ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

எடையை குறைக்கும் முயற்சியில் இருக்கிறீர்களா? இந்த கட்டுக்கதைகளை நம்பாதீர்கள்!

எடையை குறைக்கும் முயற்சியில் இருக்கிறீர்களா? இந்த கட்டுக்கதைகளை நம்பாதீர்கள்!

எடை குறைக்கனுமா இந்த கதைகளை நம்பாதீங்க..!

எடை குறைக்கனுமா இந்த கதைகளை நம்பாதீங்க..!

நீங்கள் உடல் எடையை குறைக்க முயன்றால் நீங்கள் இழப்பதை விட குறைவான கலோரிகளை உட்கொள்ள வேண்டும். அதே போல போதுமான புரதம், கொழுப்புகள் மற்றும் பிற நுண்ணூட்டச்சத்துக்களை எடுத்து கொள்வதையும் உறுதிப்படுத்த வேண்டும் என்பதே நிபுணர்களின் அறிவுரை.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு முதல் இதய நோய்கள் வரை பல்வேறு நாள்பட்ட, தீவிர நோய்களுக்கு உடல் பருமன் வழிவகுக்கிறது. எனினும் உடல் பருமன் அல்லது கூடுதல் எடையை குறைக்க முயற்சிக்கும் மக்கள் தங்கள் இலக்கை மிக எளிதாக அடைய முடிவதில்லை. எடையை குறைக்கும் முயற்சிகளில் பல விஷயங்கள் கடைபிடிக்க மற்றும் தவிர்க்க அறிவுறுத்தப்படுகின்றன.

ஆனால் எடையை குறைக்க உதவும் டிப்ஸ்களில் பல தவறான அறிவுரைகள் மற்றும் கட்டுக்கதைகளும் உலா வருகின்றன. அதில் முக்கியமான சில எடையை குறைக்க விரும்பினால் அரிசி உணவுகளை முற்றிலும் தவிர்த்து விட்டு ஓட்ஸை மட்டுமே சாப்பிட வேண்டும் என்பதும், டயட்டில் இருந்து கார்போஹைட்ரேட் முற்றிலுமாக நீக்க வேண்டும் உள்ளிட்ட பல பொதுவான அறிவுரைகளும் அடக்கம். ஆனால் பலர் எடை குறைப்பு முயற்சியை மிகவும் சிக்கலானதாக்கி கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. இதற்காக அரிசி, ரொட்டி அல்லது கார்போஹைட்ரேட்ஸ் போன்ற முக்கிய உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டியதில்லை என்பதை உணர்ந்துள்ளார்கள்.

நீங்கள் உடல் எடையை குறைக்க முயன்றால் நீங்கள் இழப்பதை விட குறைவான கலோரிகளை உட்கொள்ள வேண்டும். அதே போல போதுமான புரதம், கொழுப்புகள் மற்றும் பிற நுண்ணூட்டச்சத்துக்களை எடுத்து கொள்வதையும் உறுதிப்படுத்த வேண்டும் என்பதே நிபுணர்களின் அறிவுரை. எடையை குறைக்க நினைக்கும் ஒருவர் எந்த உணவுகளையும் கைவிடாமல் இலக்கை நோக்கி செல்ல முடியும். எந்த உணவையும் குறைக்காமல் அல்லது சிறிய அளவில் மட்டுமே சாப்பிடாமல் ஒருவர் ஆரோக்கியமாக இருக்க முடியும் என்கிறார் பிரபல ஊட்டச்சத்து நிபுணரான புவன் ரஸ்தோகி.
 
View this post on Instagram

 

A post shared by Bhuvan Rastogi (@bhuvan_rastogi)இவர் தனது சமீபத்திய இன்ஸ்டா போஸ்ட்டில் இந்தியர்களான நாம் பொதுவாக எதற்கெடுத்தாலும் என்ன மாற்றங்கள் தேவைப்படுகின்றன என்று சரியாக தெரியாமலேயே பொதுவான மேற்கத்திய அறிவுரைகள் காரணமாக சில உணவுகளை கைவிடுகிறோம். ஆனால் இந்திய உணவு முறைகளில் இந்த அறிவுரைகளில் வேலை செய்யாது. மேற்கத்திய உணவு முறையும் இந்திய உணவு முறையும் அடிப்படையிலேயே வேறுபட்டிருக்கிறது. பெரும்பாலான நேரங்களில் மேற்கத்திய அறிவுரைகள் ஃபிட்னஸ் முயற்சிகளை வீணடிக்கும் அல்லது எதிர்பாராத பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறார்.

இந்திய உணவுகள் என்று வரும் போது நாம் பின்பற்ற வேண்டிய தேவையில்லாத சில தவறான அறிவுரைகள் என அவர் பட்டியலிட்டுள்ள விஷயங்கள் கீழே:

அனைத்து கார்போஹைட்ரேட்ஸ் உணவுகளையும் உங்கள் டயட்டில் இருந்து அகற்றவும் அல்லது முடிந்தவரை குறைக்கவும்.
அதிக அளவு புரோட்டின் உள்ளடக்கம் கொண்ட உணவுகளை சேர்க்க வேண்டும்.
சாலட்களை உணவாக எடுத்து கொள்ளுங்கள் அல்லது உணவுடன் அதிக அளவு காய்கறிகளை சாப்பிடுங்கள்.
கிரீன் ஜுஸஸ், ஜின்ஜர் டர்மரிக் ஷாட்ஸ், ஹெல்த் ஷாட்ஸ் எடுத்து கொள்ளுங்கள்.
தானியங்களில் ஓட்ஸை மட்டுமே உணவாக எடுத்து கொள்ளுங்கள்.
தானியங்கள், லோக்கல் ஸ்வீட்ஸ், உள்ளூர் பழங்கள், சட்னிகள் மற்றும் பருப்பு வகைகள் போன்ற உள்ளூர் உணவுகளை தவிர்க்க வேண்டும்.
டயட்டில் அவகேடோ பழத்தை சேர்க்க வேண்டும்.
தலைமுறை தலைமுறையாக நீங்கள் சமைத்து வரும் எண்ணெய்களை மாற்றவும்.
First published:

Tags: Health, Lifestyle, Weight loss