கொரோனாவில் குழந்தைகளை பாதுகாப்பது எப்படி? வழிகாட்டுதல்களை வெளியிட்டது ஆயுஷ் அமைச்சகம்!

மாதிரி படம்

கோவிட் -19 நோய்த்தொற்று உள்ள பெரும்பாலான குழந்தைகளுக்கு எந்தவொரு குறிப்பிட்ட சிகிச்சையும் தேவையில்லை

  • Share this:
கொரோனாவின் 3ம் அலை தற்போதுள்ள இரண்டாம் அலை பாதிப்பை விட தீவிர விளைவுகளை ஏற்படுத்தலாம் என்றும், மேலும் இந்த சமயத்தில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படலாம் என்றும் பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதன் காரணமாக கொரோனாவில் இருந்து குழந்தைகளை மீட்க எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆயுஷ் அமைச்சகம் சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

அதில், ஆயுர்வேத மருந்து மற்றும் இயற்கை மருந்துகள் மூலம் தடுப்பு, சுகாதாரப் பாதுகாப்பு, முகக்கவசங்கள் அணிவது, யோகா செய்வது, ஐந்து முக்கிய எச்சரிக்கை அறிகுறிகளைக் கண்காணித்தல், தொலைபேசி ஆலோசனைகளைத் தேர்ந்தெடுப்பது மற்றும் பெற்றோர்கள் தடுப்பூசி போடுவது உள்ளிட்டவை குழந்தைகளின் பாதுகாப்பிற்காக ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டுதல் ஆவணத்தில் விவரிக்கப்பட்டுள்ளன.

அமைச்சகம் வெளியிட்ட 58 பக்க ஆவணத்தை மதிப்பாய்வு செய்த நியூஸ் 18, “ தொற்றுநோயானது பொதுவாக பெரியவர்களை விட குழந்தைகளில் லேசானதாக இருந்தாலும், கோவிட் -19 நோய்த்தொற்று உள்ள பெரும்பாலான குழந்தைகளுக்கு எந்தவொரு குறிப்பிட்ட சிகிச்சையும் தேவையில்லை. இந்த கொடிய வைரஸிலிருந்து குழந்தைகளை காப்பாற்றுவதற்கான சிறந்த அணுகுமுறை தற்காப்பு தான் (தடுப்பு சிகிச்சை) என்று அதில் குறிப்பிட்டுள்ளதாக, ” தெரிவித்துள்ளது.

Also Read:   கட்சித் தலைவருக்கே எதிராக போர்க்கொடி தூக்கிய எம்.பிக்கள்.. தனித்து விடப்பட்ட சிராக் பஸ்வான்!

மேலும் அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, "இதுவரை நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளில், சில ஆயுர்வேத மருந்துகள் கொரோனா சிகிச்சையில் அவற்றின் செயல்திறனைக் காட்டியுள்ளன என்று வழிகாட்டுதல்களில் கூறப்பட்டுள்ளது. உடல் பருமன், டைப்-1 நீரிழிவு, நாள்பட்ட இருதய நோய், அல்லது நோயெதிர்ப்பு அடங்கிய நிலையில் உள்ள மருத்துவ இணை நோயின் வரலாறு கொண்ட குழந்தைகள் அதிக ஆபத்தில் இருக்கலாம் என்று ஆவணம் குறிப்பிடுகிறது. குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் வலுவானது. ஆனால் பல பிறழ்வு வைரஸ் விகாரங்கள் உருவாகி வருகின்றன என்றாலும், அதன் விளைவைத் தடுக்க கோவிட் -19 தொடர்பான அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டியது அவசியம்" என்று அது கூறுகிறது.

பெரியவர்களுக்கு சில வழிகாட்டுதல்களை அமைத்தது போலல்லாமல், குழந்தைகளின் பரந்த வயது வரம்பு மற்றும் உடற்கூறியல், உடலியல், நோயெதிர்ப்பு மற்றும் உளவியல் வேறுபாடுகள் காரணமாக பல்வேறு தடுப்பு மற்றும் மேலாண்மை உத்திகளைத் திட்டமிடுவது மிகவும் கடினம் என்று கூறுகிறது. " இந்த வழிகாட்டுதலானது கோவிட் -19 பொருத்தமான நடத்தை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு துணைபுரியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வழிகாட்டுதல்களை மத்திய அரசு வழங்கிய வழிகாட்டுதல்களுடன் சேர்த்து கடைபிடிக்க வேண்டும் என்று மேலும் அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஒரு தகுதிவாய்ந்த ஆயுஷ் மருத்துவரை அணுகுமாறு பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் அனைத்து வழிகாட்டுதல்களையும் எல்லா குழந்தைகளும் கடைபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

குழந்தைகளுக்கான பாதுகாப்பு ஆலோசனை

குழந்தைகள் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் மற்றும் வீடுகளுக்கு வெளியே இருக்கும் போது முக கவசம் அணிவது குறித்து வழிகாட்டுதல்களில் வலியுறுத்தப்பட்டுள்ளன. குழந்தைகள் கைகளை கழுவவில்லை என்றால், அவர்களுக்கு சிறிய வேடிக்கை நிகழ்வுகளை செய்து காண்பிப்பது உதவியாக இருக்கும். 5-18 வயதுடைய குழந்தைகள் முகக்கவசம் காட்டாயமாக அணிய வேண்டும். அதே நேரத்தில் 2-5 வயது குழந்தைகளுக்கு பெற்றோர் விருப்பத்திற்கேற்ப அணிவிக்கலாம்.

Also Read:  இனி காங்கிரஸ் கட்சி தனித்தே தேர்தல்களை சந்திக்கும்: மகாராஷ்டிரா ஆளும் கூட்டணியில் விரிசல்?

மருத்துவமற்ற அல்லது மூன்று அடுக்கு கொண்ட காட்டன் துணி முகக்கவசங்களை குழந்தைகளுக்கு அணிவிக்கலாம். மேலும் கவர்ச்சிகரமான, வண்ணமயமான மற்றும் நவநாகரீக முகக்கவசங்களை குழந்தைகளுக்கு வாங்கி கொடுப்பதன் மூலம் அவர்கள் மாஸ்குகளை ஆர்வத்துடன் அணிவர். பெரும்பாலும் குழந்தைகள் சாத்தியமான வரம்பில் வீட்டிலேயே இருக்க வேண்டும், பயணத்தைத் தவிர்க்க வேண்டும், மேலும் வீடியோ மற்றும் தொலைபேசி அழைப்புகள் மூலம் நண்பர்கள் மற்றும் நீட்டிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்ந்து இணைந்திருக்க அவர்களுக்கு பெற்றோர்கள் உதவ வேண்டும்.

வயதானவர்கள் கடுமையான நோய்க்கான அதிக ஆபத்தில் இருப்பதால், கொரோனா அறிகுறி கொண்ட குழந்தைகள் தங்கள் தாத்தா பாட்டிகளுடன் தொடர்பு கொள்ளக்கூடாது என்று வழிகாட்டுதல்கள் கூறுகின்றன. நான்கு முதல் ஐந்து நாட்களுக்கு அப்பால் நீடிக்கும் காய்ச்சல், வாய்வழி உட்கொள்ளல் குறைதல், குழந்தை சோம்பலாக மாறுதல், சுவாச வீதம் அதிகரித்தல் மற்றும் ஆக்ஸிஜன் செறிவு 95%க்கும் கீழ் குறைதல் ஆகிய ஐந்தும் எச்சரிக்கை அறிகுறிகள் குழந்தைகளில் இருக்கிறதா என கண்காணிக்க பெற்றோருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுபோன்ற அறிகுறிகள் யாருக்காவது இருந்தால் காட்டாயம் மருத்துவ பரிசோதனையை எடுக்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பெற்றோர் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?

குழந்தைகளுக்கு குடிக்க வெதுவெதுப்பான தண்ணீர் கொடுக்க வேண்டும். இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை காலையிலும் இரவிலும் சரியாக பல் துலக்க வைப்பதன் மூலம் அவர்களின் சுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டும். மேலும் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை ஆயில் புல்லிங் செய்ய வைத்து வெதுவெதுப்பான நீரில் கொப்பளிக்க வைக்க வேண்டும். எண்ணெய் மசாஜ், நாசியில் எண்ணெய் செலுத்துவது, மற்றும் பிராணயாமா போன்ற யோகா பயிற்சிகள் மற்றும் 5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளின் திறனுக்கு ஏற்ப தியானம் மற்றும் பிற பயிற்சிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று ஆயுஷ் வழிகாட்டுதல்கள் தெரிவிக்கின்றன.

ஆயுர்வேத தற்காப்பு நடவடிக்கைகள் மற்றும் மஞ்சள் கலந்த சூடான பால், சவன்பிரஷ் மற்றும் பாரம்பரிய மூலிகைகள் (ஆயுஷ் பால் குவாத்) கொண்ட காபி, மற்றும் அறிகுறி குழந்தைகளுக்கான ஆயுர்வேத மருந்துகள் ஆயுர்வேத பயிற்சியாளர்களின் வழிகாட்டுதலுக்காக குறிப்பிடப்பட்டுள்ளன.

குறிப்பாக குழந்தைகளுக்கு போதுமான தூக்கம் மற்றும் எளிதில் ஜீரணிக்கக்கூடிய, புதிய மற்றும் சூடான மற்றும் சீரான உணவு கிடைக்க வேண்டும். ஒவ்வொரு மாலையும் குழந்தைகளின் விளையாட்டுப் பகுதி, கட்டில், படுக்கைகள், துணி மற்றும் பொம்மைகளில் நுண்ணுயிர் எதிர்ப்பைத் தூண்டும் வகையில் அதனை கிருமி நாசினி செய்ய வேண்டும் என வழிக்காட்டுதல்களில் கூறப்பட்டுள்ளது.
Published by:Arun
First published: