Home /News /lifestyle /

இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கா..? வைட்டமின் பி12 குறைபாடாக இருக்கலாம்... உடனே செக் பண்ணுங்க...

இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கா..? வைட்டமின் பி12 குறைபாடாக இருக்கலாம்... உடனே செக் பண்ணுங்க...

வைட்டமின் பி12

வைட்டமின் பி12

வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால் நீங்கள் இந்த உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்வதன் மூலம் உங்கள் உடலில் அந்த ஊட்டச்சத்தினை அதிகரிக்கலாம்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
வைட்டமின் பி12 நம்முடைய உடலின் முக்கியமான இயக்கங்களான டிஎன்ஏ தொகுப்பிற்கும், நம் உடலின் சக்திக்கும் மேலும் மத்திய நரம்பு மண்டலத்தை முழுவதுமாக கட்டுப்படுத்துவதற்கும் முக்கியமான ஒரு ஊட்டச்சத்து ஆகும். உங்கள் உடலில் இந்த வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படும்போது நீங்கள் மிகவும் பலவீனமானவராகவும் சோர்வாகவும் காணப்படுவீர்கள். அதுமட்டுமல்லாமல் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய பல நோய்களும் இதனால் ஏற்படக்கூடும்.

இந்த நோய்க்கான அறிகுறிகளை அவ்வளவு சீக்கிரம் கண்டறிய முடியாது. இவை இயற்கையிலேயே மரபு வழி காரணங்களாலும் ஏற்படுவதால் சில நேரங்களில் வேறு ஏதேனும் நோய்க்கான அறிகுறியை நாம் பி12 குறைபாடு எனவும் தவறாக நினைத்துக் கொள்ள வாய்ப்புகள் அதிகம். உங்களுக்கு பி12 குறைபாடு உள்ளதா? என்பதை கண்டறிய ஒரே வழி அதற்கான சோதனையை மேற்கொள்வது மட்டும்தான்.

இதயத்துடிப்பும் வைட்டமின் பி2 குறைபாடும்

இந்த வைட்டமின் பி12 குறைபாட்டிற்கும் இதய துடிப்பிற்கும் மிக நெருங்கிய ஒரு தொடர்பு உள்ளது இந்த வைட்டமின் பி12 தான் ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களை உருவாக காரணமாக உள்ளது ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் தான் ஆக்ஸிஜனை உடல் முழுவதும் எடுத்துச் செல்லும் வேலையை செய்கின்றன. எனவே வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படும் போது சிவப்பணுக்களின் எண்ணிக்கையும் குறையும்.இதனால் நம்முடைய உடலின் பல உறுப்புகளுக்கும் ஆக்சிஜன் கடத்திச் செல்வதில் குறைபாடு ஏற்படும். இந்த நேரத்தில் உடலுக்கு அதிக ஆக்சிஜனை கடத்துவதற்காக இதயம் அந்த வேலையை எடுத்துக்கொண்டு அதிக அளவு ஆக்சிஜனை கொடுப்பதற்காக மிக வேகமாக துடிக்க ஆரம்பிக்கும் இது உடலுக்கு மிகப்பெரும் தீங்கினை விளைவிக்கும். இதயத்திற்கும் தீங்காக முடியும்.

ரீஃபைண்ட் ஆயில் ஒரு நாளைக்கு எந்த அளவில் பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு நல்லது..? கட்டுப்படுத்தும் வழிகள்...

பி12 இருப்பதற்கான வேறு அறிகுறிகள் :

தசைகள் வலிமையற்று இருப்பது உள்ளங்கைகளிலும், கால் பாதத்திலும் குத்துவது போன்ற ஒரு உணர்வு, உடல் சக்தியற்று மிகவும் சோர்வாக இருப்பது பி12 அனிமியா எனப்படும் பி12 குறைப்பாடுக்கான அறிகுறி ஆகும். மேலும் நடக்கும் போது ஒரு வித எரிச்சல், சில சமயங்களில் குமட்டல், பசியின்மை, வயிற்றுப்போக்கு மற்றும் உடல் எடை குறைதல் ஆகியவையும் வைட்டமின் பி 12 குறைபாடு இருப்பதற்கான அறிகுறிகள் ஆகும்.

பி12 குறைபாடுக்கான சோதனை :

உங்களுக்கு வைட்டமின் பி12 குறைபாடு இருப்பதாக சந்தேகம் இருந்தால் அதற்கான சோதனையை செய்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இதற்காக நீங்கள் ஒரு மருத்துவரை அணுகி உங்கள் ரத்த மாதிரியை எடுத்து அதன் மூலமே உங்களுக்கு பி12 குறைபாடு உள்ளதா என்பதை எளிதாக கண்டறிந்து கொள்ளலாம். உங்களின் உடல் நிலையை பொறுத்து அல்லது வேறு சில தகவல்களை பெரும் பொருட்டும் உங்கள் மருத்துவர் ரத்த பரிசோதனை மட்டுமல்லாமல் வேறு சில பரிசோதனைகளும் உங்களுக்கு பரிந்துரைக்கலாம்.

ரொம்ப டல்லா பீல் பண்றீங்களா..? உங்களை ஹேப்பி மூடிற்கு கொண்டு செல்லும் இந்த உணவுகளை சாப்பிடுங்க...வைட்டமின் பி12 அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் :

வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால் நீங்கள் இந்த உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்வதன் மூலம் உங்கள் உடலில் அந்த ஊட்டச்சத்தினை அதிகரிக்கலாம். மாமிசங்கள், மீன், பால், முட்டை, சீஸ், மற்றும் முளைகட்டிய தானிய வகைகள் ஆகியவற்றில் இந்த பி12 அதிகமாக உள்ளது.

ஹார்ட் அட்டாக் மற்றும் கார்டியாக் அரெஸ்ட் இடையே உள்ள வித்தியாசங்கள் என்ன..? மருத்துவரின் விளக்கம்

சிகிச்சை முறை :

சில வெறும் பி12 ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் மட்டும் இந்த நோயை சரி செய்து விடாது. அதற்கான சரியான முறையான சிகிச்சையும் மேற்கொள்வது அவசியம். இது போன்ற சமயங்களில் மருத்துவரை அணுகி அவரிடம் ஆலோசனை பெற வேண்டும் உங்களின் உடல் நலனை ஆராய்ந்த பிறகு அவர் ஊசியோ அல்லது இந்த குறைபாடை சரி செய்வதற்கான வேறு பல மருந்துகளையும் உங்களுக்கு பரிந்துரைக்கலாம். மேலும் உங்கள் உடல்நிலை எந்த அளவிற்கு இதனால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிவதற்காக சில சோதனைகளை செய்ய வேண்டியது அவசியம். இந்த நோயை சரியான நேரத்தில் கண்டறிந்து அதற்குரிய சிகிச்சை அளிப்பதன் மூலம் எதிலிருந்து நாம் முற்றிலுமாக நம்மை காத்துக் கொள்ள முடியும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Vitamin B12, Vitamin Deficiancy

அடுத்த செய்தி