Home /News /lifestyle /

வறட்டு இருமல் வாட்டி வதைக்குதா..? இதை ட்ரை பண்ணிப்பாருங்க..!

வறட்டு இருமல் வாட்டி வதைக்குதா..? இதை ட்ரை பண்ணிப்பாருங்க..!

வறட்டு இருமல்

வறட்டு இருமல்

வறட்டு இருமலை போக்க அலோபதி மருத்துவத்தில் பல தீர்வுகள் இருந்தாலும், பலருக்கு அவை பொருத்துவது கிடையாது. அலோபதியால் மருத்துவத்தால் சரியான நிவாரணம் கிடைக்காதவர்களுக்கு ஆயுர்வேதம் நல்ல பலன்களைக் கொடுக்க கூடியதாக இருக்கிறது.

குளிர் மற்றும் மழை காலங்களில் ஜலதோஷம் பிடிப்பதால் வரும் இருமலை விட, நார்மலான நேரங்களில் வரும் வறட்டு இருமல் என்பது நம்மை வாட்டி வதைக்க கூடியது. இது வெளிப்புற மற்றும் உள் காரணிகளால் ஏற்படும் ஒரு பொதுவான நிலையாகும். வறட்டு இருமல் அல்லது ஒவ்வாமையைத் தூண்டும் வானிலை மாறிக்கொண்டே இருக்கலாம்.

அது எதுவாக இருந்தாலும், அது மிகவும் எரிச்சலூட்டும் மற்றும் சில நேரங்களில் வலிமிகுந்ததாக இருக்கும். வறட்டு இருமலை போக்க அலோபதி மருத்துவத்தில் பல தீர்வுகள் இருந்தாலும், பலருக்கு அவை பொருத்துவது கிடையாது. அலோபதியால் மருத்துவத்தால் சரியான நிவாரணம் கிடைக்காதவர்களுக்கு ஆயுர்வேதம் நல்ல பலன்களைக் கொடுக்க கூடியதாக இருக்கிறது. வறட்டு இருமலை சரி செய்யக்கூடிய மிகவும் பயனுள்ள சில ஆயுர்வேத வைத்தியங்களைப் டாக்டர் மிஹிர் காத்ரி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் "வறட்டு இருமல் மிகவும் எரிச்சலூட்டும், ஏனென்றால் உங்களால் தூங்கக்கூட முடியாது. நீங்கள் தூங்க முயற்சிக்கும் போதெல்லாம், அது மோசமாகிவிடும். வறட்டு இருமல் ஏற்படும் போது மஞ்சள், துளசி மற்றும் தேன் ஆகியவற்றை முயற்சிப்பது எந்த வகையிலும் பலனளிக்காதது. ஏனெனில் அவை சளி நிறைந்த இருமலுக்கு மட்டுமே சரியான தீர்வாக இருக்கும்” என்கிறார்.

வறட்டு இருமலை குணப்படுத்த, டாக்டர் காத்ரி வெளிப்புறம் மற்றும் உட்புறம் செயல்படக்கூடிய சிகிச்சை முறைகளை பகிர்ந்துள்ளார். வறட்டு இருமல் ஏற்படும் போது கழுத்து மற்றும் மார்பு பகுதிகளில் உப்பு கலந்த கடுகு எண்ணெய்யை தேய்த்துக் கொள்வது நல்ல பலனைக் கொடுக்கும் என அறிவுறுத்தியுள்ளார்.




வறட்டு இருமலை உள்ளிருந்து சரி செய்யக்கூடிய வைத்தியத்திற்கு, ​​​​தொண்டையுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் பொருட்களை உட்கொள்வது நல்லது என பரிந்துரைக்கிறார். நான்கு ஏலக்காய் துண்டுகள், அரை ஸ்பூன் சர்க்கரை மற்றும் அரை ஸ்பூன் சுத்தமான பசு நெய் ஆகியவற்றின் கலவையை எடுத்து கொள்வது நல்லது என காத்ரி பரிந்துரைக்கிறார்.

உங்களுக்கே தெரியாமல் உங்கள் சிறுநீரகங்களை பாதிக்க கூடிய பழக்கவழக்கங்கள்...

வறட்டு இருமலில் இருந்து முற்றிலும் நிவாரணம் கிடைக்கும் வரை, இந்த கலவையை ஒரு நாளைக்கு மூன்று முறை சாப்பிட வேண்டும். நீங்கள் வறட்டு இருமலால் பாதிக்கப்பட்ட நீரிழிவு நோயாளியாக இருந்தால், உள் மருந்து கலவையில் சர்க்கரையை தவிர்த்துவிட்டு, பிற பொருட்களை மட்டும் கலந்து ஒருநாளைக்கு மூன்று முறை உட்கொள்ளலாம்.



வறட்டு இருமலை போக்க வேண்டுமெனில் அதனை சரியான நேரத்தில் கண்காணித்து, சரியான மருத்துக்களை எடுத்துக்கொண்டால் மட்டுமே சாத்தியமாகும். ஏனெனில் கவனக்குறைவால் வறட்டு இருமல் மோசமானால், இந்த உடனடி தீர்வுகள் உங்களுக்கு கைகொடுக்காது என அறிவுறுத்தியுள்ள மருத்துவர் காத்ரி, மோசமடைந்த வறட்டு இருமலை தீர்க்க நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களின் உதவியை நாடுவது நல்ல எனத் தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலமாக அவர் பதிவிட்டுள்ள இந்த வீடியோ வைரலாகியுள்ள நிலையில், பலரும் தங்களது வீட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என்ன மாதிரியான அளவுகளில் மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என ஆலோசனை கேட்டு வருகின்றனர்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Dry Cough, Home remedies

அடுத்த செய்தி