சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் இந்த உணவுகளை மட்டும் தயவுசெய்து சாப்பிடாதீங்க!

மாதிரிப்படம்

சிறுநீரக பிரச்சனை உள்ள ஒருவர் சோடா அதிகமாக உட்கொள்வதைத் கட்டாயம் தவிர்க்க வேண்டும். இந்த பானத்தில் பாஸ்பரஸ் அதிக அளவில் உள்ளது. ?

  • Share this:
சிறுநீரகங்கள் மனித உடலில் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். அவற்றின் முக்கிய நோக்கம் என்னவென்றால் இரத்தத்தில் இருந்து அசுத்தங்களை வடிகட்டுவதே ஆகும். மேலும், அவை உடலில் உள்ள கனிம அளவை பராமரிப்பது போன்ற பிற செயல்பாடுகளையும் மேற்கொள்கின்றன. நோய் இல்லாத வாழ்க்கைக்கு ஆரோக்கியமான சிறுநீரக செயல்பாடு மிக அவசியம். எனவே சரியான உணவுத் திட்டம் அனைவரிலும் சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக செயல்படவும் மற்றும் பல நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது. இருப்பினும், சில கேடு விளைவிக்கும் உணவு வகைகளும் உள்ளன. முக்கியமாக சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் அவற்றை அதிகமாக சாப்பிட்டால் சிறுநீரகங்களுக்கு சேதம் ஏற்படலாம்.

சிறுநீரகம் தொடர்பான எந்த வியாதிகளையும் தடுக்க ஒருவர் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்களின் பட்டியல் குறித்து காண்போம்.

1. சிறுநீரக பிரச்சனை உள்ள ஒருவர் சோடா அதிகமாக உட்கொள்வதைத் கட்டாயம் தவிர்க்க வேண்டும். இந்த பானத்தில் பாஸ்பரஸ் அதிக அளவில் உள்ளது. இது சிறுநீரகங்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும்.

2. அதிக சோடியம் கொண்ட பதப்படுத்தப்பட்ட உணவை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

3. முழு கோதுமை ரொட்டியின் நுகர்வு குறைந்தபட்சமாக இருக்க வேண்டும்.

4. பிரவுன் அரிசி சிறுநீரகத்திற்கும் தீங்கு விளைவிக்கும். இதில் பாஸ்பரஸ் மற்றும் சோடியம் நிறைந்துள்ளது. எனவே அதிகபடியாக எடுத்துக்கொள்வதை தடுக்க வேண்டும்.

5. உடலில் அதிகப்படியான பொட்டாசியம் சிறுநீரகத்திலும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். வாழைப்பழத்தில் அதிக பொட்டாசியம் அளவு உள்ளது. அதேபோல தக்காளியில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது. எனவே, வாழைப்பழம் மற்றும் தக்காளியின் அதிக நுகர்வினை குறைத்துக்கொள்ள வேண்டும்.

6. ஆரஞ்சு சிறுநீரகத்திற்கும் தீங்கு விளைவிக்கும். ஆரஞ்சு மட்டுமல்ல, திராட்சை, அவுரிநெல்லிகள் போன்ற பிற சிட்ரிக் பழங்களையும் சிறுநீரக பிரச்சினைகளை சந்திப்பவர்கள் தவிர்க்க வேண்டும்.

7. பதப்படுத்தப்பட்ட இறைச்சி சிறுநீரகங்களுக்கு தீங்கு விளைவிக்கும். ஏனெனில் அதில் அதிக அளவு உப்பு மற்றும் புரதம் உள்ளது.

8. உருளைக்கிழங்கையும் சிறுநீரக நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.

சிறுநீரகத்தை பராமரிக்க இந்த உணவுகளை நீங்கள் சாப்பிடலாம்:

சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நிறைய உணவுகள் உள்ளன. அவற்றை சரியாக சாப்பிட்டு வந்தால், சிறுநீரகத்தை மட்டுமின்றி, உடல் முழுவதையும் ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளலாம்.

சிவப்பு குடைமிளகாய்

சிவப்பு குடைமிளகையிகுடைமிளகாயில் பொட்டாசியம் குறைவாகவும், வைட்டமின்களான ஏ, சி மற்றும் பி6, ஃபோலிக் ஆசிட் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைப்பதோடு, எந்த வகையான புற்றுநோயும் வராமல் தடுக்கலாம்.

முளைகட்டிய பயிர்கள்

முளைக்கட்டிய பச்சைப் பயிர்களை டயட்டில் சேர்ப்பது மிகவும் நல்லது. இந்த முளைக்கட்டிய பயிர்கள் சிறுநீரகத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதோடு, சிறுநீரகத்தில் கற்கள் வராமலும் தடுக்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முட்டைகோஸ்

முட்டைகோஸ் மிகவும் சிறந்த காய்கறி. இந்த காய்கறி சிறுநீரக இயக்கத்தை சீராக வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே இத்தகைய காய்கறிகளையும் உங்கள் டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம்.

ஆப்பிள்

ஆப்பிள் சாப்பிட்டால், இரத்த ஓட்டம் சீராக இருப்பதோடு, இரத்தத்தை சுத்திகரிக்கும் சிறுநீரகமும் சுத்தமாக இருக்கும். எனவே தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வருவது நல்லது.

ஆலிவ் ஆயில்

இந்த எண்ணெய் இதயத்திற்கு மிகவும் சிறந்தது. மேலும் ஆலிவ் ஆயிலில் உள்ள ஃபேட்டி ஆசிட்டுகள், சிறுநீரகத்தை ஆரோக்கியமாக செயல்பட வைக்கின்றன. எனவே சமையலில் ஆலிவ் ஆயிலைப் பயன்படுத்துவது நல்லது.

வெங்காயம்

வெங்காயத்தை அதிகம் சாப்பிட்டால், சிறுநீரக கற்களை வருவதை இயற்கையாகவே தடுக்கலாம். மேலும் இது சிறுநீரகத்தை சுத்தமாகவும் வைத்துக் கொள்ள முடியும்.

இதுதவிர சிவப்பு திராட்சை, முட்டை வெள்ளைக்கரு, மீன் போன்ற உணவுகளையும் சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடலாம். அதேபோல நீர் சத்து உள்ள காய்கறிகளை சாப்பிடுவது, சாப்பிடும் உணவில் உப்பை குறைவாக சேர்த்துக்கொள்வதன் மூலமும் சிறுநீரக ஆரோக்கியத்தை பராமரிக்கலாம்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published: