Home » News » Lifestyle » HEALTH AVOID GLOVES IN HAND WHILE SHOPPING GROCERY PRODUCTS OR SUPER MARKETS ESR

சூப்பர் மார்க்கெட் செல்லும்போது கைகளில் கிளவுஸ் அணிவதை ஏன் தவிர்க்க வேண்டும்..?

கிளவுஸ் அணிவது ஆரோக்கியமான பழக்கம்தான் என்றாலும் சூப்பர் மார்கெட் போன்ற இடங்களுக்கு அணிந்து செல்வதை தவிர்க்கலாம்.

சூப்பர் மார்க்கெட் செல்லும்போது கைகளில் கிளவுஸ் அணிவதை ஏன் தவிர்க்க வேண்டும்..?
மாதிரி படம்
  • Share this:
உலக அளவில் கொரோனா எண்ணிக்கை அதிகமாகியிருக்கிறது என்று பேசி வந்த நிலை தற்போது இந்தியாவிலும் அதிகரித்துவிட்டது என்ற சூழல்தான் நிலவி வருகிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 9 வது இடத்திற்கு வந்துள்ளது என்பதே வேதனைக்குரிய விஷயம்தான்.

ஊரடங்கு , மாஸ்க் என இத்தனை கட்டுப்பாடுகளை விதித்தும் கொரோனா வைரஸிலிருந்து தப்ப முடியவில்லை. இருப்பினும் நம்முடைய தற்காப்பு விஷயங்களை ஒருபோதும் செய்யத் தவறக்கூடாது. வெளியே சென்றால் மாஸ்க் போடுவது, சானிடைஸர் பயன்படுத்துவது, கைக்கழுவது போன்ற விஷயங்களை தொடர்ந்து செய்துகொண்டே இருக்க வேண்டும்.

அதேசமயம் சிலர் கைகளில் வைரஸுகள் ஒட்டிக்கொள்ளாமல் இருக்க கை கிளவுஸ் அணிந்து ஷாப்பிங் செல்வது , வீட்டிற்கு தேவையான மளிகை சாமான்கள், பழங்கள் , காய்கறிகள் வாங்கிவருவது என செய்கின்றனர். கிளவுஸ் அணிவது ஆரோக்கியமான பழக்கம்தான் என்றாலும் சூப்பர் மார்கெட் போன்ற இடங்களுக்கு அணிந்து செல்வதை தவிர்க்கலாம்.




ஏன் தெரியுமா.?

அதாவது கிளவுஸ் அணிந்து கொண்டு பொருட்களை தொடுவது, மற்ற மேற்பரப்புகளை தொடுவதால் அங்கிருக்கும் கிருமிகள் கிளவுஸில் ஒட்டிக்கொள்ளலாம். கிளவுஸ் நழுவி விழும் தன்மை கொண்டது என்பதால் அதை மற்ற இடத்தில் பரவ நாமே காரணமாய் இருப்போம். ஏன்... நாம் வாங்கும் உணவுப் பொருட்களிலேயே ஒட்டிக்கொள்ளலாம்.காரம் மட்டுமல்ல... பச்சை மிளகாயில் ஒளிந்திருக்கும் மருத்துவ குணங்கள் தெரியுமா?

அதேசமயம் அந்த கிளவுஸைக் கொண்டு முகத்தில் , மூக்கில் கை வைக்கலாம். அது நம் உடலில் ஆடையிலேயே மற்ற இடங்களில் பரவலாம். அதேபோல் பயன்படுத்திய பின் கிளவுஸை முறையாக தூக்கி போட வேண்டும். அதேசமயம் கட்டாயம் 20 நிமிடங்களுக்கு கை கழுவ வேண்டும்.



இப்படி தொடர்ந்து கிளவுஸ் அணிவதும் கைகளைக் கழுவுவதும் தொற்றை உண்டாக்கலாம். எனவே அதை தவிர்த்து அதற்கு மாற்றாக மற்ற விஷயங்களை பின்பற்றி பாதுகாப்பாய் இருக்கலாம்.

மாற்று வழி என்ன..?

கிளவுஸ் அணிவதற்கு பதிலாக சானிடைசர் கொண்டு செல்லுங்கள். அவ்வபோது சானிடைஸர் கொண்டு கைகளை துடைத்துக்கொள்ளுங்கள். வீட்டிற்கு வந்ததும் உடனே சோப்பு போட்டு கைகளைக் கழுவிவிடுங்கள்.













லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





பார்க்க :

 

 
First published: May 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading