ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

நடிகர் ஆயுஷ்மான் குரானாவுக்கு இப்படியொரு பாதிப்பா..? அறிகுறிகளை பகிர்ந்துகொண்ட பதிவு..!

நடிகர் ஆயுஷ்மான் குரானாவுக்கு இப்படியொரு பாதிப்பா..? அறிகுறிகளை பகிர்ந்துகொண்ட பதிவு..!

ஆயுஷ்மான் குரானா

ஆயுஷ்மான் குரானா

வெர்டிகோ என்பது சமநிலை கோளாறு ஆகும். உள் காதுகளில் ஏற்படும் அசாதாரண மாற்றங்களினாலும் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் தான் காதுகளை பட்ஸ் அல்லது ஊக்கு வைத்து காதில் உள்ள அழுக்கை நீக்கக்கூடாது என்பார்கள் மருத்துவர்கள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இன்றைக்கு சாமானிய மக்கள் முதல் பிரபலங்கள் வரை பெரும்பாலானோர் சந்திக்கும் பொதுவான உடல் நலப்பிரச்சனைகளில் ஒன்று வெர்டிகோ எனப்படும் உடல் சமநிலை கோளாறு. இதனால் அடிக்கடி தலை சுற்றல், கண் பார்வை மங்குதல் மற்றும் காது கேளாதது போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும். இந்நிலையில் தான் இந்த நோயினால் கடந்த 6 ஆண்டுகளாக பெரும் பாதிப்பை சந்தித்த நடிகர் ஆயுஷ்மான் குரானா, வெர்டிகோவுடன் தான் சந்தித்த தனது போராட்டங்களைப் பகிர்ந்துக் கொள்கிறார்.

வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களைத் தேர்வு செய்து நடிப்பவர் தான் ஆயுஷ்மான் குரானா. இவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் சாமானியனாகவே இருக்கும். இவ்வாறு பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக தலை சுற்றல் பாதிப்பை சந்தித்தாகக் கூறியுள்ளார்.

பெரும் போராட்டத்திற்கு பிறகு மீண்ட இவர், இந்த பாதிப்பு உங்களுக்கு ஏற்பட்டால் முதலில், மருத்துவரிடம் ஆலோசனைப் பெறுவது முக்கியம் என தெரிவித்தார். மேலும் தியானமும், மன அமைதியும் தன்னை ஒருநிலைப்படுத்தியதோடு அனைத்துப் பிரச்சனைகளையும் சரிசெய்ய தீர்வாக அமைந்தது என்கிறார். எனவே இப்பிரச்சனைக்காக மருத்துகள் சாப்பிடுவதோடு சில தியானங்களையும் முறையாக மேற்கொள்ள வேண்டும் என்கிறார் ஆயுஷ்மான் குரானா..

பொதுவாக அனைவரும் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்றான வெர்டிகோ என்றால் என்ன? என்னென்ன அறிகுறிகள்? என்பது குறித்து முதலில் அறிந்துக்கொள்வது அவசியம்.

வெர்டிகோ என்றால் என்ன..?

வெர்டிகோ என்பது சமநிலை கோளாறு ஆகும். உள் காதுகளில் ஏற்படும் அசாதாரண மாற்றங்களினாலும் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் தான் காதுகளை பட்ஸ் அல்லது ஊக்கு வைத்து காதில் உள்ள அழுக்கை நீக்கக்கூடாது என்பார்கள் மருத்துவர்கள். இதனால் பலருக்கு தலைசுற்றல் மற்றும் காது கேளாத தன்மையை ஏற்படுத்துகிறது. இதோடு ஒவ்வொரு நபர்களுக்கும் வித்தியாசமான பாதிப்பு மற்றும் அறிகுறிகளையும் உண்டாக்குகிறது.

Also Read : இந்த 8 அறிகுறிகள் இருந்தா நீங்க கர்ப்பமாக இருக்கலாம்..!

வெர்டிகோவின் அறிகுறிகள்..

தலைசுற்றல் மற்றும் காது கேளாத தன்மை மட்டும் வெர்டிகோவிற்குப் பிரச்சனை கிடையாது. இதனால் கண்களில் அசாதாரண செயல்கள், கண் பார்வை மங்குதல், வாந்தி மற்றும் குமட்டல், அதிகளவு வியர்தல், தலைவலி, காது கோளாத தன்மை மற்றும் நடைபயிற்சியில் சிரமம் போன்றவை ஏற்படும். இதுவே இதன் அறிகுறிகளாகவும் பார்க்கப்படுகிறது. எனவே இதுப்போன்று உங்களுக்கும் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சைப் பெற்றுக் கொள்வது அவசியமான ஒன்று.

வெர்டிகோ பாதிப்பிற்கான சிகிச்சை…

சில நேரங்களில் உடல் அசைவுகள் குறைவதால் கூட வெர்டிகோ பிரச்சனை உண்டாகும். எனவே போதுமான உடல் செயல்பாட்டையும், அதே நேரத்தில் போதுமான அளவு நிம்மதியான தூக்கம் அவசியமான ஒன்று. அதே நேரத்தில் உங்களுக்குத் தலை சுற்றல் பிரச்சனை அதிகமாக இருக்கும் பட்சத்தில், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

நோய்த்தொற்றின் காரணமாக வெர்டிகோவால் பாதிக்கப்படுபவர்களுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பரிந்துரைக்கப்படுகின்றன. மேலும் மருத்துவர்களால் தலை அசைவுகள் தொடர்பான சில உடற்பயிற்சிகளும் செய்ய பரிந்துரைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. எனவே ஆரம்பத்திலேயே நீங்கள் இதை கண்டறிந்து குணப்படுத்திவிட்டீர்கள் என்றால், நிச்சயம் எவ்வித பாதிப்பும் உங்களுக்கு ஏற்படாது.

First published:

Tags: Ayushmann Khurrana