ஒர்க் ஃபிரம் ஹோமில் வேலை செய்பவர்களை பாதிக்கும் ’டிஜிட்டல் சோர்வு’... சரி செய்யும் வழிமுறைகள் என்ன?

ஒர்க் ஃபிரம் ஹோமில் வேலை செய்பவர்களை பாதிக்கும் ’டிஜிட்டல் சோர்வு’... சரி செய்யும் வழிமுறைகள் என்ன?

டிஜிட்டல் சோர்வு

டிஜிட்டல் சோர்வு என்பதை சாதாரணமாக கடந்துவிடாமல் தீவிர பிரச்னையாக நினைப்பது நல்லது. கண்டுக்கொள்ளாமல் விட்டால் எதிர்காலத்தில் பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

  • Share this:
    2020 பலருடைய வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. குறிப்பாக கார்பரேட் வாசிகளுக்கு பெரும் மாற்றம் எனில் அது ஒர்க் ஃபிரம் ஹோம்தான். பரபரப்பான வேலை சூழல், நண்பர்கள், கேண்டீன் என சுற்றித் திறந்தவர்களை வீட்டிலிருந்து வேலை பார்க்க கூறியதுதான் இந்த ஒர்க் ஃபிரம் ஹோம். சற்றும் அனுபவமில்லா இந்த கலாச்சாரம் தற்போது இயல்பாகி விட்டது. அதோடு சில புதிய பிரச்னைகளையும் அனுபவித்து வருகின்றனர். அதில் ஒன்றுதான் டிஜிட்டல் சோர்வு.

    டிஜிட்டல் சோர்வு என்றால் என்ன?

    அதாவது நாள் முழுவதும் நீண்ட நேரம் செல்ஃபோன் மற்றும் லேப்டாப்பை மட்டுமே உற்று நோக்கிக் கொண்டிருப்பதால் வரும் களைப்பும், சோர்வும்தான் டிஜிட்டல் சோர்வு என்கின்றனர். இது ஆரோக்கியமான போக்கும் அல்ல. எந்த வேலையும் செய்யாமல் வெறுமனே நீண்ட நேரம் அமர்ந்திருந்தாலே நோய்களுக்கு பஞ்சமிருக்காது என ஆய்வுகள் கூறுகின்றன. அந்த வகையில் இது கொஞ்சம் சீரியஸான விஷயம்தான். எனவே இதை எப்படி சரி செய்யலாம் என்று பார்க்கலாம்...



    அணைப்பதில் சிரமம் வேண்டாம் : உங்கள் வேலை நேரம் முடிந்துவிட்டது எனில் உடனே லேப்டாப்பை அணைத்துவிட்டு எந்தவித டிஜிட்டல் திரைகளையும் பார்க்காமல் கண்களுக்கு ஓய்வு கொடுங்கள். புத்தகம் வாசிப்பது, வெளியே ஓய்வாக சென்று வருவது, இசை கேட்டு மகிழ்வது என பிடித்த விஷயங்களை செய்யுங்கள்.

    ஆண்களின் அந்தரங்க உறுப்பை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் - ஏன் தெரியுமா?

    மல்டி டாஸ்கிங் வேண்டாம் : ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்வதுதான் ஒரு சிறந்த ஊழியருக்கான அழகாக கருதப்படுகிறது. ஆனால் ஆய்வுகள், இப்படி மல்டி டாஸ்கிங் செய்வதால் கவனக் குறைவு அதிகம் ஏற்படுவதாகக் கூறுகிறது. எனவே அந்த நேரத்தில் என்ன வேலையோ அதை மட்டும் செய்யுங்கள்.அதில் மட்டும் கவனம் செலுத்தி சிறப்பாக செய்தாலே நல்லது. இதனால் நீண்ட நேரம் பணி, பணிச்சுமை, அழுத்தம் போன்ற பல பிரச்னைகளிலிருந்து விடுபடலாம்.



    உடல் அசைவில் கவனம் : முன்பே கூறியதுபோல் நீண்ட நேரம் லேப்டாப் முன்பு அமர்ந்தே இருப்பதால் உடல் உழைப்பு இல்லாமல் போய்விட்டது. எனவே வேலைக்கு நடுவே அவ்வபோது கை கால்களை அசைத்து பயிற்சி செய்வது, ஸ்ட்ரெச்சஸ் செய்வது என செய்து வந்தால் சோர்வு இருக்காது. குறைந்தது வேலைக்கு நடுவே 20 நிமிடங்களாவது நேரம் ஒதுக்கி வெளியே ஒரு நடை பயிற்சி செய்து பாருங்கள். ரெஃப்ரெஷாக உணர்வீர்கள்.
    Published by:Sivaranjani E
    First published: