உலகையே ஆட்டிப் படைத்த கொரோனா நோய்த் தொற்று பல்வேறு எதிர்விளைவுகளையும் ஏற்படுத்தியுள்ளது. உளவியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள். அந்த தாக்கத்தில் இருந்து உலக நாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகின்றன. ஆனாலும் கொரோனாவின் தாக்கமும், அதன் வடுக்களும் இன்னும் முழுமையாக நீங்கிவிடவில்லை. அதன் ஒரு பகுதியாகத்தான் தற்போது ஆஸ்துமா என்னும் மூச்சிறைப்பு நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதாக லண்டனில் உள்ள குயின் மேரி பல்கலைகழக ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வில் குயின் மேரி பல்கலைகழகத்தின் சுவாச தொற்று நோயியல் துறை பேராசியர் அத்ரியான் மார்டின்யூ தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அதன் அடிப்படையில் அவர் ஒரு மருத்துவ அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கொரோனா நோய் குறைந்த பிறகு தட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் ஆஸ்துமா நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ‘இங்கிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர், ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டு வரும் வயதானவர்கள் இருமடங்கு ஆபத்துகளை சந்தித்து வருகின்றனர். ஆஸ்துமா நோயின் அறிகுறிகளும் முன்பைவிட அதிகரித்துள்ளது.
இங்கிலாந்தில் 50 லட்சத்திற்கும் அதிகமான மக்களும், உலகளவில் 30 கோடி பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆஸ்துமா நோய்க்கான முக்கிய அறிகுறிகளாக மூச்சுத்திணறல், மார்பு இறுக்கம், இருமல் ஆகியவற்றை குறிப்பிடலாம். கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர், மக்கள் முகக் கவசங்களை அணிவதை தவிர்த்துவிட்டனர். அதனால் சுவாச நோய்த்தொற்றுகள் பரவுகின்றன. மற்ற சுவாச நோய்த்தொற்றுகளைக் காட்டிலும் கொரோனாவால் ஏற்பட்டுள்ள ஆஸ்துமா முக்கியமானதாக உள்ளது என்றும் குயின் மேரி பல்கலைகழகத்தின் மருத்துவ அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்திய பின்னர் ஆஸ்துமா தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் காரணத்தையும்-விளைவையும் நிரூபிக்க முடியாது. முகக்கவசம் அணிதல், சுவாச நோய்களை கண்டறிந்து தடுத்தல் மூலமே ஆஸ்துமாவில் இருந்து தப்ப முடியும் என்றும் பேராசியர் அத்ரியான் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.இது ஒரு புறமிருக்க, நீண்ட காலம் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டவர்களை குறிவைத்து நவீன சிகிச்சை என்ற பெயரில் பணம் பறிக்கத் தொடங்கியுள்ளது ஒரு கும்பல்.
சுத்திகரிக்கப்பட்ட ஆக்சிஜனை சுவாசித்தல் ரத்தம் சுத்திகரிக்கப்படும் என்று சொல்லி சைப்ரஸ் தீவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ரத்தத்தை துவைத்தல் அதாவது BLOOD WASHING எனப் பெயர் வைத்துக் கொண்டு ஒரு முறை சிகிச்சை அளிப்பதற்கு இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 20 லட்சம் ரூபாய் வசூலிக்கப்படுகிறதாம். அந்த சுத்திகரிக்கப்பட் டஆக்சிஜன் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்படுவதாகவும் சொல்லி வியாபாரம் களைகட்டுகிறதாம் சைப்ரசில்…
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cold, Corona, Corona impact, Health