EctoLife (எக்டோலைஃப்) என்று சொல்லக் கூடிய உலகின் முதலாவது செயற்கை கர்ப்பப்பை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சுருக்கமாக சொல்வது என்றால், இனி குழந்தையின் வளர்ச்சி என்பது தாய்மார்களின் கர்ப்பப்பையை தாண்டி, வெளிப்புற அமைப்பு ஒன்றிலும் நடைபெற முடியும்.
மருத்துவ உலகில் இதனை extracorporeal கர்ப்பம் என்று குறிப்பிடுகின்றனர். ஜெர்மன் தலைநகர் பெர்லினைச் சேர்ந்த ஹசீம் அல் காலி என்பவர் அறிவியல் வளர்ச்சி தொடர்பான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். அவரது வீடியோக்கள் மிக அதிக அளவில் வைரல் ஆகிறது. அவர் தற்போது செயற்கை கர்ப்பப்பை குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோ குறித்து அவர் வெளியிட்டுள்ள குறிப்பில், “உலகின் முதலாவது செயற்கை கர்ப்பப்பை என்று கருதப்படும் எக்டோலைஃப் மூலமாக ஆண்டுக்கு 30 ஆயிரம் குழந்தைகளை வளர்த்தெடுக்க முடியும். உலகெங்கிலும் உள்ள ஆய்வாளர்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் முடிவாக இந்த வெற்றி எட்டப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.
எப்படி இது வேலை செய்கிறது
புதுபிக்கத்தக்க எரிசக்தி மூலமாக எக்டோலைஃப் வேலை செய்கிறது. குழந்தையை பெற்றெடுக்க தாய்மார்கள் எதிர்கொள்ளும் அவஸ்தைகளை குறைப்பதுடன், சிசேரியன் பிரசவத்திற்கான தேவையை குறைக்கிறது. எக்டோலைஃப் காரணமாக நோய் தொற்று இல்லாத சூழலில் குழந்தை வளர்கிறது.
குழந்தையின் முக்கிய வளர்ச்சி நிலைகளாகக் கருதப்படுகின்ற இதயத்துடிப்பு, வெப்ப நிலை, ரத்த அழுத்தம், சுவாசித்தல் திறன் மற்றும் ஆக்ஸிஜன் நிலை போன்றவற்றை இந்த கர்ப்பப்பை கணக்கிடுகிறது.
பிரசவகால மரணங்கள்
உலகெங்கிலும் 800 பெண்கள் நாள்தோறும் பிரசவகால சிக்கல்களால் உயிரிழக்கின்றனர் என்று உலக சுகாதார ஆய்வு நிறுவனம் தெரிவிக்கிறது. குழந்தை பிறப்பின்போது உதிரப்போக்கு, நஞ்சுக்கொடி சிக்கல், பனிக்குடம் சிக்கல் போன்றவை பிரசவத்தின்போது ஏற்படக் கூடிய பொதுவான பிரச்சினைகள் ஆகும்.
Also Read : PCOS உள்ள பெண்கள் கருத்தரிப்பதற்கான வழிகள் என்ன..? உங்களுக்கான கைட்லைன்..!
யாருக்கு உதவியாக இருக்கும்
மக்கள் தொகை எண்ணிக்கை மிக வேகமாக குறைந்து வருகின்ற ஜப்பான், பல்கேரியா, தென் கொரியா மற்றும் பல நாடுகளுக்கு இந்த செயற்கை கர்ப்பப்பை என்பது மிகவும் உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. செயற்கை கர்ப்பப்பை கட்டமைப்பு மூலமாக ஆண்டுக்கு 30 ஆயிரம் குழந்தைகளை வளர்த்தெடுக்க முடியும்.
புதிய தாய்மார்களுக்கான வரம்
செயற்கை கர்ப்பப்பை குறித்து டெல்லியைச் சேர்ந்த மருத்துவர் மன்னன் குப்தா பேசுகையில், “தாய்மை அடைவது என்பது நிச்சயமாக உணர்ச்சி மிகுந்த விஷயமாக இருக்கும். ஆண் மற்றும் பெண்களின் கருத்தரிப்பு திறன் தற்போது குறிப்பிடத்தக்க வகையில் மேம்பட்டுள்ளது. ஆனால், செயற்கை கர்ப்பப்பை என்பது கருத்தரித்தல் தொடர்பான பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வாக அமைந்துவிடாது’’ என்று கூறினார்.
சமூகம் ஏற்றுக் கொள்ளுமா..?
செயற்கை கர்ப்பப்பை என்ற மருத்துவ தொழில்நுட்பத்தை இச்சமூகம் ஏற்றுக் கொள்ளுமா என்பது உறுதியாக தெரியாத நிலையில் உள்ளது. ஏனெனில் செயற்கை கர்ப்பப்பை குறித்த பாதுகாப்பு தன்மை, மருத்துவ சிகிச்சை முறை, செயல்திறன் போன்றவை உறுதி செய்யப்படாத நிலையில், இது சிக்கலுக்கு உரியதாக இருக்கும்.
கருத்தரித்தல் பிரச்சினை அதிகரிப்பது ஏன்..?
மருத்துவர் மன்னன் குப்தா இதுகுறித்து பேசுகையில், ஆண், பெண்களுக்கு கருத்தரித்தல் பிரச்சினை ஏற்படுவதற்கான முக்கிய காரணம் மன அழுத்தம் தான். மோசமான வாழ்வியல் பழக்கங்கள், தவறான உணவுப் பழக்கங்கள், புகைப்பிடிப்பது போன்றவையும் இந்தப் பிரச்சினைக்கு காரணமாக அமைந்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Infertility, Pregnancy