ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

அறிகுறி இல்லாத மார்பக புற்றுநோயை தெரிந்து கொள்வது எப்படி..?

அறிகுறி இல்லாத மார்பக புற்றுநோயை தெரிந்து கொள்வது எப்படி..?

மார்பக புற்றுநோய்

மார்பக புற்றுநோய்

உண்மையில் சிலருக்கு மார்பக புற்றுநோய் வரும்போது உணரத் தகுந்த அறிகுறிகள் எதுவும் தென்படுவதில்லை. இத்தகைய நிலையில், புற்றுநோயானது உடலின் பிற பகுதிகளுக்கும் பரவி விடுகிறது. இதனை மெடாஸ்டேடிக் கேன்சர் என்று குறிப்பிடுகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

புற்றுநோய்களில் பல வகை உண்டு என்றாலும், பெண்களை அதிகம் தாக்குவது மார்பக புற்றுநோய் தான். உலகெங்கிலும் ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான மக்கள் மார்பக புற்றுநோயால் இறக்கின்றனர். ஆனால், இதனை மிக எளிமையாக தடுக்க முடியும். இருப்பினும் போதிய விழிப்புணர்வு இல்லாமை, தாமதமாக நோயை கண்டறிவது போன்ற காரணங்களால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

அறிகுறியற்ற புற்றுநோயை தெரிந்து கொள்வது எப்படி

உண்மையில் சிலருக்கு மார்பக புற்றுநோய் வரும்போது உணரத் தகுந்த அறிகுறிகள் எதுவும் தென்படுவதில்லை. இத்தகைய நிலையில், புற்றுநோயானது உடலின் பிற பகுதிகளுக்கும் பரவி விடுகிறது. இதனை மெடாஸ்டேடிக் கேன்சர் என்று குறிப்பிடுகின்றனர். இந்த நிலையை எட்டும் நோயாளிகளை குணப்படுத்துவது அரிதான காரியம்.

ஆனால், முன்கூட்டியே மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலமாக இந்த நிலையை எட்டாமல் தவிர்க்க முடியும். 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மகப்பேறு மருத்துவர்களை அவ்வப்போது ஆலோசிக்க வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறையேனும் மார்பகங்களை பரிசோதனை செய்ய வேண்டும்.

எவ்வாவு கால இடைவெளியில் பரிசோதனை செய்யலாம்..?

குடும்ப உறவுகளில் யாருக்கேனும் மார்பக புற்றுநோய் ஏற்பட்ட வரலாறு இருந்தால் அல்லது நீங்கள் தாய்ப்பால் ஊட்டாதவர் என்றால் 25 அல்லது 30 வயது முதலே மருத்துவ பரிசோதனை செய்யலாம். எக்ஸ்-ரே மேமோகிராஃபி, அல்ட்ராசவுண்ட், எம்ஆர்ஐ, பிஇடி போன்ற பரிசோதனைகளை செய்யலாம். 2 முதல் 5 ஆண்டுகள் வரையில் புற்றுநோய் அறிகுறி காட்டாமல் இருக்கும் என்பதால் முன்கூட்டியே மருத்துவ பரிசோதனை செய்வது நல்லது.

அறிகுறி உள்ள புற்றுநோய் :

மார்பக புற்றுநோயை முழுவதுமாக தவிர்க்கும் நடவடிக்கைகள் ஏதும் கிடையாது. ஆனால், எவ்வளவு சீக்கிரம் நீங்கள் நோயை கண்டுபிடிக்கிறீர்களோ, அவ்வளவு சீக்கிரம் சிகிச்சை எடுத்து குணப்படுத்த முடியும். சில மார்பக புற்றுநோய் அறிகுறிகளை காட்டும். வீட்டில் நாமே கூட சுயமாக சில பரிசோதனைகளை செய்து கொள்ள முடியும்.

Also Read : கர்ப்பிணிகளுக்கும் கேன்சர் ஆபத்து... தினமும் நாம் பயன்படுத்தும் பொருட்களில் மறைந்திருக்கும் அபாயம்!

சுயமாக பரிசோதனை செய்வது எப்படி?

மாதந்தோறும் மார்பகங்களை சுயமாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மார்பகம் எப்படி காட்சியளிக்கிறது, அதனை தொடும்போது என்ன உணர்வு ஏற்படுகிறது என்பதே மிக முக்கியம். மார்பகத்தின் மீதான கட்டிகள், சருமம் உள்வாங்கி இருப்பது, மார்பு காம்புகளின் தோற்றத்தில் மாற்றம் அல்லது வீக்கம் போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும். ரத்தம் கலந்த அல்லது வேறு ஏதேனும் திரவம் கசிந்து வருவதும் கூட மார்பக புற்றுநோய்க்கான அறிகுறி ஆகும்.

சிகிச்சை முறைகள்

நோயாளிக்கு என்ன வகை மார்பக புற்றுநோய் ஏற்பட்டுள்ளது, அவர்களது வயது என்ன, எவ்வளவு தூரம் பரவியிருக்கிறது என்பதைப் பொறுத்து சிகிச்சை மாறுபடும். அறுவை சிகிச்சை, ஹீமோதெரஃபி, ரேடியேஷன், ஹார்மோன் தெரஃபி போன்ற சிகிச்சை முறைகள் அளிக்கப்படும்.

முன்கூட்டியே கண்டறிந்தால் நல்லது

உலக அளவிலும், இந்தியாவிலும் மார்பக புற்றுநோய் வேகமாக பரவி வருகிறது என்ற சூழலில், அதன் விளைவுகளை ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. இந்த நோயை தொடக்கத்தில் கண்டறிவதன் மூலமாக மிக வேகமாக குணமடைய முடியும். ஆகவே, அவ்வப்போது பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Breast cancer