கிருமிநாசினிகளை கொண்டு மேற்பரப்புகளை சுத்தம் செய்வதில் தீவிரம் காட்ட தேவையில்லை - ஏன் தெரியுமா?

கோப்புப் படம்

கடந்த 1 மாதமாக எழுச்சியுடன் தாக்கும் கொரோனாவை கண்டு மக்கள் மீண்டும் பீதியுடன் கிருமி நாசினிகளை கையில் எடுத்து அதை தீவிரமாக பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Share this:
கடந்த சில நாட்களாக தமிழகம் உட்பட நாடு முழுவதும் கொரோனா மீண்டும் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. தொற்று பரவல் காரணமாக கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பு நாம் எப்படி இருந்தோமோ மீண்டும் அதே நிலைக்கு ஒரு முறை திரும்பி வந்துள்ளோம் என்று தான் சொல்ல வேண்டும். தொடர்ந்து கோவிட்-19 பாதிப்புகள் உயர்ந்து வருவதால், சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்கவும், தனிப்பட்ட சுகாதாரத்தை பராமரிக்கும் வழிகள் குறித்தும் மக்களுக்கு நினைவூட்ட வேண்டியது அவசியமாகிறது.

ஏனென்றால் போன வருடம் கொரோனா முதல் அலை தீவிரமாக இருந்த போது சானிடைசர் உட்பட கிருமி நாசினியும் கையுமாக இருந்த மக்கள், தொற்று குறைய துவங்கியதும் சில மாதங்கள் கொரோனா அச்சமின்றி சற்று சுதந்திரமாக இருந்தனர். தினமும் பயன்படுத்தி வந்த கிருமி நாசினிகளை தூரம் வைத்து விட்டனர். ஆனால் கடந்த 1 மாதமாக எழுச்சியுடன் தாக்கும் கொரோனாவை கண்டு மக்கள் மீண்டும் பீதியுடன் கிருமி நாசினிகளை கையில் எடுத்து அதை தீவிரமாக பயன்படுத்த துவங்கி உள்ளனர். கொரோனா பீதி காரணமாக பலர் தங்கள் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களை கிளீனிங் மற்றும் கிருமி நீக்கம் செய்யும் பணிகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.

இது ஒரு நல்ல பழக்கம் தான் என்றாலும், இதை எப்போது எவ்வளவு செய்ய வேண்டும், எது வரையறை என்பதை பற்றி அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். பெரும்பாலும் வெளியே போய் வந்த பிறகு சோப்பு போட்டு தண்ணீரில் கை மற்றும் கால்களை நன்கு தேய்த்து கழுவும் பழைய முறை COVID-19 தொற்றுக்கு எதிரானது. வைரஸ்களை கழுவவும், தொற்று நோய்களை தடுக்கவும் வழக்கமான சோப்பு மற்றும் நீர் கலந்து சுத்தம் செய்யும் முறையே போதுமானது என்பதற்கான ஆதாரங்கள் பெருகி வருகின்றன. சோப்பு மற்றும் தண்ணீர் பயன்படுத்தி எப்படி நாம் கை, கால்களை சுத்தம் செய்கிறோமோ அது போலவே நம் வீடுகளையும் எளிமையான முறையில் சுத்தமாக வைத்திருக்கலாம்.

கிருமிநாசினிகளில் தீங்கு தரும் ரசாயனங்கள் :

கிளீனிங் மற்றும் கிருமிநாசினி தயாரிப்புகளை அதில் உள்ள குறிப்புகளின்படி பயன்படுத்த வேண்டும். கிருமிநாசினிகள் என்பது மேற்பரப்பில் உள்ள நுண்ணுயிரிகளை செயலிழக்க அல்லது அழிக்க வடிவமைக்கப்பட்ட வேதியியல் கலவையாகும். எனவே  ரசாயனங்கள் இதில் கலக்கப்பட்டிருக்கின்றன என்பதை தெரிந்துக்கொள்ளலாம். ஒரு சில கிருமி நாசினிகளில் ஆஸ்துமாவைத் தூண்ட கூடிய குவாட்டர்னரி அம்மோனியம் (quaternary ammonium) சேர்மங்கள் உள்ளன. எனவே வீட்டில் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் இருந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள்.

அதே போல ப்ளீச்சிங் பவுடர் சுவாசம், சருமம் மற்றும் கண் உள்ளிட்டவற்றில் எரிச்சலை ஏற்படுத்தும். தொற்று தீவிரமாக உள்ள சூழலில் மக்கள் ஹைட்ரஜன் பெராக்சைடு, ஆல்கஹால் (ஐசோபிரைல் ஆல்கஹால் அல்லது எத்தனால்), சிட்ரிக் அமிலம் மற்றும் லாக்டிக் அமிலம் உள்ளிட்டவை அடங்கிய கிருமிநாசினிகளை பயன்படுத்துவது நல்ல பழக்கமே. ஆனால் அவற்றை உணவுப்பொருட்கள், காய்கறிகள், பாத்திரங்கள், உடைகள் மீதோ அல்லது வெறும் கைகளாலோ பயன்படுத்த கூடாது என்பது நினைவில் இருக்கட்டும் என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

காற்றோட்டம் அவசியம்..

கொரோனா வைரஸ் முக்கியமாக மேற்பரப்புகளில் இருந்து பரவுவதை விட, தொடர்புகளின் மூலம் தான் பரவுகிறது என நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். வழக்கம் போல மேற்பரப்புகளை திறம்பட சுத்தம் செய்வது கிருமிகளை நீக்குகிறது, கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யும் போது சுத்தம் உறுதி செய்யப்படுகிறது. ஆனால் கொரோனா பீதியால் மேற்பரப்புகளை சுத்தம் செய்வதில் கவனமாக இருக்க தேவையில்லை. ஆனால் புற ஊதா கதிர்வீச்சு(UV radiation), எல்.ஈ.டி நீல விளக்குகள் (LED blue lights), கிருமிநாசினி சுரங்கங்கள் (sanitizing tunnels) உண்மையில் வைரஸை அழிக்கும் வேலை செய்கின்றன என்பதற்கான தகுந்த ஆதாரங்கள் இல்லை என்று அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. தவிர சரியான காற்றோட்டம் இல்லாமல் கிருமிநீக்கும் பணிகளில் ஈடுபடுவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

மேலும் படிக்க... Double Masking : கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் 'டபுள் மாஸ்கிங்' - எப்படி அணிய வேண்டும்..?

உங்கள் குடும்பத்தை பாதுகாப்பாக வைத்திருக்க எளிய வழிமுறைகள்..

* மேற்பரப்புகளை முறையாக சுத்தம் செய்ய சோப்பு நீரை பயன்படுத்துவது எளிமையான தீர்வு.

* ஒருவேளை சோப்பு நீருக்கு பதில் நீங்கள் கிருமிநாசினிகளை தேர்வு செய்தால் அதிலிருக்கும் தயாரிப்பு வழிமுறைகளை முழுமையாக படித்து பாருங்கள். இதன் மூலம் குறிப்பிட்ட அந்த கிருமிநாசினி எவ்வாறு செயல்படுகிறது, எவ்வாறு அதை பயன்படுத்த வேண்டும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

* டீப் கிளீனிங்கிற்கு கடும் ரசாயனங்கள் அடங்கிய கிருமிநாசினிகளை பயன்படுத்தினால் கட்டாயம் மாஸ்க் மற்றும் கண்களை பாதுகாக்கும் protective eye gear-ஐ அணிந்து கொள்ளுங்கள். காற்றோட்டத்தை உறுதி செய்ய அறை கதவு மற்றும் ஜன்னல்களை திறந்து வைக்கவும். இவ்வாறு சுத்தம் செய்யப்பட்ட அறைக்குள் குழந்தைகள் மற்றும் முதியவர்களை குறைந்தபட்சம் 4 நாட்களுக்கு அனுமதிக்காதீர்கள்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: