• HOME
 • »
 • NEWS
 • »
 • lifestyle
 • »
 • கூல் டிரிங்ஸ்களால் இதய நோய் பிரச்சனைகள் ஏற்படுகிறதா? ஆய்வுகள் சொல்வதென்ன?

கூல் டிரிங்ஸ்களால் இதய நோய் பிரச்சனைகள் ஏற்படுகிறதா? ஆய்வுகள் சொல்வதென்ன?

சர்க்கரை மற்றும் செயற்கையாக இனிப்பு சேர்க்கப்பட்ட பானங்கள் இதய நோய்க்கான ஆபத்தை ஏற்படுத்துகிறது.

 • Share this:
  சர்க்கரையுடன் கூடிய இனிப்பான பானங்கள் மற்றும் உணவுகள் கார்டியோ-வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சிகள் கூறுகிறது.

  செயற்கையாக இனிப்பு சேர்க்கப்பட்ட பானங்கள் ஆரோக்கிய மாற்றாக பரிந்துரைக்கப்பட்டுள்ளன, ஆனால் இதய ஆரோக்கியத்தில் அவற்றின் தாக்கம் முழுமையாக அறியப்படவில்லை. இந்த ஆய்வறிக்கையில், இருதய நோய்க்கான ஆபத்து, சர்க்கரை பானங்கள் மற்றும் செயற்கையாக இனிப்பு சேர்க்கப்பட்ட பானங்களை பருகுவதால் ஏற்படும் தீங்கினை ஆராய்ந்தனர்.

  சோர்போன் பாரிஸ் நோர்ட் பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்து தொற்றுநோயியல் ஆராய்ச்சி குழு ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வறிக்கையில் கூறியதாவது:   செயற்கையாக இனிப்பால் செய்யப்பட்ட பானங்கள் சர்க்கரை பானங்களுக்கு ஆரோக்கியமான மாற்றாக இருக்காது. இதுபற்றி முன்னர், நடந்த ஆய்வுகளும் இந்த தகவலைத்தான் கூறுகிறது.

  ALSO READ |  நீங்கள் சாப்பிடும் முட்டை தரமானதுதானா..? நொடியில் கண்டறியும் மிக அவசியமான வழி இதோ..

  2019ம் ஆண்டு ஆய்வில், ஒரு நாளைக்கு இரண்டு முறைக்கு மேற்பட்ட சர்க்கரை பானங்களை கண்ணாடி பாட்டில்களிலோ அல்லது கேன்களிலோ உட்கொண்ட பெண்களில் அகால மரணத்திற்கு 63% ஆபத்துகள் ஏற்படுவதாகவும், இதே இரண்டு முறைகளுக்கு மேல் உட்கொண்ட ஆண்களுக்கு 29% ஆபத்து ஏற்படுவதாகவும் கூறுகிறது.

  கோப்புப் படம்


  அமெரிக்கன் கார்டியாலஜி கல்லூரியின் ஜர்னலில் திங்களன்று வெளியிடப்பட்ட புதிய ஆராய்ச்சி, 100,000க்கும் மேற்பட்ட, வயது வந்த பிரெஞ்சு தன்னார்வலர்களின் தரவுகளை பகுப்பாய்வு செய்தது.  தன்னார்வலர்கள் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, அவர்கள்,

  • பானங்களை பயன்படுத்தாதவர்கள்

  • குறைந்த அளவு நுகர்பவர்கள் மற்றும்

  • உணவு அல்லது சர்க்கரை பானங்களை அதிகம் நுகர்பவர்கள் என வகைப்படுத்தப்பட்டனர்


  இவர்களை செயற்கையாக இனிப்பு சேர்க்கப்பட்ட பானங்களை குடிக்காத மக்களுடன் ஒப்பிடும்போது, அதிக நுகர்பவர்கள் எந்த நேரத்திலும் இதய நோய்க்கு 20% பாதிப்படைய வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

  ALSO READ |  இளம் வயதிலேயே மார்பகப் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுவது இந்திய, பாகிஸ்தான் பெண்கள்தான்.. - ஆய்வில் தகவல்

  சர்க்கரை பானங்களை அதிகம் பயன்படுத்தாத மக்களிடம் ஒப்பிடும்போது இதேபோன்ற முடிவுகள் தான் இருந்தது, என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.  2019ல் எடுக்கப்பட்ட மற்றொரு ஆய்வில், ஒரு நாளைக்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட செயற்கை இனிப்பு பானங்களை குடிப்பதால் பக்கவாதம், மாரடைப்பு மற்றும் 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களின் இறப்பு ஆகியவவை நிகழ்வதாக கூறுகின்றனர்.

  இதய நோய் அல்லது நீரிழிவு நோய் இல்லாத பெண்கள் மற்றும் பருமனான பெண்களுக்கு அபாயங்கள் அதிகமாக ஏற்படுகிறது.

  தப்பிப்பது எப்படி?

  கார்பனேற்றப்பட்டாலும் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் ஒரு நல்ல தேர்வாகும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆரஞ்சு, எலுமிச்சை, ஸ்ட்ராபெர்ரி, தர்பூசணி துண்டுகள் அல்லது நீங்கள் விரும்பும் எந்தவொரு பழத்தையும் நீரில் சேர்த்தால் அதில் இனிப்பு சுவை தானாக ஏற்படும் பின்னர் அந்த தண்ணீர் பழ சுவையுடன் இனிப்பை வழங்கும் என்று ஒரு நிபுணர் கூறினார்.

  ALSO READ |  பண்டிகை நாட்களில் ஏற்படும் பொதுவான உடல்நல பிரச்னைகள் என்னென்ன? தவிர்க்க என்ன வழி..?


  இயல்பாக நமது நாக்கில் உள்ள சுவை மொட்டுக்கள் இனிப்பு சுவையை சாப்பிட வேண்டுமென்று பரிந்துரைக்கும் அதற்கேற்ப நம் மூளையும் உடனடியாக செயல்பட்டு இனிப்பு கலந்த உணவு பொருட்களை உண்ணுமாறு நமது நாக்கிற்கு கட்டளையிடும். அப்போது நீங்கள் குறைந்த அளவிலான இனிப்பு பொருட்களை சாப்பிட்டும் சிறிது நேரம் கழித்து இனிப்பு கலந்த சத்தான பானங்களை அல்லது பழச்சாறுகளை அருந்துவதன் மூலம் பின்னர் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க முடியும்.  வெளியில் கடைகளில் கிடைக்கும் பானங்களை அருந்துவதை தவிர்த்து வீட்டிலேயே பழச்சாறுகளை தயாரித்து பருகுவது மிகவும் உகந்தது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sankaravadivoo G
  First published: