ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

இந்தியாவில் மனித உயிரிழப்புக்கு 2வது முக்கிய காரணம் பாக்டீரியா தொற்று : 2019-ல் 6.8 லட்சம் பேர் இறப்பு..!

இந்தியாவில் மனித உயிரிழப்புக்கு 2வது முக்கிய காரணம் பாக்டீரியா தொற்று : 2019-ல் 6.8 லட்சம் பேர் இறப்பு..!

பாக்டீரியா தொற்று

பாக்டீரியா தொற்று

பாக்டீரியா உற்பத்தி மற்றும் அதன் பரவலை கட்டுப்படுத்த சுகாதார கட்டமைப்பை பலப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  2019 - ஆம் ஆண்டில் இந்தியாவில் 5 வகை பாக்டீரியாவால் 6.8 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக லான்செட் ஆய்வு கூறியுள்ளது. இது இந்தியாவில் மனித உயிரிழப்புக்கு 2வது முக்கிய காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

  தி லான்செட் மருத்துவ இதழில் வெளியான ஆய்வில் : கடந்த 2019 ஆம் ஆண்டில் இஸ்கெமிக் இதய நோய்க்கு அடுத்தபடியாக மனித இறப்புக்கு முக்கிய காரணமாக பாக்டீரியா தொற்றுகள் இருந்துள்ளது. உலகம் முழுவதும் 33 வகை பாக்டீரியா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. அதில் 77 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டோர் இறப்புக்கு 5 பாக்டீரியாக்கள் முக்கிய காரணமாக இருந்துள்ளன. இந்த பாக்டீரியாக்கள் வயது மற்றும் இடத்திற்கு ஏற்ப மாறுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  இந்தியாவில் பொருத்தமட்டில் 2019-ல் இ.கோலி, எஸ்.நிமோனியா , கே. நிமோனியா, எஸ்.அவ்ரூஸ் மற்றும் ஏ.பவ்மானி ஆகிய 5 கொடிய பாக்டீரியாவால் 6 லட்சத்து 78 ஆயிரத்து 846 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக இ.கோலி பாக்டீரியாவால் மட்டும் 1.57 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

  Also Read : "சளி பிடித்ததைப் போல தான் இருந்தது.." - மலக்குடல் புற்றுநோயின் அறிகுறிகளை பகிர்ந்து கொண்ட நபர்.!

  இதனால் பாக்டீரியா உற்பத்தி மற்றும் அதன் பரவலை கட்டுப்படுத்த சுகாதார கட்டமைப்பை பலப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. எனவே நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான விதிமுறைகளை அமல்படுத்துவது, நோய் எதிர்ப்பு மருந்து பயன்பாட்டை மேம்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

  Published by:Sivaranjani E
  First published:

  Tags: Bacteria, Bacterial infection