கோவிட்-19 தொற்று கருவில் வளரும் குழந்தை மற்றும் பிறக்கும் குழந்தையை பாதிக்குமா?

கர்ப்பிணிகள் பாதுகாப்பு

ஏற்கனவே கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் கர்ப்பிணிகளுக்கு, கோவிட் தொற்று ஏற்பட்டால், கருவுக்கு கருவிலேயே நோயுறும் தன்மை , (தாய் ஹைபோக்சிக் என்பதால் ஹைபோக்ஸியா காரணமாக குழந்தைக்கு பெரிநாட்டல் மார்பிடிட்டி ஏற்படும்), கரு முழுதாக வளர்ச்சி அடைவதற்கு முன்பே பிறப்பு மற்றும் கருவிலேயே இறக்கும் ஆபத்தும் உள்ளது.

  • Share this:
கொரோனா வைரஸ் உலகெங்கும் பரவி, தொற்றுக்கு பல்வேறு விதமான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, லட்சக்கணக்கான உயிர்கள் பலியாகி, கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு மேல் ஆகிறது. அச்சமும், பாதுகாப்பின்மையும் நம் சமூகத்தை சூழ்ந்துள்ளது. இதை மீறி, கோவிட்-19 தொற்று, பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து, தவறான, பாதுகாப்பற்ற அல்லது சரிபார்க்கப்படாத பல்வேறு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. எப்படி இந்த தொற்றைக் கையாள்வது என்று விபரீதமான முறைகளும் பகிரப்பட்டு வருகின்றன.

கோவிட்-19 பாதுகாப்பு செயல்முறை குறித்து அங்கீகரிக்கப்பட்ட, முறையான வழிமுறைகள், கோவிட் பற்றிய சந்தேகங்கள், தடுப்பூசி பற்றிய விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு பயனுள்ள தகவல்களை மருத்துவ நிபுணர்கள் பகிர்கிறார்கள். இந்த வாரம், மருத்துவ நிபுணர் சுமித்ரா பச்சானி நம்முடன், கோவிட்-19 தொற்று பாதிக்கப்பட்ட பாலூட்டும் தாய்மார்கள் என்ன விதமான நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று நம்மோடு பகிர்ந்து கொண்டவை இங்கே.

கோவிட்-19 தொற்று பாதிப்பு ஏற்பட்டால், கர்ப்பிணிகளுக்கு கிரிட்டிகல் பராமரிப்பின் தேவை அதிகரிக்குமா?

கோவிட் தொற்றால் பாதிக்கப்படும் கர்ப்பிணிகள், பெரும்பாலானவர்களுக்கு அறிகுறிகள் தென்படுவதில்லை – அறிகுறிகள் இல்லாத கோவிட்-19 (Asymptomatic covid19) அல்லது மிகவும் மைல்டான அறிகுறிகள் மட்டுமே இருக்கின்றன. பொதுவாக, இந்த அறிகுறிகள் இல்லாத கோவிட் தொற்று, அறிகுறிகளுடன் காணப்படும் தொற்றை விட ஆபத்தானது. மேலும், கர்ப்பகாலத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். அதாவது, தீவிர கண்காணிப்பு சிகிச்சை, மருத்துவ காரணங்களுக்காக முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்டு குழந்தை பிறப்பது (iatrogenic preterm birth). கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய ஹைப்பர்டென்ஷன் (உயர் ரத்த அழுத்தம்) அறிகுறிகள், அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் மற்றும் இறப்பு போன்ற விளைவுகள், அறிகுறிகள் இல்லாத கோவிட் தொற்று பாதிப்பால் ஏற்படலாம்.



கர்ப்பமாக இல்லாத பெண்களுடன் ஒப்பிடும் போது, கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு மற்றும் சமீபத்தில் கருவுற்று இருக்கும் பெண்களுக்கு ஏற்படும் கோவிட்-19 நோய்தொற்று, நோயுறும் தன்மை மற்றும் இறப்பு ஏற்படக்கூடிய சாத்தியங்களின் அபாயங்களை அதிகரிக்குமா?

பொதுவாகவே, கோவிட்-19 தொற்று ஏற்படும் போது, கர்ப்பிணிகள் ஒரு சில அதிக ஆபத்துள்ள உடல்நிலை கோளாறுகள் அல்லது விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும். ஏற்கனவே கண்டறியப்பட்ட உடல்நலக் கோளாறுகள் அல்லது குறைபாடுகளான நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், நீண்ட காலமாக இருக்கும் சுவாச பிரச்னைகளான COPD, ஆஸ்த்மா, சிக்கில் செல் நோய்கள் போன்றவை கர்ப்பகாலத்தில் சிக்கல்களையும், ஆபத்துகளையும் அதிகரிக்கலாம். மேலும், டயாலிசஸ், அல்லது நீண்ட கால சிறுநீரகக் கோளாறுகளுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்வது, இதய நோய்கள் (பிறக்கும் போதே இருந்தது அல்லது இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்டது), அல்லது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகான மருத்துவம், உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு உடல் எதிர்ப்பு சக்தியை மட்டுப்படுத்தும் இம்யூனோசப்ரசன்ட்ஸ் போன்ற மருந்துகள் எடுத்துக்கொள்வது, தொற்றுபாதிப்பை கணிசமாக அதிகரிக்கும்.

Heart Attack | பெண்களையும் விட்டுவைக்காத மாரடைப்பு..! எச்சரிக்கையாக கவனிக்க வேண்டிய சில அறிகுறிகள்!

கோவிட்-19 தொற்று கருவில் வளரும் குழந்தை மற்றும் பிறக்கும் குழந்தையை பாதிக்குமா?

கர்ப்ப காலத்தில், தாயிடமிருந்து குழந்தைக்கு தொற்று பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்த ஆய்வு இன்னும் நடந்து கொண்டிருக்குறது. தற்போது வரை, லேசானது முதல் மிதமானது வரையிலான கோவிட் தொற்று பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்கு பிறந்த குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் கரு வளர்ச்சி, நன்றாகவே காணப்படுகின்றன. ஆனால், ஏற்கனவே கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் கர்ப்பிணிகளுக்கு, கோவிட் தொற்று ஏற்பட்டால், கருவுக்கு கருவிலேயே நோயுறும் தன்மை , (தாய் ஹைபோக்சிக் என்பதால் ஹைபோக்ஸியா காரணமாக குழந்தைக்கு பெரிநாட்டல் மார்பிடிட்டி ஏற்படும்), கரு முழுதாக வளர்ச்சி அடைவதற்கு முன்பே பிறப்பு மற்றும் கருவிலேயே இறக்கும் ஆபத்தும் உள்ளது.



கர்ப்பகாலம் மற்றும் மகப்பேறுக்குப் பிறகு ஏற்படக்கூடிய மன அழுத்தம், பதற்றம், மற்றும் மனச்சோர்வை கையாள்வதில் மருத்துவர்கள் கர்ப்பிணிகளுக்கும், பிரசவித்த பெண்களுக்கும் எவ்வாறு உதவ முடியும்?

குழந்தை பிறப்புக்கு முன்பான ஒவ்வொரு வருகையிலும், கர்ப்பிணிப் பெண்ணுக்கு மன அழுத்தம், பதற்றம் அல்லது மனச்சோர்வு அறிகுறிகள் இருக்கிறதா, என்று சோதிக்கப்பட்டு, அவர்களின் உணர்வுகள், எண்ணங்கள் அல்லது அறிகுறிகள் பற்றி கேள்விகள் கேட்கப்படுகிறது. இதிலே, ஏதேனும் ஒரு நோயால் கர்ப்பிணிகள் பாதிக்கப்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டால், அவர்களுக்கு முறையான் ஆலோசனை வழங்கப்படுகிறது. அவர்களின் மனநிலையை மேம்படுத்த, அச்சங்களைப் போக்க மருத்துவர்களால் வழிநடத்தப்படுகிறார்கள். தேவைப்பட்டால், உளவியலாளர் / மனநல மருத்துவ ஆலோசனைகளும் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படுகின்றன.

கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் அல்லது தொற்று உறுதி செய்யப்பட்ட கர்ப்பிணிகள் அல்லது பிரசவித்த பெண்களுக்கு த்ரோம்போபிரோஃபிலாக்ஸிஸ் (thromboprophylxis) எப்படி நிர்வகிப்பது?

பல்வேறு OBGYN/FOGSI சமூகங்களின் பல்வேறு நிறுவப்பட்ட வழிமுறைகள் பின்பற்றப்படுகிறது.

கர்ப்பிணி நோயாளிகளுக்கு மோனோக்ளோனல் ஆன்டிபாடிகளை ஒரு சிகிச்சை முறையாக பயன்படுத்தலாமா?

தற்போது, இதுவும் ஆய்வு நிலையில் இருக்கிறது.



மிதமானது முதல் தீவிர கோவிட்-19 தொற்று பாதிப்புக்கு உள்ளான கர்ப்பிணி நோயாளிகளுக்கு கார்டிகோஸ்டீராய்டு சிகிச்சை அளிக்கலாமா?

ஆமாம், ஏற்கனவே நிறுவப்பட்ட வழிமுறைகளின் படி சிகிச்சை வழங்கப்படுகிறது மற்றும் பலனளிக்கிறது.

SARS-CoV-2 நோய்த்தொற்று உள்ள அல்லது நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படக்கூடிய தாய்மார்கள், குழந்தையுடன் எப்படி தொடர்பில் இருக்க வேண்டும்?

தாய்க்கு, குறைந்த அல்லது மிதமான தொற்று பாதிப்பு இருக்கும் பட்சத்தில், தாயும் குழந்தையும் ஒரே அறையில் ஒன்றாக இருக்கலாம். ஆனால், தொற்று தீவிரமாக இருந்தாலோ, அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் போது, ஒரே அறையில் இருந்தால், தாயையும், குழந்தையும் பார்த்துக்கொள்ள மற்றொரு நபர் உடன் இருக்க வேண்டும். இந்நிலையில், குழந்தை வைக்கப்பட்டிருக்கும் தொட்டில் தாய் இருக்கும் இடத்தில் இருந்து குறைந்தது 6 அடி தூரத்தில் இருக்க வேண்டும். பாலூட்டும் போது, தாயிடம் குழந்தையைக் கொடுக்கலாம். பாலூட்டுவதற்கு முன்பு, தாய் கைகளை நன்றாக சுத்தமாக கழுவி, முகக்கவசம் அணிய வேண்டும். ஆனால், குழந்தை முகக்கவசம் அணியக்கூடாது. தாய்க்கு தொற்று நீங்கிய பிறகு, குழந்தையை தாயே பார்த்துக் கொள்ளலாம்.



கர்ப்பிணிகளுக்கு கோவிட் தொற்றுக்கு பிந்தைய பின்விளைவுகள் உள்ளனவா?

ஆம். கர்ப்பமாக அல்லாத பெண்கள் மற்றும் இயல்பாகக் காணப்படும் விளைவுகளே, கர்ப்பிணிகளுக்கும் காணப்படும்.

எந்த சூழ்நிலையில் ஒரு தாய் தடுப்பூசியை எடுத்துக் கொள்ளக் கூடாது?

பின்வரும் நிலையில், கர்ப்பிணிப் பெண்கள் தடுப்பூசியைத் தவிர்க்க வேண்டும்: கர்ப்பிணிப்பெண் அல்லது இளம் தாய், கோவிட்19 தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தப்பட்டபின் அனாஃபிலாக்ஸிஸ் அல்லது தடுப்பூசி அலர்ஜி ஏற்பட்டிருந்தால், அல்லது பொதுவாக தடுப்பூசிகளுக்கு, மருந்துப்பொருட்கள், குறிப்பிட்ட உணவுப்பொருட்கள் அல்லது ஊசி மூலம் மேற்கொள்ளும் சிகிச்சை ஆகியவற்றுக்கு அனாஃபிலாக்ஸிஸ் அல்லது தடுப்பூசி அலர்ஜி ஏற்படும் நிலை இருந்தால், தடுப்பூசியைத் தடுக்கலாம்.
Published by:Sivaranjani E
First published: