Home /News /lifestyle /

கொரோனா செய்திகள் உங்களை மனப்பதற்றம் அடைய செய்கிறதா..? இனி இப்படி செய்யுங்கள்..!

கொரோனா செய்திகள் உங்களை மனப்பதற்றம் அடைய செய்கிறதா..? இனி இப்படி செய்யுங்கள்..!

மனப்பதற்றம்

மனப்பதற்றம்

வேலை இழப்பு, குடும்ப பிரச்சனை, பொருளாதார பற்றாக்குறை என பல்வேறு வழிகளில் மன அழுத்தங்கள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
எண்ணம், செயல்பாடு, உணர்ச்சிகளுக்கு ஏற்ப உடல் ரியாக்ட் செய்வது இயல்பானது என்றாலும், நேர்மறையான எண்ணங்களைவிட எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்போது நீண்டகால அடிப்படையில் ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

கடந்த ஓராண்டாக செய்தித்தாள், தொலைக்காட்சி, இணையம் என அனைத்து புறச்சூழல்களிலும் எதிர்மறையான விஷயங்கள் ஆக்கிரமித்திருக்கின்றன. வேலை இழப்பு, குடும்ப பிரச்சனை, பொருளாதார பற்றாக்குறை என பல்வேறு வழிகளில் மன அழுத்தங்கள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன.

இதுகுறித்து பேசியுள்ள ஹார்வேர்டு பல்கலைக்கழக உளவியல் நிபுணர் மருத்துவர் ஆனி எப்ஸ்டெய்ன் (Dr Ann Epstein), உடலுக்கு மன அழுத்தம் இருப்பது என்பது அவசியம் என்கிறார். மன அழுத்தமே இல்லாமல் இருக்கக்கூடாது எனக் கூறும் அவர், அது எந்த அளவில் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்துகிறார். மன அழுத்தம், மனக்கவலை இருக்கும்போது எச்சரிக்கையுடன் அல்லது அதிக கவனத்துடன் ஒரு செயலை செய்வதற்கு உதவும் என்கிறார். மேலும், மனக்கவலையை நிரந்தரமாக்கிக்கொள்ளாமல் நாள்தோறும் மேற்கொள்ளும் ஒரு சில எளிய பயிற்சிகள் மூலம் அதில் இருந்து விடுபட வேண்டும் என கூறுகிறார்.மூச்சுப் பயிற்சி

மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு, உடனடியாக நிவாரணம் கொடுப்பது மூச்சுப்பயிற்சி. ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி செய்யும்போது மனது ரிலாக்ஷாகும். தனிமையான இடத்தில் அமர்ந்து ஆழமாக மூச்சை உள்ளிழுத்து, மெதுவாக வெளியேற்ற வேண்டும். ஆய்வுகளின் படி, கோபமாக அல்லது வெறுப்பாக இருக்கும்போது ஒருவர் மிக வேகமான சுவாசத்தை மேற்கொள்கிறார் என கூறுகிறது. இது குறுகிய முடிவுகளை எடுக்க வழிவகுப்பதாக தெரிவிக்கும் ஆய்வுகள் நிதானத்தை கடைபிடித்து ஆழ்ந்த சுவாத்தை எடுக்கும்போது மனக்கவலைகள் பறந்துபோகும் என கூறுகிறது. நாள்தோறும் இதனை செய்ய வேண்டும்.

எண்ணங்களுக்கு சவால் விடுங்கள்

கொரோனா காரணமாக வீட்டில் முடங்கியிருக்கும் நமக்குள் சாத்தியமில்லாத அல்லது பயமுறுத்தும் எண்ணங்கள் எழுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஏற்கனவே வைரஸ் தொற்றிவிட்டால் என்ன ஆகும்? என பயந்து கொண்டிருப்பவர்களுக்கு, அன்றாடம் கேள்விப்படும் விஷயங்கள் கூடுதல் பயத்தை ஏற்படுத்தக்கூடும். அதாவது, அந்த விஷயங்கள் தங்களுக்கே நடந்ததுபோல் ஒரு சிலர் உணரக்கூடும்.

