முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / Weight Loss | உடம்ப குறைக்கபோறீங்களா? முதலில் இதை கொஞ்சம் கவனிங்க!

Weight Loss | உடம்ப குறைக்கபோறீங்களா? முதலில் இதை கொஞ்சம் கவனிங்க!

ஆண்களோ, பெண்களோ தங்களின் குண்டான உடம்பை குறைக்க எல்லோரிடமும் அடிக்கடி டிப்ஸ் கேட்பார்கள். ஆனால் அதனை பின்பற்றுவது அவர்களுக்கு கொஞ்சம் கடினமாக தோன்றும். ஏனென்றால், அவர்களுக்கு ஐடியா கொடுக்கும் பலரும் முதலில் சொல்வது, உடம்பை குறைப்பது சாதாரண விஷயம் அல்ல, நீண்ட நாள் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என கூறுவார்கள்.

ஆண்களோ, பெண்களோ தங்களின் குண்டான உடம்பை குறைக்க எல்லோரிடமும் அடிக்கடி டிப்ஸ் கேட்பார்கள். ஆனால் அதனை பின்பற்றுவது அவர்களுக்கு கொஞ்சம் கடினமாக தோன்றும். ஏனென்றால், அவர்களுக்கு ஐடியா கொடுக்கும் பலரும் முதலில் சொல்வது, உடம்பை குறைப்பது சாதாரண விஷயம் அல்ல, நீண்ட நாள் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என கூறுவார்கள்.

கலோரிகள் உங்கள் உடலுக்கு முற்றிலும் தீங்கானவை அல்ல என்றாலும், உங்கள் எடை குறைக்கும் முறையின் போது கலோரி அளவை நீங்கள் கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஒரு கட்டடத்திற்கு அடித்தளம் எவ்வளவு முக்கியமோ, அதேபோல் உடல் எடையை குறைக்க வேண்டும் என்றவுடனேயே நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் உடலில் உள்ள கலோரி அளவை குறைப்பது தான். கலோரியை குறைக்கவில்லை என்றால் உடல் எடை குறையாது. உங்கள் உயரம், எடையை பொறுத்து உங்கள் உடம்பிற்கு ஒரு குறிப்பிட்ட அளவு கலோரி தேவைப்படும். இரண்டாவதாக நீங்கள் கவனிக்க வேண்டியது அடிப்படையான உடற்பயிற்சிகள். இதற்காக நீங்கள் ஜிம்மிற்கு செல்ல வேண்டும் என்பதில்லை. வீட்டிலிருந்தே பணிபுரியும் நிலையில் உள்ளவர்கள் உடல் எடையைக் குறைக்க வேண்டும் எனில், முதலில் எளிதான மற்றும் அடிப்படையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

தினமும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சியும் உணவில் கலோரியின் அளவை கட்டுக்குள் வைப்பதுமே உடல் எடையைக் குறைக்க உதவும் முக்கிய கூறுகள் ஆகும். மேலும், உங்கள் எடை விரைவில் குறைவதை உணருவீர்கள்.

குறைந்த கலோரி கொண்ட உணவுகளை உட்கொள்வது என்பது சருமத்திற்கு மட்டுமல்ல நோய்களையும் தடுக்க உதவும். கீட்டோ மற்றும் இண்டர்மிட்டண்ட் ஃபாஸ்ட்டிங் போன்ற டயட்களை பின்பற்றுவதற்கு பதிலாக, நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் சீரான உணவுகளை உட்கொள்வதுதான். சற்று நிதானமாக முயற்சித்தால், உங்கள் எடையைக் குறைக்கும் பயணத்தின் முடிவில் அற்புதமான ரிலச்ல்டை பெறுவீர்கள். கலோரிகள் உங்கள் உடலுக்கு முற்றிலும் தீங்கானவை அல்ல என்றாலும், உங்கள் எடை குறைக்கும் முறையின் போது கலோரி அளவை நீங்கள் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். குறைந்த கலோரி கொண்ட சில காய், கனிகள் குறித்து பார்க்கலாம்.

பெரும்பாலான காய்கறிகள் அனைத்தும் லோ-கலோரி காய்கறிகள் தான். குறிப்பாக முள்ளங்கி, பூசணி, காலிஃப்ளவர், பீன்ஸ், கேரட், ப்ரோகலி மற்றும் கீரை வகைகள் ஆகியவை. பழங்கள் பொருத்தவரை ஆப்பிள், ஆரஞ்ச், வெள்ளரிக்காய், தர்பூசணி, திராட்சை, ஸ்ட்ராபெரி ஆகியவை. மேலும், எடை குறைப்பில் நம் அன்றாட உணவில் சர்க்கரையை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. கோதுமை, அரிசியின் அளவையும் குறைப்பது நல்லது. ஆனால் கோதுமை, அரசியை சரியான அளவில் உட்கொள்ளவும் செய்யலாம். அளவை கவனத்தில் கொள்ள வேண்டியது மிக அவசியம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உடற்பயிற்சியை பொறுத்தவரை நடைபயிற்சி மற்றும் ஜாகிங் நல்ல பலன்கள் தருபவை. பிறகு சைக்கிளிங் செல்வது, நீச்சல் பயிற்சி போன்றவைகளும் சிறந்த பலன் தரும். யோகா, உடலுக்கும் மனதுதிற்கும் நன்மை பயக்கும். எனவே, எடைக் குறைப்பில் யோகாவிற்கும் பங்கு உண்டு. ஆரோக்கியமான உணவை சாப்பிடுவதோடு உடற்பயிற்சி செய்வதும் விரைவாக உடல் எடையைக் குறைக்க உதவும்.

First published:

Tags: Exercise, Healthy Life, Lifestyle, Low Calories Food, Weight loss