Home /News /lifestyle /

பக்கவாதத்திற்கு வழிவகுக்கும் மோசமான உணவுப் பழக்கங்கள்... அறிகுறிகளை தெரிந்துகொள்ளுங்கள்..

பக்கவாதத்திற்கு வழிவகுக்கும் மோசமான உணவுப் பழக்கங்கள்... அறிகுறிகளை தெரிந்துகொள்ளுங்கள்..

பக்கவாதம்

பக்கவாதம்

சமீபத்திய ஆராய்ச்சியின் படி, உலகளவில் இதய நோய் தொடர்பான இறப்புகளில் மூன்றில் இரண்டு பங்குக்கு உணவு தேர்வுகள் காரணமாகும்.

இதய நோய், பக்கவாதம் மற்றும் டைப் - 2 நீரிழிவு நோய் இவை மூன்றும் மரணத்திற்கான உலகின் மூன்று முக்கிய காரணங்களாக உள்ளன. இவற்றுக்கு எதிரான போரில் நீங்கள் வெற்றி பெறுவதோ அல்லது தோல்வி அடைவதை உங்கள் சமையலறையை பொறுத்துதான் இருக்கிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் நாள்பட்ட நோய்களுடன் தொடர்புடைய இறப்பு அபாயத்தை அதிகரிக்கிறது.

நீங்கள் சாப்பிடுவதற்கும் உங்கள் இறப்புக்கும் இடையே உள்ள நேரடி தொடர்பை பல ஆய்வுகள் காட்டுகின்றன. சமீபத்திய ஆராய்ச்சியின் படி, உலகளவில் இதய நோய் தொடர்பான இறப்புகளில் மூன்றில் இரண்டு பங்குக்கு உணவு தேர்வுகள் காரணமாகும். ஆரோக்கியமான உணவுகள் 6 மில்லியன் இறப்புகளைத் தடுத்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, அதிக கொழுப்பு (lipid) அளவுகள், கரோனரி இதய நோய் மற்றும் உடல் பருமன் போன்ற மருத்துவ நோய்களை உருவாக்கும் வாய்ப்புகளை நல்ல உணவு குறைக்கலாம். இந்த காரணிகள் அனைத்தும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கலாம்.

இது தெரிந்தாலும், ஆரோக்கியமற்ற பல உணவுப் பழக்கங்கள் ஒவ்வொரு வீட்டிலும் அன்றாடம் ஏற்றுக் கொள்ளப்பட்டே வருகிறது. அதனால்தான் காரணங்கள் மற்றும் அறிகுறிகளைத் தெரிந்துகொள்வது மற்றும் மருத்துவரை எப்போது பார்க்க வேண்டும் என்பது முக்கியம்.



அறிகுறிகள் :

அறிகுறிகள் குறித்து சிலர் என்ன சொல்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்வதிலும், அதை இன்னொருவருக்கு சொல்வதிலும் நீங்கள் சிரமம் அடையலாம். நீங்கள் குழப்பமடையலாம், உங்கள் வார்த்தைகள் தடுமாறலாம் அல்லது இது குறித்த உரையாடலைப் புரிந்துகொள்வதில் சில சிரமங்கள் இருக்கலாம்.

உங்கள் முகம், கை அல்லது காலில் உங்களுக்கு திடீர் உணர்வின்மை, பலவீனம் அல்லது பக்கவாதம்(paralysis ) இருக்கலாம். இது பொதுவாக உடலின் ஒரு பக்கத்தை மட்டுமே பாதிக்கிறது.

பெண்களை விட ஆண்கள் ஸ்கின் கேன்சரால் அதிகம் இறக்கின்றனர் : என்ன காரணம்..?

ஒன்று அல்லது இரண்டு கண்களிலும் பார்வைப் பிரச்சனைகள் இருக்கலாம், பார்வை மங்கலாகவோ அல்லது கருமையாகவோ இருக்கலாம், இதே போல் இரண்டு கண்களிலும் இருக்கலாம்.

திடீர், கடுமையான தலைவலி, வாந்தி, தலைச்சுற்றல் அல்லது உணர்வு மாறுதல் ஆகியவை பக்கவாதத்தின் அறிகுறிகளாக இருக்கலாம்.

உங்கள் சமநிலையை நீங்கள் இழக்கலாம் அல்லது தலைச்சுற்றல் அல்லது உடலில் ஓர் ஒருங்கிணைப்பு இல்லாமையையும் அனுபவிக்கலாம்.



மருத்துவரை எப்போது பார்க்க வேண்டும்?

மேலே குறிப்பிடப்பட்ட பக்கவாதத்தின் எந்த அறிகுறிகள் தென்பட்டால், அவசர மருத்துவ உதவியை நாடுங்கள், இந்த அறிகுறிகள் அவ்வப்போது வந்து போவதாக தோன்றினாலும் அல்லது முற்றிலுமாக சரியாகி விட்டாலும் நிச்சயம் மருத்துவரை சந்தியுங்கள்.

அறிகுறிகள் மறைந்துவிட்டதா என்பதைப் பார்க்க காத்திருக்க வேண்டாம். ஒவ்வொரு நொடியும் முக்கியம். பக்கவாதத்திற்கான சிகிச்சை எந்த அளவு தாமதமாகிறதோ, அந்த அளவு மூளை பாதிப்பு மற்றும் செயலிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

பக்கவாதம் ஏற்படும் என அஞ்சக்கூடிய ஒருவருடன் நீங்கள் இருந்தால், அவசர உதவிக்காக காத்திருக்கும் போது அவர்களை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Bad Habits, Stroke

அடுத்த செய்தி