இது தேவையற்ற மன அழுத்தத்தை உருவாக்கும் என்பதால், மாய எண்ணங்கள், கற்பனைகளுக்கு ரியாக்ட் செய்யக்கூடாது. மாறாக, அதனை எதிர்கொள்ளும் திறன் நமக்குள் இருப்பதுபோன்ற நேர்மறையாக யோசிக்க வேண்டும். எந்தவொரு சந்தேகம் தோன்றும்போதும் நமக்கு ஏற்கனவே இது நடந்திருக்கிறதா? இனி நடக்க வாய்ப்புகள் உள்ளனவா? போன்ற சாத்தியக்கூறுகளுடைய சந்தர்பங்களை யோசித்து உங்களை திடப்படுத்திக்கொள்ளுங்கள்.நாள்தோறும் உடற்பயிற்சி

நாள்தோறும் உடற்பயிற்சிகள் செய்யும்போது உடலில் இருக்கும் மனஅழுத்தத்தை தூண்டும் ஹார்மோன்களை சீராகும் என ஹார்வேர்டு பல்கலைக்கழகம் கூறியுள்ளது. உடற்பயிற்சியினால் என்டோர்பின்ஸ் தூண்டப்பட்டு, இயற்கையான முறையில் மூளையில் தூண்டப்படும் மன அழுத்த உணர்ச்சிகள் கட்டுப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.

ஓட்டப்பந்தயம் ஓடுபவர் உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள் மிகவும் ரிலாக்ஷாக இருப்பதற்கு உடலில் இருக்கும் என்டோர்பின்ஸ் காரணம் என குறிப்பிட்டுள்ள ஹார்வேர்டு பல்கலைக்கழகம், நாள்தோறும் 20 நிமிடங்கள் ஓட்டம், நடை அல்லது பைக் ரைட் ஏதேனும் ஒன்றை செய்யலாம் எனவும் கூறியுள்ளது.

முதல் தடுப்பூசி எடுத்தபிறகு கொரோனா வந்தால் 2வது தடுப்பூசி எப்போது எடுத்துக்கொள்ள வேண்டும்?

உடல் நலனில் அக்கறை

கடினமான காலத்தில் இருக்கும் நாம், உடலின் மீது அதிக அக்கறை எடுத்துகொள்ள வேண்டும். நாள்தோறும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும், சரியான நேரத்தில் தூங்குதல், உடற்பயிற்சி செய்தல் ஆகியவற்றை கடைபிடித்து ஆல்கஹால் மற்றும் போதைப்பொருளை தவிர்க்க வேண்டும். ரிலாக்ஷேசனுக்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி தியானம், யோகா, மசாஜ் மற்றும் ஷவர் பாத் ஆகியவற்றை செய்யலாம். வீடியோ கால் மூலம் முன்னாள் நண்பர்களுடன் உரையாடலாம்.கருணையுடன் கனிவாக இருங்கள்

கோவிட் தொற்றுநோய் உலகம் முழுவதும் பரவி மக்கள் மிகவும் அவதிபட்டு வருகிறார்கள். இந்த சூழலில் எல்லோருடனும் கருணையுடன் இருப்பது முக்கியம். கருணையுடன் இருப்பவர்களின் இதயத்துடிப்பு சீராக இருப்பதாகவும், இதற்கு பாரம்சிம்பேடிக் நரம்பு மண்டலம் உதவியாக இருப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. பதட்டம் மற்றும் பரபரப்பாக இருப்பவர்களுக்கு குறுகிய ஆயுட்காலம் இருப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது. மற்றவர்களுக்கு உதவுவது, கருணையுடன் இருக்கும்போது மனது மகிழ்ச்சியாகவும், நீண்ட ஆயுளையும் கொடுப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Anxiety, Stress

அடுத்த செய்தி