• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • பெற்றோர்களே கவனம்.. செல்போன், லேப்டாப்பால் குழந்தைகளுக்கு இத்தனை ஆபத்தா?

பெற்றோர்களே கவனம்.. செல்போன், லேப்டாப்பால் குழந்தைகளுக்கு இத்தனை ஆபத்தா?

செல்போன் லேப்டாப்பால் குழந்தைகளுக்கு இத்தனை ஆபத்தா?

செல்போன் லேப்டாப்பால் குழந்தைகளுக்கு இத்தனை ஆபத்தா?

செல்போன்,லேப்டாப் தொடர்ந்து பார்ப்பதால், குழந்தைகள் மத்தியில் ‘மாறுகண்,ஒன்றரைக் கண் மற்றும் கிட்டப்பார்வை’ பாதிப்புகள் பலமடங்கு அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

  • Share this:
கொரோனா பெருந்தொற்றினால் கடந்த 2 ஆண்டுகளில் குழந்தைகளுக்கு மாறுகண், ஒன்றரை கண் பாதிப்பு அதிகரித்துள்ளதாக சென்னையில் உள்ள தனியார் கண் மருத்துவமனை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

மருத்துவமனையில் இப்பாதிப்புடன் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை, முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 5 மடங்கு உயர்ந்திருக்கிறது. குழந்தைகள் மத்தியில் கிட்டப்பார்வை (மையோப்பியா) பாதிப்பு சுமார் 25% வரை அதிகரித்து வந்திருக்கிறது. வருடாந்திர அளவில் கிட்டப்பார்வை பாதிப்பு  இயல்புக்கு மாறாக 100% அதிகரித்திருப்பதும் தெரியவந்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் குழந்தைகள் மத்தியில் ‘மாறுகண் / ஒன்றரை கண்’ பாதிப்புகளின் எண்ணிக்கை திடீரென, எதிர்பார்க்காதவாறு பன்மடங்கு உயர்ந்திருக்கிறது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், மாறுகண் கிட்டப்பார்வை 5 மடங்கு அதிகரித்திருப்பது அதிர்ச்சியடைய வைக்கிறது.

Also read: Immunity Boost | நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ’தக்காளி ஜூஸ்’- ஈசியா செய்யலாம்!

அதைப்போலவே, கிட்டப்பார்வை வளர்ச்சி 100% உயர்ந்திருப்பதும் கடந்த இரண்டு ஆண்டுகளில் இது 25% அதிகரித்திருப்பதும் கவலையை உருவாக்கியிருக்கிறது என்கிறார் குழந்தைகளுக்கான முதுநிலை கண் மருத்துவர் மஞ்சுளா ஜெயக்குமார்.

வீட்டிற்கு வெளியே சூரியஒளி படுமாறு இல்லாததும் மற்றும் விளையாட்டு, உடற்பயிற்சி போன்ற நடவடிக்கை செயல்பாடுகள் மிகவும் குறைந்திருப்பதும் மற்றும் அதே நேரத்தில் குழந்தைகளின் வாழ்க்கை முறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களும், மொபைல், கணினி, டிவி ஆகியவற்றின் திரைகளைப் பார்க்கும் நேரம் பன்மடங்கு அதிகரித்திருப்பதும் இதற்கான முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

ஒவ்வொரு ஆகஸ்ட் மாதமும் அனுசரிக்கப்படுகின்ற “குழந்தைகளின் கண் நலம் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு மாதம்” என்பதையொட்டி நடத்தப்பட்ட ஆய்வில் இது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில், கோவிட்-19 தொற்றுக்கு முன்பு ஒரு ஆண்டில் ஒன்று அல்லது இரண்டு பாதிப்பு நேர்வுகளையே நாங்கள் பார்த்திருக்கிறோம்; ஆனால், இன்றைக்கு பத்துக்கும் அதிகமான குழந்தைகள் இப்பாதிப்பினால் சிகிச்சைக்கு வந்திருக்கின்றனர்.

ஆனால் தற்போது கிட்டப்பார்வை பாதிப்பு பலமடங்கு உயர்ந்துள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். இப்பாதிப்பிற்கான முக்கிய காரணம் கண்களுக்கும்  நமது பார்வை செல்கின்ற பொருளுக்கும் இடைப்பட்ட தூரம் 33 செ.மீட்டருக்கும் குறைவாக இருக்கின்ற நிலையில், வாசிப்பது மற்றும் எழுதுவது போன்ற செயல்பாடுகளைத் தொடர்ந்து நீண்டநேரம் செய்வதும் ஒன்றாகும்.

WSPOS என்ற குழந்தைகளுக்கான கண் மருத்துவ சங்கத்தின்படி மிக அருகில் இவ்வாறு பார்வையை செலுத்துவது கிட்டப்பார்வையை ஏற்படுத்தும் மற்றும் மாறுகண் / ஒன்றரைக்கண் போன்ற பாதிப்புகளை உருவாக்கும்.

Also read: கர்ப்பக்காலத்தில் ஏற்படும் கழுத்து கருப்பு.. உடனடி தீர்வுக்கு யோசிக்காமல் இதை செய்யுங்கள்!

பொதுமுடக்க காலத்தின்போது, கல்வி சார்ந்த அல்லது பிற நோக்கங்களுக்காக கணினி, மடிக்கணினி, கைபேசி அல்லது டேப்லெட்களின் திரையை, அடிக்கடி இடைவேளையின்றி நீண்டநேரம், வைத்த கண் வாங்காமல் பார்ப்பது பொதுவான ஒரு நிகழ்வாகும். இதனால் கண்ணுக்கு ஏற்படும் அழுத்தம், கண்ணை சுருக்கிப் பார்ப்பதற்கு வழிவகுக்கும்; கிட்டப்பார்வை பாதிப்பு வளர்ச்சியடைவதை துரிதமாக்கும் விளைவை இது ஏற்படுத்தும்.

புத்தகங்கள், தாள் வடிவிலான பிற பொருட்கள் மட்டுமின்றி, வெளிச்சத்தை உமிழ்கின்ற டிஜிட்டல் சாதனங்களும், கிட்டப்பார்வை வளர்ச்சியடைவதற்கு சமஅளவில் இடர்வாய்ப்பைக் கொண்டிருக்கின்றன. ஆனால், வெளிச்சத்தை உமிழும் டிஜிட்டல் சாதனங்கள், உலர்கண் மற்றும் வெளிச்சத்தைப் பார்க்க இயலாத நிலை போன்ற பிற பிரச்சனைகளையும் கூடுதலாக ஏற்படுத்துகின்றன,” என்கிறார் டாக்டர். மஞ்சுளா.

அடிக்கடி இடைவேளை விட்டு செல்போன், லேப்டாப் பார்க்க வேண்டும், கணினி திரைக்கு முன்பாக அல்லது மொபைல் போனுக்கு முன்பாக இடைவேளையின்றி ஒரு குழந்தை ஒரு மணி நேரம் செலவிடுமானால், அடிக்கடி இடைவேளைகளை எடுத்துக்கொண்டு, 3 மணி நேரம் இதே செயல்பாட்டை மேற்கொள்ளும் ஒரு குழந்தையை விட, கண் தொடர்பான சிக்கல்களும், பாதிப்புகளும் ஏற்படுவதற்கு அதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

ஆன்லைன் முறையிலான வகுப்புகளைத் தவிர்க்க இயலாதபோது, மொபைல் போன்களுக்குப் பதிலாக, மடிக்கணினி / கணினி போன்றவற்றை குழந்தைகள் பயன்படுத்துமாறு பெற்றோர்கள் செய்யவேண்டும். ஏனெனில், மொபைல் போன் திரையோடு ஒப்பிடுகையில், இந்த டிஜிட்டல் சாதனங்களிலிருந்து கண்களுக்கு இடைப்பட்ட தூரம் அதிகமாக இருக்கும்.

சாத்தியமானால், வீட்டிற்கு வெளியே ஒரு நாளில், 1 முதல் 2 மணி நேரங்கள் விளையாடுவதன் மூலம், சூரியஒளி உடலில் படுவதை உறுதிசெய்வது முக்கியம். ஆரோக்கியமான, சமச்சீரான உணவும்
குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

கிட்டப்பார்வைக்கான சிகிச்சைகள் குறித்துப் பேசிய டாக்டர். மஞ்சுளா கிட்டப்பார்வை பாதிப்பு வளர்ச்சியைத் தடுப்பதற்கான தீர்வுகளுள், குறைந்த மருந்தளிப்பு அளவுள்ள அட்ரோப்பின் கண் சொட்டுமருந்து, புராக்ரசிஸ் சேர்க்கை லென்ஸ்கள், பல்குவிய கண்ணாடிகள், ஆர்த்தோகெரட்டாலஜி மற்றும் ஆர்ஜிபி கான்டாக்ட் லென்ஸ்கள் போன்ற சிறப்பு கான்டாக்ட் லென்ஸ்கள் ஆகியவை இருக்கின்றன.

ஆனால், தீவிரமான மாறுகண் பாதிப்பு ஏற்படுமானால், அதை முந்தைய இயல்பு நிலைக்கு மாற்ற இயலாது. ஆகவே, பைனாக்குலர் விஷன் என அழைக்கப்படும் நிலையை மீண்டும் கொண்டு வருவதற்கு மாறுகண் பார்வைக்கான (ஸ்ட்ராபிஸ்மஸ்) அறுவைசிகிச்சை செய்யப்பட வேண்டும் என்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தீவிர கிட்டப்பார்வை பாதிப்பானது, வேறுபல சிக்கல்களையும் கொண்டிருக்கிறது. சீக்கிரமாகவே கண்புரை உருவாவது, திறந்த – கோண கண் அழுத்தநோய், கருவிழி விடுபடல், அட்ரோபிக் மையோபிக் மக்குளோபதி எனப்படும் என்ற கடுமையான, சரிசெய்ய இயலாத பார்வைத்திறனை பாதிக்கின்ற நிலை மற்றும் மையோபிக் ஸ்ட்ராபிஸ்மஸ் ஃபிக்ஸஸ் என்ற ஒரு அரிதான மாறுகண் தீவிர பாதிப்புநிலை ஆகியவை இவற்றுள் அடங்கும்.

முடிந்தவரை இவற்றில் இருந்து தள்ளி நிற்போம் இல்லையேல் தவிர்த்து நிற்போம். கண்கெட்டப் பிறகு சூரிய நமஸ்காரம் செய்து பலனில்லை பயனில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: