையணையில் தடவிப் பாருங்கள். அதன் நருமணம் தூக்கத்தின் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும். அதேபோல் கண் மாஸ்கிற்கும் வாசனைத் திரவியங்களை தடவிப் பாருங்கள், நல்ல உறக்கம் கிடைக்கும். இது உங்கள் டென்ஷன், மனச் சோர்வு , உடல் சோர்வு எல்லாவற்றையும் நீக்கி புத்துணர்வான விடியலை அளிக்கும்.மல்லியின் வாசனை உங்கள் மனதிற்கும் மூளைக்கும் அமைதியை அளிக்கும். உங்கள் உடல் ஆற்றலையும் அதிகரிக்கும். தூக்கமின்மையால் அவதிப்படுவோருக்கு நறுமணங்கள் சிறந்த மருத்துவ நிவாரணி. இது உங்கள் தசைப் பகுதிகளையும் ரிலாக்ஸ் செய்து தூக்கத்தில் விழ வைக்கும். ரோஜா மற்றும் சந்தனத்தின் வாசனை நீண்ட நேர தூக்கத்திற்கு உதவியாக இருக்கும்.

Also watch

 
First published: January 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...