ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

நாய்களைக் காட்டிலும் ஆண்களின் தாடியில் அதிக கிருமி: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

நாய்களைக் காட்டிலும் ஆண்களின் தாடியில் அதிக கிருமி: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

நாயைக் காட்டிலும் ஆண்களின் தாடிதான் கிருமி நிறைந்தது.

நாயைக் காட்டிலும் ஆண்களின் தாடிதான் கிருமி நிறைந்தது.

அதற்காக 18 தாடி வைக்கப்பட ஆண்கள் மற்றும் கழுத்துக்குக் கீழ் அதிக முடி கொண்ட 30 நாய்களை ஆய்வில் ஈடுபடுத்தியுள்ளனர்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :

தாடி ஆண்களுக்குக் கம்பீரம் அதேசமயம் லுக் கூல் தோற்றத்தை ஏற்படுத்தக் கூடியது. பெண்களும் ஃபுல் ஷேவ் செய்த ஆண்களைக் காட்டிலும் தாடி வைத்த ஆண்களைத்தான் விரும்புவார்கள். சில ஆண்கள் தாடியை செண்டிமெண்டாக வளர்ப்பார்கள். அவர்கள் தலைகீழ் நின்றாலும் தாடியை நீக்க மாட்டார்கள். சிலர் தனக்குத் தாடியே வளராவிட்டாலும் ஏதேனும் குறிப்புகளைப் பயன்படுத்தியாவது தாடியை வளர்த்துக் கொண்டு கெத்து காட்டுவார்கள்.

தற்போது வந்திருக்கும் ஆய்வுகளின் அடிப்படையில் பார்த்தால் அந்த தாடியை இனி ரசிப்பதா அல்லது முகம் சுழிப்பதா என்று யோசிக்க வைக்கிறது.

ஆம், உண்மையைச் சொல்லப்போனால் ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆராய்ச்சியின் நோக்கம் வேறு. பின் இறுதியில் கிடைத்த ஆய்வு முடிவுகள் வேறு என்பதுதான் உண்மை...

ஆராய்ச்சியாளர்கள் MRI ஸ்கேன் செய்யப்படும் இயந்திரங்களை மனிதனுக்கும் நாய்க்கும் ஒன்றாகப் பயன்படுத்தும்போது நாய்கள் மூலமாகப் பரவும் நோய்கள் ஏதேனும் தொற்றிக் கொள்ள வாய்ப்புகள் இருக்கின்றனவா என்பதைக் கண்டறியவே அந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டுள்ளது. அதற்காக 18 தாடி வைக்கப்பட ஆண்கள் மற்றும் கழுத்துக்குக் கீழ் அதிக முடி கொண்ட 30 நாய்களை ஆய்வில் ஈடுபடுத்தியுள்ளனர்.

ஆனால் அந்த ஆய்வின் முடிவுகள் ஆராய்ச்சியாளர்களையே கதிகலங்க வைத்துள்ளது. ஆராய்ச்சியில் ஈடுபடுத்தப்பட்ட 30 நாய்களில் 23 நாய்களுக்கு அதிக அளவிலான தொற்றுக் கிருமிகள் இருந்துள்ளன. ஆனால் ஆண்களில் 18 பேருக்குமே தாடியில் அதிக அளவிலான நோய்த் தொற்றுக் கிருமிகள் இருந்துள்ளன. அதுவும் அந்த தாடியில் உள்ள கிருமிகளே அவர்களுக்கு உடல் ரீதியான நோய்களை உருவாக்கும் ஆபத்து அதிகம் இருந்துள்ளது.

அதேபோல் MRI ஸ்கேன் இயந்திரத்திலும் நாய்களைக் காட்டிலும் ஆண்களைப் ஸ்கேனிற்கு உட்படுத்திய பின்தான் அதிக பரவும் கிருமிகளைக் கண்டறிந்துள்ளனர். இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட பேராசிரியர் ஆண்ட்ரீஸ் கட்ஸெய்ட்,  ’ஆராய்ச்சியில் அதிக அளவிலான கிருமிகளை நாயின் முடியைக் காட்டிலும் ஆண்களின் தாடியிலிருந்துதான் கண்டறிந்துள்ளோம். ஆக முடிவுகளின் படி நாய்கள் சுத்தமாக இருக்கின்றன. தாடி வைத்த ஆண்கள்தான் சுத்தமாக இல்லை. அவர்களால்தான் நாய்க்கு நோய் வரும் ஆபத்து இருக்கிறது“ என்று கூறியுள்ளார்.

நீங்களும் தாடி வைத்திருந்தால் இனி சீரான பராமரிப்பு செய்து சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். அதற்குரிய எண்ணெய், காஸ்மெடிக் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துங்கள். அசுத்தமான தாடி உங்கள் உடலுக்கும் ஆபத்து.

First published:

Tags: Health tips