பெற்றோர்களே, குழந்தையின் ஆரோக்கியத்தில் உஷார்!

இன்றையச் சூழலில் குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்த்தெடுப்பது பெரும் சவாலாக உள்ளது.

Web Desk | news18
Updated: January 9, 2019, 10:16 PM IST
பெற்றோர்களே, குழந்தையின் ஆரோக்கியத்தில் உஷார்!
மாதிரிப் படம்
Web Desk | news18
Updated: January 9, 2019, 10:16 PM IST
கலப்படங்கள் நிறைந்த இன்றைய சூழலில் குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்த்தெடுப்பது பெரும் சவால். இருப்பினும் குழந்தைகளின் மிக முக்கிய தேவைகளில் கவனம் செலுத்தினாலே ஓரளவு சிரமத்தை சமாளிக்க முடியும். இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட அதேசமயம் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்காத பொருட்களை தேர்வு செய்தல் அவசியம். எவ்வாறு என்பதைக் கீழே காணலாம்.

பேபி வைப்ஸ்



உலகின் மூன்றாவது மிகப்பெரும் சுற்றுச்சூழலை பாதிக்கக் கூடிய பொருட்கள் பட்டியலில் பேபி வைப்ஸும் இருக்கிறது. குழந்தைக்கு தீங்கு விளைவிக்க கூடியதாக இருப்பது மட்டுமன்றி சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வைப்ஸை பயன்படுத்துவதை தவிருங்கள். அதற்கு பதிலாக இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட வைப்ஸ்கள் கிடைக்கின்றன. அவை முற்றிலும் மூங்கில் மற்றும் பருத்தி ஃபேப்ரிக்கில் தயாரிக்கப்படுகின்றன. ஈரப்பதத்திற்கு 100% தண்ணீர் நிரப்பப்படுகிறது. இவை பயன்படுத்துவதற்கு மென்மையாகவும், உறுதித்தன்மையுடனும் இருக்கின்றன. குழந்தைக்கு எந்தவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. எனவே இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட வைப்ஸ் வாங்குவதை உங்களின் முதல் தொடக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். சுற்றுச்சூழலையும் பாதுகாத்திடுங்கள்.

பேபி ஃபீடிங் பாட்டில்



இந்தியா உட்பட 35 நாடுகள் ஃபீடிங் பாட்டிலை தடை செய்துள்ளன. ஃபீடிங் பாட்டில்களில் BPA என்று சொல்லக் கூடிய மிகவும் நச்சுக் கலந்த கெமிக்கல் கலக்கப்படுகிறது. இது பிளாஸ்டிக்கின் உறுதித் தன்மைக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த கெமிக்கலும் குழந்தைகளின் உடல் கோளாறுகளுக்கு முக்கிய காரணியாகிறது. இனியாவது கண்ணாடி பாட்டில் அல்லது ஸ்டீல் பாட்டிலில் குழந்தைக்கு பால் கொடுங்கள். தற்போது பல நிறுவனங்கள் BPA கலப்படமில்லாத ஃபீடிங் பாட்டில்களை விற்பனை செய்கின்றன. ஆகவே, உங்கள் குழந்தைக்கு சரியான ஃபீடிங் பாட்டிலில் பால் கொடுங்கள்.
Loading...
பேபி டயப்பர்



ஆய்வின்படி ஒரு டயப்பர் மண்ணில் மக்குவதற்கு 500 வருடங்கள் ஆகிறதாம். இது சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரும் தீங்கு விளைவிக்கக் கூடியது. இப்படிப்பட்ட தயாரிப்புகளைக் கொண்ட டயப்பர்களை பயன்படுத்துவதால் உங்கள் குழந்தைக்கும் அரிப்பு, அலர்ஜி போன்றவை உண்டாகின்றன. அதற்கு மாற்றாகவே பருத்தி துணி மற்றும் மூங்கில், கோதுமை, சோளம் என இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட டயப்பர்கள் கிடைக்கின்றன. இவை உங்கள் குழந்தைக்கு எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது. அதேசமயம் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு இல்லை.

பேபி டாய்ஸ்



பல விஷயங்களில் நாம் அக்கறையுடன் செயல்பட்டாலும் குழந்தைகளின் விளையாட்டு பொம்மைகள் விஷயத்தில் கவனிக்க மறந்துவிடுவோம்.  தயாரிக்கப்படும் பொம்மைகளில் அதிக பிளாஸ்டிக் கெமிக்கல்கள் உள்ளன.  குழந்தைகள் அதிக நேரம் பொம்மைகளுடன் தான் இருக்கின்றனர். குறிப்பாக அவற்றை வாயில் வைப்பது, கடிப்பது போன்ற செயல்களை செய்வார்கள். அதற்கும் மாற்று இருக்கிறது. மரத்தால் செய்யப்பட்ட பொம்மைகள் சிறந்தது அல்லது  பாலியஸ்டர் பயன்படுத்திய மறுசுழற்சிக்கு உட்பட்ட விளையாட்டு பொம்மைகளை வாங்குங்கள். மேலும் 100% இயற்கைக்கு உகந்த டாக்ஸின், பாராபென் இல்லாத பொம்மைகள் பல சந்தைகளில் கிடைக்கின்றன. இனி இதுபோன்ற பொம்மைகளை தேர்வு செய்து வாங்குவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் குழந்தையின் உடல்நலத்தையும், சுற்றுச்சூழலையும் பாதுகாத்திடுங்கள்.
First published: January 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

Vote responsibly as each vote
counts and makes a difference

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626