Home /News /lifestyle /

Explainer : நாட்டில் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுக்கும் நிலையில், பாதுகாப்பாக இருக்க மக்கள் செய்யவேண்டியவை, செய்யக் கூடாதவை..!

Explainer : நாட்டில் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுக்கும் நிலையில், பாதுகாப்பாக இருக்க மக்கள் செய்யவேண்டியவை, செய்யக் கூடாதவை..!

கொரோனா இரண்டாவது அலை

கொரோனா இரண்டாவது அலை

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிய கொரோனா வைரஸ் தொற்றுநோயால் சுமார் 43,846 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கிட்டத்தட்ட நான்கு மாதங்களில் தினசரி பாதிப்பு முதன் முறையாக அதிகமாக பதிவாகியுள்ளது.

கொரோனாவின் முதல் அலை பாதிப்பு அடங்கிய நிலையில், தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாம் அலை பாதிப்பு வேகமெடுத்து வருகிறது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிய கொரோனா வைரஸ் தொற்றுநோயால் சுமார் 43,846 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கிட்டத்தட்ட நான்கு மாதங்களில் தினசரி பாதிப்பு முதன் முறையாக அதிகமாக பதிவாகியுள்ளது. புதிய கொரோனா வைரஸ் பாதிப்பின் ஆபத்தான  பஞ்சாப், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு தூண்டியுள்ளது.

தற்போதைய நிலை குறித்து மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியதாவது, " பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவதில் மக்களின் மிகக்குறைந்த ஈடுபாடு தான் சமீபத்திய எழுச்சிக்கு காரணம் கூறியுள்ளார். நோய்த்தொற்றுக்கு எதிராக மக்கள் தங்கள் பாதுகாப்பைக் குறைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். இல்லையெனில் நிலைமை ஆபத்தானதாக மாறிவிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எந்தவொரு கட்டத்திலும் கொரோனாவுக்கு எதிரான பொருத்தமான நடத்தை விதிமுறைகள் பலவீனமடைய அனுமதிக்கக் கூடாது என்று நாட்டு மக்களிடம் நான் முறையிட விரும்புகிறேன்.

சமூக தூரத்தை பராமரித்தல், முகக்கவசங்களை சரியாக அணிதல் மற்றும் சோப்புடன் கொண்டு கைகளை கழுவுதல் ஆகியவை கோவிட் -19 க்கு எதிரான போராட்டத்தை வெல்வதற்கான மிகப்பெரிய கருவிகளாக இருக்கலாம்," என்று அவர் கூறினார். நாட்டில் கிடைக்கப்பெற்ற கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் தொற்றுநோய்க்கு எதிரான இந்த போராட்டத்தின் இரண்டாவது கருவியாகும் என்று மத்திய சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்தார்.இதேபோல கடந்தவாரம் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது, "நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், நுண்ணிய கட்டுப்பாட்டு மண்டலங்களை அமைத்தல் மற்றும் கட்டுப்பாடுகளை அமல்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளுடன் கொரோனா வைரஸின் "வளர்ந்து வரும் இரண்டாவது அலையை" கட்டுப்படுத்துவது முக்கியமானது என்று கூறினார்.

முதலமைச்சர்களுடனான சந்திப்பில் பேசிய பிரதமர் மோடி மேலும் கூறியதாவது “இந்த தொற்றுநோயை நாம் இப்போது நிறுத்தவில்லை என்றால், நாடு தழுவிய அளவில் மீண்டும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படக்கூடும். வளர்ந்து வரும் இரண்டாவது அலையை நாம் உடனடியாக நிறுத்தி பெரிய மற்றும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ” என்று கூறினார். கொரோனாவின் இரண்டாம் அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருவதால் தற்போது மக்கள் செய்யவேண்டிய மற்றும் செய்யக்கூடாதா வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

காலரா முதல் கொரோனா வைரஸ் வரை...! தொற்றுநோய்களின் வரலாறு பற்றி இந்தியர்கள் மறந்தது ஏன்?

கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள நீங்கள் செய்ய வேண்டியவை:

* தனிப்பட்ட சுகாதாரத்தை பேணுங்கள். குறைந்தது 20 விநாடிகளுக்கு சோப்புடன் உங்கள் கைகளை தவறாமல் கழுவ வேண்டும்.

* வெளியில் செல்லும்போது, பாக்டீரியா எதிர்ப்பு ஹாண்ட் சானிடைசரை எடுத்து சென்று தவறாமல் அதனை கைகளில் தடவவும்.

* உங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் போது எப்போதும் முகக்கவசங்களை அணியுங்கள்.

* இருமல் அல்லது தும்மும்போது எப்போதும் உங்கள் வாயை ஒரு டிஸ்யூ அல்லது கைக்குட்டையால் மூட வேண்டும். உங்களிடம் டிஸ்யூ இல்லையென்றால், உங்கள் முழங்கை ஸ்லீவை வாயருகே கொண்டு வந்து இருமவோ அல்லது தும்மவோ செய்யலாம்.* வெளியே இருக்கும்போது, இருமல் அல்லது தும்மல் ஏற்பட்டால் அப்போது காட்டாயம் உங்கள் முகக்கவசத்தை கழற்றக் கூடாது.

* பயன்படுத்தப்பட்ட டிஸ்யூவை மூடிய குப்பை தொட்டிகளில் போட வேண்டும்.

* பிபிஇ கருவிகள், முகக்கவசங்கள் மற்றும் கையுறைகள் உள்ளிட்ட பாதுகாப்பு பொருட்களை திறம்பட அகற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.

* பொது இடத்தில் மற்றவர்களுடன் எப்போதும் 6 அடி தூரத்தை பராமரிக்கவும்.

* முடிந்தால் வீட்டிலிருந்து இருந்தபடியே வேலை செய்ய வேண்டும்.

* உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் வீட்டிலேயே இருங்கள். உங்களுக்கு காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் இருந்தால், மருத்துவ உதவியை நாடுங்கள்.

செய்யக்கூடாதவை:

* வெளியில் செல்லும்போது உங்கள் முகத்தை, குறிப்பாக உங்கள் கண்கள், மூக்கு மற்றும் வாயைத் தொடுவதைத் தவிர்க்கவும்.

* நெரிசலான இடங்களில் செல்வதை தவிர்க்கவும், முடிந்தவரை மக்களுடன் நெருங்கிய தொடர்பு கொள்வதை தவிர்க்கவும்.

* சமூக தூரத்தை பராமரிக்க கடினமாக இருக்கும் மால்கள், ஜிம்கள், உணவகங்கள் மற்றும் பப்களுக்கு செல்ல வேண்டாம்.* நகரங்கள், மாநிலங்கள் அல்லது நாடு முழுவதும் தேவையற்ற பயணத்தைத் தவிர்க்கவும்.

* பொது இடத்தில் எச்சில் துப்பக் கூடாது.

மேலும் பணியாளர்கள், பொது குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் இந்தியாவில் உள்ள அனைத்து ஊழியர்கள் மற்றும் அமைச்சகங்கள், அலுவலகங்களுக்கான வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது. அவை எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்வருமாறு காணலாம் :

* அரசாங்க கட்டிடங்களின் நுழைவாயிலில் வெப்ப ஸ்கேனர்களை நிறுவவும். அரசு கட்டிடங்களின் நுழைவாயிலில் கை சுத்திகரிப்பாளர்களை கட்டாயமாக வைப்பது அவசியம். காய்ச்சல் போன்ற அறிகுறிகளைக் கொண்டிருப்பவர்கள் முறையான சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தல் போன்றவற்றை எடுக்க அறிவுறுத்தப்படலாம்.

* அலுவலக வளாகத்தில் பார்வையாளர்களின் அதிகபடியான நுழைவை தவிர்க்க வேண்டும். அதிகாரியின் சரியான அனுமதி உள்ள பார்வையாளர்கள் மற்றும் அவர்கள் சந்திக்க விரும்பும் நபர்கள் மட்டுமே முறையாக திரையிடப்பட்ட பின்னர் அனுமதிக்கப்பட வேண்டும்.* முடிந்தவரை அதிகாரிகளுடனான மீட்டிங்கை வீடியோ கான்பரன்சிங் மூலம் செயல்படுத்த வேண்டும். தேவைப்படாவிட்டால் அதிக எண்ணிக்கையிலான நபர்களை உள்ளடக்கிய நேரடி கூட்டங்களை குறைப்பது நல்லது.

* அத்தியாவசியமற்ற உத்தியோகபூர்வ பயணத்தைத் தவிர்க்கவும்.

* ஒவ்வொரு அலுவலகத்திலும் உள்ள வாஷ் ரூம்களில் ஹாண்ட் சானிடிசர்கள், சோப்பு மற்றும் நீர் இருப்பதை உறுதி செய்யுங்கள்.

* அனைத்து அதிகாரிகளும் தங்கள் உடல்நலத்தை கவனித்துக் கொள்ளவும். சுவாச அறிகுறிகள் / காய்ச்சலைக் கவனிக்கவும் அறிவுறுத்தப்படலாம், உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், தங்கள் அறிக்கை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த உடனேயே பணியிடத்தை விட்டு வெளியேற வேண்டும். அரசு வழங்கிய வழிகாட்டுதல்களின்படி அவர்கள் வீட்டு தனிமைப்படுத்தலை கடைபிடிக்க வேண்டும்.

* அதிக ஆபத்தில் இருக்கும் அனைத்து ஊழியர்களுக்கும் அதாவது வயதான ஊழியர்கள், கர்ப்பிணி ஊழியர்கள் மற்றும் அடிப்படை மருத்துவ நிலைமைகளைக் கொண்ட ஊழியர்கள் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்பட வேண்டும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Corona safety, CoronaVirus, Pandemic

அடுத்த செய்தி