Home /News /lifestyle /

தினமும் முதுகு வலியால் அவதிப்படுகிறீர்களா..? எளிய ஆசனங்களை கற்றுத்தரும் ஆலியா பட்டின் பயிற்சியாளர்...

தினமும் முதுகு வலியால் அவதிப்படுகிறீர்களா..? எளிய ஆசனங்களை கற்றுத்தரும் ஆலியா பட்டின் பயிற்சியாளர்...

பிரபல பயிற்சியாளரின் முதுகு வலியைப் போக்கும் யோகாசனங்கள்

பிரபல பயிற்சியாளரின் முதுகு வலியைப் போக்கும் யோகாசனங்கள்

பிரபலமான ஒரு யோகாசன பயிற்சியாளரான அனுஷ்கா பர்வாணி முதுகு வலியை போக்கும் யோகசனங்களை செய்து வீடியோவாக வெளியுட்டுள்ளார். அவை என்ன ஆசனங்கள் என்பதை இங்கு காண்போம்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
முதுகு வலி, வயிறு கோளாறு, உடல் பருமன் போன்றவை மிக எளிதாக உங்களைத் தாக்கும் அபாயம் உள்ளது. முக்கியமாக இப்போது வீட்டிலிருந்தே வேலை செய்யும் கலாச்சாரம் அதிகமாகிவிட்ட நிலையில் இது போன்ற உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் பல நோய்கள் அதிக அளவில் உங்களைத் தாக்கக்கூடும். உங்களுக்கு இது போன்ற உடல் உபாதைகள் மற்றும் முதுகு வலி ஆகியவை இருந்தால் அவற்றை எளிதில் யோகாசனங்கள் மூலம் சரி செய்வதற்கான முறையைப் பற்றிக் கூறுகிறார் அனுஷ்கா பர்வாணி. இவர் மிகப் பிரபலமான ஒரு யோகாசன பயிற்சியாளர் ஆவார். பாலிவுட்டின் பிரபலங்கள் பலருக்கும் இவர்தான் யோகா பயிற்சியாளராக இருந்து வருகிறார்.

முக்கியமாக ஆலியா பட், கரீனா கபூர் கான் அவர்களுக்கெல்லாம் இவர்தான் ஆஸ்தான யோகா ஆசிரியர். மேலும் இவர் இன்ஸ்டாகிராமில் தினந்தோறும் யோகாசனம் பற்றிய குறிப்புகளையும் அதைப் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் பதிவுகளைப் பதிவேற்றம் செய்து வருகிறார்.

வீட்டிலிருந்தபடியே மிக எளிய முறையில் உங்களின் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், நாள்பட்ட முதுகு வலி பிரச்சனை மற்றும் கூன் முதுகு ஆகிய பிரச்சனைகளையும் எவ்வாறு யோகாசனங்கள் மூலம் சரி செய்வது என்பதைப் பற்றி வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகிறார். அவ்வாறு அவர் அளித்த சில முக்கிய யோகாசனங்கள் பற்றி இப்போது பார்க்கலாம்.

கேட் கவ் போஸ்: உங்கள் கையை தரையில் ஊன்றி மண்டியிட்டு கிட்டத்தட்ட ஒரு பசுமாட்டைப் போல நிற்க வேண்டும். பிறகு ஒரு பூனை தன்னுடைய உடலை நெட்டி முறிக்கும் போது எந்த வித பாவனை செய்யுமோ அதே போன்று உங்களது பின்புறத்தை முடிந்த அளவு நன்றாக நெட்டி முறிக்க வேண்டும். இந்த நிலையில் நன்றாக மூச்சை இழுத்து விட வேண்டும்.

 



 




View this post on Instagram





 

A post shared by ANSHUKA YOGA (@anshukayoga)






பிரிட்ஜ் போஸ்: உங்கள் முதுகு தரையில் படுமாறு நன்றாகப் படுத்துக்கொண்டு மூச்சை இழுத்து விடவும். பிறகு உங்களது இடுப்புப் பகுதியை மேல் நோக்கி நன்றாகத் தூக்கி உங்களது கைகளை இடுப்பிற்குக் கீழே வருமாறு தரையில் படும்படி வைத்துக் கொள்ளவும். இதே ஆசனத்தில் முடிந்த அளவு இருந்து கொண்டு நன்றாக மூச்சை இழுத்து விடவும்.

 

கேமல் போஸ்: இந்த ஆசனத்தைச் செய்வதற்கு நீங்கள் முதலில் முழங்காலிட்டு அமர வேண்டும். அதன் பிறகு உங்களது கால் பாதத்தில் பின்பகுதியில் உள்ள பந்து போன்ற அமைப்பைத் தொட்டுக்கொண்டு பின்பக்கமாகச் சாய வேண்டும்.



கோப்ரா போஸ்: இது கிட்டத்தட்டப் பார்ப்பதற்கு ராஜ நாகம் படம் எடுப்பதைப் போல் இருக்கும். இந்த ஆசனத்தைச் செய்வதற்கு நீங்கள் உங்கள் வயிற்றுப் பகுதி அல்லது முகம் தரையில் படுமாறு நன்றாகப் படுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு உங்கள் முகத்தைத் தூக்கி உங்களது முதுகை நன்றாகப் பின்பக்கம் வளைக்க வேண்டும். இதன் மூலம் முதுகு வலியிலிருந்து விடுதலை பெறுவதோடு தண்டுவடம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளிலிருந்து விடுபடுவதற்கும் உதவியாக இருக்கும்.

 

ஹாஃப் லார்ட் ஆப் த ஃபிஷ் போஸ்: இந்த ஆசனத்தில் நீங்கள் உங்களது முதுகுப் பகுதியை மட்டுமில்லாமல் உங்கள் உடல் முழுவதையும் நன்றாக ஸ்ட்ரெச் செய்ய வேண்டும். முதலில் சாதாரணமாக எப்போதும் உட்காருவதைப் போல் உட்கார்ந்து கொண்டு உங்களது முழங்காலை மட்டும் பயன்படுத்தி அதனை மேலே தூக்கி மற்றொரு காலை மற்றும் கீழே வைத்துக் கொண்டு உங்கள் உடல் முழுவதையும் முடிந்தவரைத் திருப்ப வேண்டும்.

 
Published by:Janvi
First published:

Tags: Back pain, Video, Yoga

அடுத்த செய்தி