Home /News /lifestyle /

சரும பிரச்சனைகளை உண்டாக்கும் அதிக மன அழுத்தம் : விளக்குகிறார் ஆயுர்வேத மருத்துவர்...

சரும பிரச்சனைகளை உண்டாக்கும் அதிக மன அழுத்தம் : விளக்குகிறார் ஆயுர்வேத மருத்துவர்...

மன அழுத்தம்

மன அழுத்தம்

ஆயுர்வேத மருத்துவமானது மனநல ஆரோக்கியத்திற்கு மிகப்பெரும் முக்கியத்துவத்தை அளிக்கின்றது. ஏனெனில் மனநல ஆரோக்கியம் என்பது ஒரு மனிதனின் ஹார்மோன் சுரப்பிகளுக்கும், மேலே குறிப்பிட்ட வாதம், பித்தம், கபம் ஆகியவற்றின் சமநிலைக்கும் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
இன்று பலரும் தன்னுடைய சருமத்தை பாதுகாக்க என்னென்னவோ செய்து வருகிறார்கள். முக்கியமாக பெண்கள்பல வித க்ரீம்களையும், இன்னும் விதவிதமான அழகு சாதன பொருட்களையும் பயன்படுத்தி தன்னுடைய சருமத்தை அழகாகவும், பொலிவாகவும் வைத்திருக்க முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால் இவை அனைத்தையும் விட நம் மனதை அமைதியாக வைத்திருந்தாலே நம்முடைய சருமமும் மிக அழகாக இருக்கும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?

டாக்டர் நித்திகா கோழி என்னும் எய்மல் ஹெல்த்கேர் -ஐ சேர்ந்த ஆயுர்வேத மருத்துவ வல்லுநர் தான் மனநல ஆரோக்கியத்திற்கும், சரும பிரச்சனைக்கும் உள்ள தொடர்பு குறித்து விளக்கியுள்ளார்.

ஆயுர்வேத மருத்துவம் என்பது தற்கால அலோபதி மருத்துவத்தைப் போல் அல்லாமல் முழுக்க முழுக்க இயற்கை பொருளை கொண்டு நோயை குணப்படுத்தும் முறையாகும். தற்போது ஏற்பட்டுள்ள நோய்க்கு மட்டும் தெரிவை கொடுக்காமல், அந்த நோய்க்கான அடிப்படை காரணத்தை கண்டறிந்து அதை குணப்படுவத்தின் மூலம் அந்த நோய் மீண்டும் வராமலும் காத்து உதவி செய்கிறது. இந்த ஆயுர்வேத மருத்துவம் பண்டைய இந்தியாவின் பழங்கால மருத்துவ முறைகளில் ஒன்றாகும். முக்கியமாக மனித உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் ஆகியவற்றின் சமநிலையில் ஏற்படும் கோளாறினால் நோய்கள் ஏற்படுகின்றன என்பதை கண்டறிந்து அவற்றில் சமநிலையை ஏற்படுத்த முயற்சி செய்கிறது.இந்த ஆயுர்வேத மருத்துவமானது மனநல ஆரோக்கியத்திற்கு மிகப்பெரும் முக்கியத்துவத்தை அளிக்கின்றது. ஏனெனில் மனநல ஆரோக்கியம் என்பது ஒரு மனிதனின் ஹார்மோன் சுரப்பிகளுக்கும், மேலே குறிப்பிட்ட வாதம், பித்தம், கபம் ஆகியவற்றின் சமநிலைக்கும் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

தவறாக புரிந்து கொள்ளப்படும் ஹார்ட் அட்டாக் அறிகுறிகள் - உண்மையான அறிகுறிகளை தெரிந்துகொள்ளுங்கள்

இதுகுறித்து தன்னுடைய கருத்தை கூறிய டாக்டர் நித்திகா கோஹ்லி, நம்முடைய மனநல ஆரோக்கியத்திற்கும் நம்மில் பலருக்கு ஏற்படும் சரும பிரச்சனைகளுக்கும் மிகப்பெரிய அளவில் தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். உதாரணத்திற்கு நாம் மிகப் பெரும் அளவில் மன அழுத்தத்திற்கு உள்ளாகும் போது, அதன் விளைவாக நாம் சரியாக தூங்காமல் சரியான நேரத்தில் உணவு உட்கொள்ளாமலும் இருப்போம். இது நேரடியாக நமது சருமத்தை தாக்கி முகப்பரு போன்ற பிரச்சனைகளுக்கு காரணமாக அமைகிறது. எனவே இதுபோன்ற நேரங்களில் ஒரு ஆழமான சுவாசத்தை மேற்கொண்டு மனதை அமைதியாக வைத்திருப்பது பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்கும்.

மேலும் சிலருக்கு இது போன்ற மனநிலை பிரச்சனைகள் ஏற்படும் போது, தனக்கு பிடித்த உணவு உண்பதையே ஒரு ஆறுதலாக கருதி மனம் அமைதி இல்லாமல் இருக்கும்போதெல்லாம் உணவை உட்கொண்டு மகிழ்கின்றனர். இதுபோன்று அதிக அளவில் நமக்குப் பிடித்த உணவை உண்ணும் போது நமது உடலானது டோபமைன் எனப்படும் வேதிப்பொருளை சுரக்கிறது. இந்த வேதிப்பொருளானது நம்முடைய உடலில் உள்ள கொழுப்புச்சத்தின் அளவில் பெரும் அளவில் மாற்றத்தை கொண்டு வருவதன் மூலம் நம்முடைய தோலின் நிறத்திலும் மாற்றங்களை நிகழ்த்துகிறது.சிலர் தனக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்படும் போது அதை குறித்து மிகவும் அதிகமாக யோசித்துக் கொண்டே இருப்பார். இவ்வாறு அதிகமாக யோசித்துக் கொண்டே இருப்பது சருமத்தை நேரடியாக தாக்கி, அதை மிகவும் வறண்டதாகவும், சுருக்கத்துடனும் கிட்டத்தட்ட மந்தமாக மாற்றி விடுகிறது. இதன் மூலம் நாம், நமது சருமத்தின் இயற்கை பொலிவையும் அழகையும் இழக்க நேரிடும்.

இன்னும் பலர் மன அழுத்தத்திற்கு உள்ளாகும் போது புகை பிடிப்பதையும் மது அருந்துவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர் அதிகமாக புகை பிடிப்பது சருமத்தில் மிகப்பெரும் ஆறுதலை ஏற்படுத்தி இளம் வயதிலேயே வயதானவரை போன்ற ஒரு தோற்றத்தை கொடுத்து விடும் அது போலவே அதிக அளவில் மது அருந்துபவர்களுக்கு, முகம் வீங்கியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிடும்.

வாயு தொல்லையால் பொதுவெளியில் சங்கடமாக உள்ளதா..? உடனே நிவாரணம் தரும் 5 வீட்டு வைத்தியங்கள்

நீண்ட நாட்களுக்கு மன அழுத்ததுடனேயே இருப்பது, சருமத்தில் மிகப்பெரும் பிரச்சனைகளை ஏற்படுத்தும். சருமமானது தன்னுடைய தன்னுடைய பொலிவை இழப்பதுடன், கண்களுக்கு கீழே வீக்கம், கருவளையம் போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். இது போன்ற பிரச்சனைகளிடம் இருந்து விடுதலை பெற தியானம், உடற்பயிற்சி செய்வது மிகப் பெரும் அளவில் பயன் தரும். முகம் மற்றும் சருமத்திற்கு மட்டுமல்லாமல் மேலும் உடலளவிலும் மனதளவிலும் பல பயன்கள் நமக்கு கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Stress

அடுத்த செய்தி