ஆண்மை குறைபாட்டில் இப்படியொரு பிரச்னையா..? எச்சரிக்கும் மருத்துவர்கள்..!

ஆண்மை குறைபாட்டில் இப்படியொரு பிரச்னையா..? எச்சரிக்கும் மருத்துவர்கள்..!

மாதிரி படம்

எந்தவொரு நோய்க்கும் மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்ளும்போது, அந்த மாத்திரைகள் விந்துகளின் எண்ணிக்கையை பாதிக்குமா? என்பது குறித்து மருத்துவர்களிடம் ஆண்கள் கேட்டுத்தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

  • Share this:
விந்தணுக்கள் முழுமையாக இல்லாதது அசோஸ்பெர்மியா (azoospermia) எனப்படும் ஆண்மைக் குறைபாடு என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அண்மைக்காலமாக குழந்தையின்மை பிரச்சனைக்கள் அதிகரித்து வருகின்றன. மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் மன அழுத்தம், தவறான உணவுப் பழக்கவழக்கம் ஆகியவையால் ஆண்களுக்கு மலட்டு தன்மை ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். உலகளவில் சுமார் 30 விழுக்காடுக்கும் மேற்பட்ட ஆண்கள் மலட்டு தன்மை மற்றும் ஆண்மைக் குறைபாட்டால் பாதிக்கப்படுவதாக எச்சரிக்கும் மருத்துவர்கள், இதுகுறித்து ஆண்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

அசோஸ்பெர்மியா (azoospermia) என்பது முழுமையாக விந்தணுக்கள் இல்லாத நிலையாகும். மிகவும் அரிதான இந்த பாதிப்பால் ஒரு விழுக்காடு ஆண்கள் பாதிக்கப்படுவதாக டெல்லியைச் சேர்ந்த கருத்தரிப்பு சிகிச்சை நிபுணர் அஸ்வதி நாயர் கூறியுள்ளார். எந்தவொரு நோய்க்கும் மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்ளும்போது, அந்த மாத்திரைகள் விந்துகளின் எண்ணிக்கையை பாதிக்குமா? என்பது குறித்து மருத்துவர்களிடம் ஆண்கள் கேட்டுத்தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.அசோஸ்பெர்மியா குறித்து பேசிய அவர், ஒராண்டுக்கும் மேலாக மனைவியை கருத்தரிக்க வைக்க முடியாமல் இருந்தால், ஆண்கள் தங்களின் விந்தணுக்களை பரிசோதிக்க வேண்டும் என கூறியுள்ளார். விந்தணுக்களில் பிரச்சனைகள் இருந்தால் கருத்தரிக்க வாய்ப்பில்லை எனக் கூறிய அஸ்வதி நாயர், விந்தணுக்கள் குறைபாடு முதல் விந்தணுக்கள் இல்லாத நிலையான அசோஸ்பெர்மியா பாதிப்பு வரை இருக்கலாம் என தெரிவித்துள்ளார். முன்கூட்டியே மருத்துவரிடம் சென்று விந்தணுக்களை பரிசோதனை செய்யும்போது விந்தணுக்கள் இல்லாத நிலைக்கு செல்வதை தடுக்கலாம் என அஸ்வதி நாயர் தெரிவித்துள்ளார்.

ஆண்மைச் சுரப்பி என்ற புரோஸ்டேட் (Prostate), சிறுநீர்ப் பையின் அருகே இருக்கும். இதில் சுரக்கும் பசை போன்ற பொருளும் விந்தணுப் பையிலிருந்து உருவாகும் திரவமும் சேரும்போதுதான் விந்தாகிறது. விந்தணுக்கள் இல்லாத நிலையான அசோஸ்பெர்மியாவானது, தடை செய்யும் அசோஸ்பெர்மியா மற்றும் தடை செய்யப்படாத அசோஸ்பெர்மியா இருவகை பாதிப்புகளை கொண்டது. தடை செய்யும் அசோஸ்பெர்மியாவில் விதைப்பையில் விந்தணுக்கள் எல்லாம் உருவாகும், ஆனால் அதை வெளியேற்றுவதில் தடை இருப்பதை காட்டுகிறது. தடைசெய்யாத அசோஸ்பெர்மியாவில் விந்தணுக்கள் உற்பத்தியிலே குறைபாடு இருக்கும்.தடை செய்யப்பட்ட அசோஸ்பெர்மியா; இந்த பாதிப்பு ஜீன்கள் குறைபாடு அல்லது உறுப்பு பாதிப்பினால் ஏற்படும், விதை அல்லது புரோஸ்ரேட் தொற்று ஏற்பட்டு கவனிக்காமல் விட்டுவிட்டால் விந்தணுக்கள் குறைபாட்டை ஏற்படுத்திவிடும். முதுகுதண்டவடம், இடுப்பு, ஆண் உறுப்பு மற்றும் அடிவயிற்றில் ஏதேனும் பிரச்சனைகள் அல்லது அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தால் விந்தணுக்கள் குறைபாடு உருவாக வாய்ப்புகள் உள்ளன.

தடை செய்யப்படாத அசோஸ்பெர்மியா என்பது புற்றுநோய்க்கு மாத்திரை எடுத்திருந்தால் உருவாகும். ஆன்டிபயாடிக்ஸ் மற்றும் ஸ்டீராய்டு மாத்திரைகளை எடுத்துக்கொள்பவர்களுக்கு விந்தணு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும். மதுப்பழக்கம், புகைப்பிடித்தல் ஆகியவையும், கீமோதெரபி அல்லது கதிர்வீச்சு சிகிச்சை எடுத்துக்கொண்டவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

அசோஸ்பெர்மியா அறிகுறிகள் :

* மனைவியை கருத்தருக்க இயலாமை
* உடல் பருமன் பாதிப்பு
* முடி உதிர்தல்
* விதைப்பை சுருங்குதல் அல்லது உணர்ச்சியில்லாமை
* குறைந்த நேரத்தில் உடலுறவு

சிகிச்சை முறை

விந்தணுக்கள் உற்பத்திக்கு அளிக்கப்படும் அதே சிகிச்சை முறை இந்த பாதிப்புக்கும் பின்பற்றப்படும். பாதிக்கப்பட்டவரின் விந்தணுக்கள், ரத்தமாதிரிகள் மற்றும் மூளையின் பிட்யூட்டரி செயல்பாடு ஆகியவை பரிசோதனை செய்யப்படும். பின்னர், பாலியல் விருப்பம் மற்றும் ஏற்கனவே எடுத்துக்கொண்ட சிகிச்சை முறைகள் தொடர்பாக மருத்துவர்கள் உங்களிடம் விவாதிப்பார்கள். குறிப்பாக, கேன்சருக்காக கீமோ தெரபி சிகிச்சை எடுக்கப்பட்டிருந்தால் அல்லது அதிக வெப்பம் உடைய பகுதிகளில் பணியாற்றுகிறீர்களா என மருத்துவர் உங்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வார்கள். தடை செய்யப்பட்ட அசோஸ்பெர்மியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அறுவை சிகிச்சை மூலம் பாதிக்கப்பட்ட வால்வுகளை சரி செய்யும் சிகிச்சைகளை மேற்கொள்வார்கள்.பெரும்பாலும் அறுவை சிகிச்சை முறை பெரிய பலன்களை இதுவரை கொடுக்கவில்லை.

ஓரல் செக்ஸில் உச்ச கட்டம் என்பது பாலியல் அத்துமீறலா..? துணைக்கு பிடிக்காதோ என நினைக்கிறீர்களா? உங்களுக்கான பதில் இதோ..

தடைசெய்யப்படாத அசோஸ்பெர்மியாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, விந்தணுக்களை பிரித்து எடுத்து பயோலாஜிக்கல் முறையில் குழந்தையை உருவாக்குவதற்கான வழி உண்டு. இத்தகைய பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க ஆரோக்கியமான உணவு முறைகளை பின்பற்றுவது அவசியமாகும். அதிக நேரம் ஓய்வெடுக்க வேண்டும், மன அழுத்தம் இல்லாமல் மன அமைதியுடன் இருக்க வேண்டும். திரவ உணவுகளை அதிக அளவில் எடுத்துக்கொள்வதுடன், விந்தணு குறைபாடு குறித்து மருத்துவர்களை முன்கூட்டியே சந்தித்து ஆலோசனை பெற்றுக்கொள்வது, இந்த நோய் பாதிப்புகளில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.

 
Published by:Sivaranjani E
First published: