• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • Vaccination : கர்ப்பிணிகள் கோவிட் தடுப்பூசி போட்டு கொள்வது கருவிலிருக்கும் குழந்தைக்கும் உதவுமா?

Vaccination : கர்ப்பிணிகள் கோவிட் தடுப்பூசி போட்டு கொள்வது கருவிலிருக்கும் குழந்தைக்கும் உதவுமா?

தடுப்பூசி

தடுப்பூசி

தொற்று இல்லாத கர்ப்பிணிப் பெண்களுடன் ஒப்பிடுகையில், தொற்று பாதிப்புடையவர்களுக்கு கர்ப்பகால சிக்கல்களின் ஆபத்து அதிகம். கோவிட் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பிறந்த குழந்தைகளில் சுமார் 10-15% குழந்தைகளுக்கு COVID-19 பாசிட்டிவ் ஆகும் வாய்ப்பு இருக்கிறது.

  • Share this:
கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மெல்ல கட்டுக்குள் வந்துள்ள நிலையில், நவம்பர் மாதத்திற்குள் மூன்றாம் அலை நாட்டை தாக்க கூடும் என்ற எச்சரிக்கை மேலும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை மக்களுக்கு ஏற்படுத்தி உள்ளது. மூன்றாம் அலை வந்தால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படலாம் என்ற பீதியும் இருக்கிறது. இதனிடையே கோவிட் தொற்று ப்ரீமெச்சூர் பேபிஸ் எனப்படும் குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை எவ்வாறு பாதிக்கிறது மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் எடுக்கும் தடுப்பூசி பிறக்காத குழந்தைகளுக்கு பலனளிக்குமா என்பது பற்றிய சந்தேகங்கள் மக்களிடையே அதிகம் எழுந்துள்ளன.

இது தொடர்பான பல்வேறு சந்தேகங்களுக்கு எய்ம்ஸில் குழந்தை மருத்துவத்துறையில் பணியாற்றும் பேராசிரியர் மற்றும் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவின் பொறுப்பாளராக உள்ள டாக்டர் ராகேஷ் லோதா விளக்கம் அளித்துள்ளார்.

கர்ப்பிணி பெண்கள் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்வது கருவில் இருக்கும் பிறக்காத குழந்தைகளுக்கு எவ்வாறு உதவும்?

ஒருவேளை கர்ப்பிணி பெண்களுக்கு எதிர்பாராவிதமாக கோவிட் தொற்று ஏற்பட்டால் அது அவர்களுக்கு கர்ப்பம் தொடர்பான சிக்கல்கள் மற்றும் பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் பிறப்பு குறைபாடுகள், சுவாச பிரச்சனைகள், மஞ்சள் காமாலை, பிறப்பு காயங்கள் உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே தொற்றிலிருந்து தற்காத்து கொள்ள கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி போட்டு கொள்வது மிக முக்கியம். கர்ப்பமாக இருக்கும் போது கோவிட் தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு பிறந்த குழந்தைகளின் உடலில் ஆன்டிபாடிகள் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இந்த ஆன்டிபாடி லெவல்கள் குழந்தைக்கு சில மாதங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்.



3-வது அலை உருவானால் குழந்தைகளை பாதுகாக்க மருத்துவமனைகள் என்ன செய்ய வேண்டும்?

இதுவரையிலான தரவுகளின் படி பெரியவர்களுடன் ஒப்பிடும் போது குறைவான எண்ணிக்கையிலான குழந்தைகள் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தொற்று அறிகுறி உள்ள குழந்தைகளில் பெரும்பாலானவர்களுக்கு லேசான நோய் மட்டுமே உள்ளது. இருப்பினும் அதிக எண்ணிக்கையிலான நபர்கள் பாதிக்கப்படும் பொது தொற்றால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கையும், மிதமான மற்றும் கடுமையான நோய் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. 3-வது அலையில் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் உள்ள சுகாதார அதிகாரிகள் சில ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். கோவிட் சிகிச்சை மையங்களில் குழந்தைகளை பராமரிக்க பிரத்யேக வார்டுகள் / தனிமை அறைகள் இருக்க வேண்டும்.

குழந்தைகளை பராமரிக்க குறிப்பிட்ட உபகரணங்கள் மற்றும் மருந்துகளின் தேவைகள் உள்ளன. தவிர மருத்துவமனைகள் அவற்றின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். கோவிட் பாதிப்புள்ள குழந்தைகளை நிர்வகிக்க சுகாதாரப் பணியாளர்களுக்கு போதிய பயிற்சி அளிக்கப்பட்டிருப்பது கட்டாயம். கடும் தொற்றால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு ஸ்டெராய்டுகள் மற்றும் இன்ட்ரெவனஸ் இம்யூனோகுளோபுலின் போன்ற குறிப்பிட்ட மருந்துகளின் தேவை இருக்கும். பிற பொதுவான குழந்தை நோய்களுக்கு தொலைபேசி மூலம் ஆலோசனை மற்றும் மருந்துகளை தருவது, அபாயமான நேரத்தில் குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்து வரும் சூழலை குறைக்க உதவும்.



ப்ரீமெச்சூர் குழந்தைகளுக்கு கோவிட் ஏற்படுமா?

புதிதாகப் பிறந்துள்ள குழந்தைகளுக்கும் கோவிட் தொற்று ஏற்படலாம். அந்த வகையில் குறைப்பிரசவத்தில் அதாவது சராசரியாக 38 வாரங்களுக்கு முன்னால் பிறக்கும் பிறந்த குழந்தைகளுக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கோவிட் நிலையைப் பொருட்படுத்தாமல் பெரும்பாலும் குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் சில நாட்களுக்கு ஐ.சி.யுக்களில் வைத்து நிர்வகிக்கப்பட வேண்டும்.

Diabetes in kids : குழந்தைகளையும் தாக்கும் நீரிழிவு நோய் : அறிகுறிகள்..சிகிச்சை முறைகள் என்ன?

கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்படும் கோவிட் தொற்றால் குழந்தை என்ன பாதிப்பை சந்திக்கும்?

தொற்று இல்லாத கர்ப்பிணிப் பெண்களுடன் ஒப்பிடுகையில், தொற்று பாதிப்புடையவர்களுக்கு கர்ப்பகால சிக்கல்களின் ஆபத்து அதிகம். கோவிட் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பிறந்த குழந்தைகளில் சுமார் 10-15% குழந்தைகளுக்கு COVID-19 பாசிட்டிவ் ஆகும் வாய்ப்பு இருக்கிறது. தாய் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர்களுக்கு பிறக்கும் பெரும்பாலான குழந்தைகள் அறிகுறியற்ற அல்லது லேசான அறிகுறிகளைக் கொண்டுள்ளனர். எனினும் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் கோவிட் தொற்று கருவிலிருக்கும் குழந்தைகளுக்கு பிறவி குறைபாடு ஏற்படுத்தும் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.



குழந்தைகளின் மூளையை கோவிட் எவ்வாறு பாதிக்கிறது?

பிற தொற்று நோயை போல கோவிட் சில கடுமையான அறிகுறிகளை குழந்தைகளிடம் வெளிப்படுத்தலாம். பெரும்பாலும் நுரையீரல் ஈடுபாட்டுடன் தொடர்பு இருக்கும் என்றாலும், சில நேரங்களில் மூளையில் சிறியளவு பாதிப்புகளை ஏற்படுத்தி வலிப்பு உள்ளிட்டவற்றிற்கு அரிதாக வழிவகுக்கலாம். கடும் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் ஆக்ஸிஜன் குறைவாக இருப்பதால் மூளையில் தாக்கம் ஏற்படலாம். குழந்தைகளின் ஒட்டு மொத்த நல்வாழ்விலும் கோவிட் சில மறைமுக விளைவுகளை ஏற்படுத்த கூடும்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: