Weight Loss : உடல் எடை குறைப்பவரா நீங்கள்? காலை 5 மணிக்கு மேல் செய்யக்கூடாதவை!

உடல் எடை

உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் பொதுவாக செய்யக்கூடிய சில தவறுகள் என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

  • Share this:
உடல் எடை குறைப்பது என்பது ஒரு மந்திரக்கோல் அல்ல. நீங்கள் ஸிம்மாக இருக்க வேண்டும் என்றால், ஆரோக்கியமான லைப் ஸ்டைல் மற்றும் டையட்டை முறையாக கடைபிடித்து வர வேண்டும். உட்கார்ந்து கொண்டு வேலை பார்ப்பது, அதிகப்படியான கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை எடுதுக்கொள்ளும்போது உடல் எடையை குறைக்கும் முயற்சிக்கு பலன்கிடைக்காது. உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் பொதுவாக செய்யக்கூடிய சில தவறுகள் என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

இரவு உணவு

இரவு நேரத்தில் உணவை வெளுத்து வாங்குபவர்கள் சிலர் உள்ளனர். வேலை செய்துவிட்டு வீடு திரும்பிய களைப்பில், ருசியான உணவு இருந்தால், நன்றாக சாப்பிட்டுவிடுவார்கள். ஆனால் உடல் எடையை குறைக்க திட்டமிட்டிருப்பவர்கள், பசியுடன் உறங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். பசியுடன் இருப்பது என்பது தவறான நடைமுறையாகும். போதுமான அளவு உணவை சாப்பிட வேண்டும். எளிதில் ஜீரமாகக்கூடியதாக இருப்பது நல்லது. புரதம், ஸ்டார்ச் நிறைந்த காய்கறிகளை சாப்பிடலாம்.

ருசியான உணவு

Weight Loss


உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதால், இரவு உணவு மிகவும் ருசியாக இருக்கக்கூடாது, சாதாரண உணவை மட்டுமே சாப்பிட வேண்டும் என பலர் எண்ணிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், அதில் உண்மையில்லை. நீங்கள் உறங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பு சாப்பிடக்கூடிய உணவு என்பது காய்கறிகள் கலவையாகவும், நல்ல ருசி மிகுந்ததாகவும் எடுத்துக்கொள்வதில் தப்பில்லை. இங்கே கவனிக்கவேண்டிய ஒரே விஷயம், ருசியாக இருக்கிறது என்பதற்காக தேவைக்கு அதிகமாக சாப்பிடக் கூடாது.

ALSO READ :  உடல் எடையை விரைவில் குறைக்க உதவும் ஓமம் : எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா..?

இனிப்பு



இரவு உணவுக்குப் பிறகு இனிப்பு சாப்பிடக் கூடாது என்ற எந்த விதிமுறையும் இல்லை. விருப்பப்பட்டால் நீங்கள் இனிப்பை சாப்பிடலாம். சரியாக திட்டமிட்டு உங்களுக்கு பொருந்தும் இனிப்பை தேர்தெடுத்து அளவாக சாப்பிடுங்கள். உங்களின் நாவில் உள்ள சுவை மொட்டுகளுக்கு நல்ல திருப்தி கிடைக்கும்.

ALSO READ :  லேட்டா தூங்கினால் உடல் எடை அதிகரிக்குமா ?

தூங்கும் நேரம்



இரவில் தூங்கும் நேரத்தை சரியாக பின்பற்ற வேண்டும். சரியான நேரத்தில் தூங்கவில்லை என்றால், தொப்பை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. உடல் எடை கூடும். அதனை விடுத்து மொபைல் போனில் அதிக நேரம் செலவிடுவது, படம் பார்ப்பது, நண்பர்களுடன் தொலைபேசியில் உரையாடுவது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். இரவு அதிக நேரம் விழிந்திருந்தால், வயிறு பசிக்கும். நொறுக்குத் தீனிகள் சாப்பிட தூண்டும்.

ALSO READ :  உடல் எடையை குறைக்க உதவும் சீரக தண்ணீர் - எப்படி குடிப்பது?

டயட்டில் குறைபாடு



டயட் பின்பற்றுபவர்கள், அதனை தொடர்ந்து முறையாக பின்பற்றி வர வேண்டும். ஓரிரு நாட்கள் பின்பற்றிய பிறகு இடையில் இரண்டு நாட்கள் பின்பற்றாமல் மீண்டும் அதனை தொடர்வது என்பது உங்களுக்கு எந்த பயனையும் கொடுக்காது. தொடர்ச்சியான டயட் மட்டுமே உங்களுக்கு நன்மையை கொடுக்கும். டயட் பின்பற்றுவதில் பெரும்பாலானோர் இந்த தவறை செய்கின்றனர்.
Published by:Sankaravadivoo G
First published: