• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • கொரோனா பாதித்த கர்ப்பிணிகளுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு ஆபத்து குறைவு : ஆய்வில் தகவல்..

கொரோனா பாதித்த கர்ப்பிணிகளுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு ஆபத்து குறைவு : ஆய்வில் தகவல்..

மாதிரி படம்

மாதிரி படம்

  • Share this:
கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள் குறைவான பாதிப்பை கொண்டுள்ளதாக ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. அதாவது அந்த குழந்தைகளுக்கு கடுமையான அறிகுறிகளை உருவாக்கும் வைரஸின் ஆபத்து குறைவாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் இப்போது கூறியுள்ளனர்.

ஜமா நெட்வொர்க் ஓபன் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு குறித்த அறிக்கையில், கர்ப்ப காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட பெண்களில் 95 சதவீதம் பேருக்கு எந்தவிதமான பாதகமான விளைவுகளும் ஏற்படவில்லை என்பதைக் காட்டுகிறது.

கூடுதலாக, வெறும் மூன்று சதவீத நிகழ்வுகளில் தான் வைரஸ் கருவுக்கு பரவுகிறது என்று ஆய்வில் கண்டறியப்பட்டது. அமெரிக்காவின் யுடி தென்மேற்கு மருத்துவ மையத்தைச் சேர்ந்த ஆய்வு ஆசிரியர் எமிலி ஆதிகாரி என்பவர் கூறியதாவது, "எங்கள் கண்டுபிடிப்புகள் என்னவென்றால், பிரசவிக்கப்பட்ட பெண்களில் சுமார் ஐந்து சதவீதம் பேரின் குழந்தைகள் கொரோனா தொற்றுநோயுடன் கடுமையான அல்லது ஆபத்தான நோயை உருவாக்குகிறார்கள்.

அறிகுறியற்ற அல்லது லேசான தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான பிரசவம் பார்க்கப்பட்ட பெண்களின் குழந்தைகள் வைரஸால் பாதிக்கப்பட வாய்ப்பில்லை" என்று கூறியுள்ளார்.



இந்த கண்டுபிடிப்புகளுக்காக, ஆராய்ச்சி குழு 3,374 தாய்மார்களை ஆய்வுக்கு உட்படுத்தியது. அவர்களில் 252 பேருக்கு மார்ச் முதல் ஆகஸ்ட் வரை கர்ப்ப காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 252 பெண்களில், 95 சதவீதம் பேர் அறிகுறியற்றவர்கள் அல்லது முதலில் லேசான அறிகுறிகளைக் கொண்டிருந்தனர். அந்த பெண்களில் ஆறு பேர் பின்னர் கடுமையான மற்றும் சிக்கலான கொரோனா அறிகுறியான நிமோனியாவை பெற்றிருந்தனர்.

குழந்தைகளை காற்று மாசுபாட்டில் இருந்து பாதுகாப்பது எப்படி? வீட்டுக்கு உள்ளும், வெளியிலும் செய்யவேண்டியவை என்ன?

கர்ப்ப காலத்தில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்ட பெண்களுடன், பாதிப்பு இல்லாத தாய்மார்களை ஒப்பிடுகையில், குறைப்பிரசவம், கடுமையான அம்சங்களைக் கொண்ட பிரீக்ளாம்ப்சியா அல்லது அசாதாரண கருவின் இதயத் துடிப்புக்கான அறுவைசிகிச்சை பிரசவம் போன்ற எந்த ஒரு பாதகமான விளைவுகளின் அபாயத்தையும் கொரோனா வைரஸ் அதிகரிக்கவில்லை என கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், கர்ப்பத்தில் 37 வாரங்களை அடைவதற்கு முன்னர் கடுமையான அல்லது மோசமான நோயை உருவாக்கிய தாய்மார்களிடையே குறைப்பிரசவம் அதிகரித்தது.



இதற்கு கடுமையான அல்லது முக்கியமான தாய்வழி நோயின் அபாயத்தை அதிகரிக்கும் நீரிழிவு ஒரு காரணியாக இருக்கலாம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா உடனான தாய்வழி தொற்று நீண்டகால தாய்வழி அல்லது குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதிக்கிறதா என்பதைப் புரிந்துகொள்ள மேலதிக ஆய்வு தேவை என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். வீட்டிலேயே குணமடைந்து வரும் பெரும்பாலான கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆதார அடிப்படையிலான வழிகாட்டுதல்களை உருவாக்குவதே எங்கள் குறிக்கோள் என்று பேராசிரியர் ஆதிகாரி கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: