Aspirin மாத்திரை உட்கொள்வதால் புற்றுநோயால் இறக்கும் அபாயத்தை 20 சதவீதம் தடுக்க முடியும் - ஆய்வு..!

Aspirin மாத்திரை

ஆஸ்பிரின் வேறு எந்த சிகிச்சையிலும் சாத்தியமான மாற்று சிகிச்சையாக செயல்படாது என்பதையும் இந்த ஆய்வு உறுதி செய்துள்ளது. 

  • Share this:
புற்றுநோயாளிகள் தங்கள் சிகிச்சையின் ஒரு பகுதியாக ஆஸ்பிரின் எடுத்துக் கொள்ளத் தொடங்கினால், அவர்கள் இறக்கும் அபாயத்தை 20 சதவிகிதம் குறைக்கலாம் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. கார்டிஃப் பல்கலைக்கழக கல்வியாளர்கள் 18 வெவ்வேறு புற்றுநோய்கள் பற்றி வெளிடப்பட்ட 118 ஆய்வுகளை மறு ஆய்வு செய்துள்ளனர்.

அவர்கள் இறுதியாக முடிவுகளைச் சேகரித்து இந்த முடிவுகளை வெளியிட்டுள்ளனர். அதாவது ஆய்வின் இறுதி முடிவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஆஸ்பிரின் எடுத்துக் கொண்ட 2,50,000 நோயாளிகளுக்கு, இறக்கும் அபாயத்தை கிட்டத்தட்ட 20 சதவிகிதம் குறைத்துள்ளது என்று கண்டறிந்தனர்.மேலும் இது புற்றுநோய்க்கான துணை சிகிச்சைபோல் செயல்படும் என்று கூறுகின்றனர்.

அவர்கள் இந்த ஆய்வின் முடிவுகளை ecancer medical science இதழில் வெளியிட்டுள்ளனர்.



"ஆஸ்பிரின் மாத்திரை எடுத்துக்கொள்ளாதவர்களைக் காட்டிலும் எடுத்துக்கொண்டவர்களுக்கு நல்ல பலன் கொடுத்துள்ளது. கிட்டத்தட்ட 20 சதவிகிதம் அவர்களின் உயிருக்கு உத்திரவாதம் அளிக்கிறது. பல் ஆண்டுகளாக சிகிச்சை பெற்றுவரும் அவர்களை நேரிலேயே சென்று பார்த்தோம். இந்த மாத்திரை புற்றுநோய் கண்டுபிடிக்கப்பட்ட எந்த நேரத்திலும் உட்கொள்ளலாம். அதன் பலன் கிடைக்கும் என்பதையும் கண்டறிந்தோம்" என ஆய்வின் தலைவர் கூறியுள்ளார்.

ஆஸ்பிரின் அபாயங்களையும் இந்த குழு ஆய்வு செய்துள்ளது. அதாவது குறைந்த எண்ணிக்கையிலான நோயாளிகள் இரத்தப்போக்கை அனுபவித்திருந்தனர். ஆனால் ஆஸ்பிரின் உட்கொள்ளும் நோயாளிகளுக்கு இரத்தப்போக்கு மட்டுமே இருந்ததே தவிர இறப்புகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று மதிப்பாய்வு தெரிவித்துள்ளது..

ஆஸ்பிரின் மரண அபாயத்தைக் குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், உடலுக்குள் புற்றுநோய் பரவுவதைக் குறைக்கும் என்பதையும் நிரூபித்துள்ளது. இதை மெட்டாஸ்டேடிக் பரவல் என்று அழைக்கப்படுகிறது.



ஆஸ்பிரின் எடுக்கும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் இறப்பு விகிதத்தில் கணிசமான குறைப்பை உறுதிபடுத்தும் விதமாக இந்த் ஆஅய்வு வெளிடப்பட்டுள்ளது. ஆஸ்பிரின் புற்றுநோய்க்கான துணை சிகிச்சையாக எடுத்துக்கொள்ளலாம் என்று வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.

ஒரு நாளைக்கு இரண்டு முறை பாதாம் சாப்பிட்டால் கொழுப்பை குறைக்க முடியுமா..? பல நன்மைகள் இருக்கு மிஸ் பண்ணிடாதீங்க..!

அதேபோல் ஆஸ்பிரின் வேறு எந்த சிகிச்சையிலும் சாத்தியமான மாற்று சிகிச்சையாக செயல்படாது என்பதையும் இந்த ஆய்வு உறுதி செய்துள்ளது.

குறிப்பு : எந்த மாத்திரையாக இருந்தாலும் மருத்துவர் பரிந்துரையின்படிதான் உட்கொள்ள வேண்டும். நீங்களாகவே மருந்தகங்களில் சென்று வாங்கி பயன்படுத்துவது ஆபத்து.

 
Published by:Sivaranjani E
First published: