முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / இந்தியாவை அச்சுறுத்தும் குரங்கு அம்மை... தற்காத்துக்கொள்ளும் வழிகளை விளக்கும் மருத்துவர்கள்...

இந்தியாவை அச்சுறுத்தும் குரங்கு அம்மை... தற்காத்துக்கொள்ளும் வழிகளை விளக்கும் மருத்துவர்கள்...

 மங்கி பாக்ஸ் வைரஸ்

மங்கி பாக்ஸ் வைரஸ்

பாதிக்கப்பட்ட நபரின் சொறி, சிரங்கு, உடல் திரவம், உடைகள் மற்றும் படுக்கைகளைப் பகிர்வதன் மூலமும் தொற்று பரவுகிறது. தொற்றால் பாதிக்கப்பட்ட நபரை முத்தமிடுவது மற்றும் கட்டி அணைக்கும் போதும் தொற்று பரவுகிறது.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கொரோனாவுக்கு அடுத்தபடியாக உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவி வருவதால் குரங்கு அம்மையை உலக சுகாதார அமைப்பு (WHO) இதை சர்வதேச அளவிலான பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது. குரங்கு அம்மை பரவி வரும் நாடுகளை எச்சரிக்கும் வகையில் உலக சுகாதார நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதுவரை இந்தியாவில் டெல்லியில் ஒருவருக்கும், கேரளாவில் 3 நபர்களுக்கும் என மொத்தம் 4 பேருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குரங்கு அம்மை தொற்றை எவ்வாறு தடுப்பது மற்றும் எந்த வகையான சிகிச்சையை மேற்கொள்வது போன்ற பல்வேறு சந்தேகங்கள் வெளியாகி வரும் நிலையில், மருத்துவ நிபுணர்கள் சில கேள்விகளுக்கு அளித்துள்ள விளக்கங்கள் குறித்து காணலாம்.

குரங்கு அம்மை எப்படி பரவுகிறது மற்றும் அறிகுறிகள் என்னென்ன?

தொற்று பரவக்கூடிய வழிகள் குறித்து ஃபோர்டிஸ் மருத்துவமனை குழந்தை மருத்துவத்தின் இயக்குநர் ஹெச்ஓடி டாக்டர் அரவிந்த் குமார் கூறுகையில், “பாதிக்கப்பட்ட நபரின் சொறி, சிரங்கு, உடல் திரவம், உடைகள் மற்றும் படுக்கைகளைப் பகிர்வதன் மூலமும் தொற்று பரவுகிறது. தொற்றால் பாதிக்கப்பட்ட நபரை முத்தமிடுவது மற்றும் கட்டி அணைக்கும் போதும் தொற்று பரவுகிறது. கர்ப்பிணிப் பெண்கள் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டால் அவர்கள் மூலமாக கருவில் உள்ள குழந்தைக்கு தொற்று பரவ வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

சின்னம்மை மற்றும் குரங்கம்மைக்கு வித்தியாசம் தெரியாமல் குழம்பும் மக்கள்... இதுதான் அறிகுறி...

குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் என்னென்ன மாதிரியான பிரச்சனைகளுக்கு ஆளாகிறார்கள் என்றும் மருத்துவர்கள் விளக்கியுள்ளனர். சிறு குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் அல்லது நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களிடையே குரங்கு அம்மை தொற்று தீவிரமாக பரவுகிறது. குரங்கு அம்மையால் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருவிழி சம்பந்தமான பிரச்சனைகள், மூளையழற்சி, செப்சிஸ், நிமோனியா மற்றும் இரண்டாம் நிலை தோல் புண்கள் ஏற்பட வாய்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

குருகிராமில் உள்ள பாராஸ் மருத்துவமனையின் மூத்த மருத்துவரான சஞ்சய் குப்தா, குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அனுபவிக்க கூடிய அறிகுறிகள் குறித்து விளக்கியுள்ளார். காய்ச்சல், உடல்சோர்வு, சோம்பல், மூட்டு வலி, சொறி மற்றும் அரிப்பு போன்றவற்றால் உருவாகும் கொப்புளங்கள் ஒன்று முதல் மூன்று மில்லிமீட்டர் விட்டம் கொண்டதாகவும், வலிமிகுந்ததாகவும் இருப்பது ஆகியன முதன்மை அறிகுறியாகும். காய்ச்சல் பொதுவாக ஒன்று முதல் மூன்று வாரங்கள் வரை நீடிக்கும், மேலும் கொப்புளங்கள் அல்லது சொறி இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரை நீடிக்கும் எனத் தெரிவித்துள்ள அவர், குரங்கு அம்மை நோய் தீவிரமானது அல்ல என்பதால், இதுவரை 2 சதவீத இறப்புகள் மட்டுமே நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

சிகிச்சை, தடுப்பு முறைகள் மற்றும் தடுப்பூசி:

குரங்கு அம்மை நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால், மருத்துவரிடம் கலந்தாலோசித்த பிறகு வீட்டிலிருந்த படியே சிகிச்சை பெற முடியும். பெரும்பாலும் பாதிக்கப்பட்ட நபர் அல்லது குழந்தையை ஒரு காற்றோட்ட அறையில் தனிமைப்படுத்தி வைக்க வேண்டும், காய்ச்சல் மற்றும் வலிக்கு பாராசிட்டமால் எடுத்துக்கொள்ளலாம், பாதிக்கப்பட்டவர்களின் தோல் புண்களை சரி செய்ய நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும், ஒருவேளை கண்களில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் கண் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது முக்கியமானது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

கல்லீரல் நோய்க்கு ஸ்டெம் செல்களை பயன்படுத்தி சரி செய்ய முடியுமா..? மருத்துவர் விளக்கம்...

தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள்:

* பாதிக்கப்பட்ட நபரின் தோலுடன் நெருங்கிய தொடர்பு கொள்வதைத் தவிர்க்கவும்

* பாதிக்கப்பட்ட நபரின் சொறி அல்லது கொப்புளங்களை தொடக்கூடாது.

* பாதிக்கப்பட்ட நபரைக் கவனிக்கும்போது கையுறைகள் மற்றும் முகமூடியை அணிய வேண்டும்.

* குரங்கு அம்மை தொற்றுக்கு ஆளான நபருடன் பாத்திரங்கள், உடைகள், படுக்கை போன்றவற்றை பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

* தொற்றால் பாதிக்கப்பட்டவரின் உடைகளை வாஷிங் மிஷினில் துவைக்கவும்.

ஆல்கஹால் அடங்கி ஹேண்ட் வாஸ் கொண்டு கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுவது அவசியமாகும்.

தடுப்பூசி:

குரங்கு நோய் தடுப்பூசி குறித்து மருத்துவர் குப்தா கூறுகையில், பெரியம்மை நோய்க்கு பயன்படுத்தப்பட்ட தடுப்பூசி குரங்கு காய்ச்சலுக்கும் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இதுபோன்ற 85% க்கும் அதிகமான நிகழ்வுகளில் பயனுள்ளதாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். FDA ஆல் ஒரு புதிய தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது மற்றும் குரங்கு காய்ச்சலுக்கான தடுப்பூசிக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயன்படுத்தப்படுகிறது என தெரிவித்த அவர், 1978 க்கு முன் பிறந்தவர்களில் பெரியம்மை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் குரங்கு அம்மை நோயில் இருந்து ஓரளவுக்கு பாதுகாப்பு பெறுவதாக தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Monkeypox