ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா..? கிட்சனில் இருக்கும் இந்த ஒரு பொருள் போதும்..!

மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா..? கிட்சனில் இருக்கும் இந்த ஒரு பொருள் போதும்..!

 மூட்டு வலி

மூட்டு வலி

மூட்டு வலி ஆரம்ப நிலையில், வீட்டுமுறை மருத்துவத்தின் மூலமாக நாம் குணப்படுத்திவிட முடியும். ஆனால், தும்பை விட்டு வாலை பிடித்த கதையாக மூட்டு வலி பெரும் பிரச்சனையாக உருவாகும் வரையில் நாம் அசட்டையாக இருந்து விடுகிறோம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வயோதிகம் சார்ந்த பல நோய்கள் நம்மை தாக்குகின்றன என்றாலும், ஒவ்வொரு முறையும் நாம் மருத்துவமனைக்கு ஓடிக் கொண்டிருக்க வேண்டும் என்பதில்லை. வாழ்வியல் மாற்றங்கள், ஆரோக்கியமான உணவு முறைகள், வீட்டிலேயே கிடைக்கக் கூடிய எளிய தீர்வுகள் மூலமாக நம்மை நாம் குணப்படுத்தி கொள்ளலாம்.

குறிப்பாக, இன்றைக்கு பலரையும் பாதிக்கக் கூடிய நோய்களில் ஒன்றாக மூட்டு வலி மாறியிருக்கிறது. முன்பெல்லாம், தள்ளாத வயதில் நம் தாத்தா, பாட்டியை மட்டும் பாதித்து வந்த இந்த நோயானது தற்போது இளம் வயதினரைக் கூட வெகுவாகப் பாதிக்கத் தொடங்கியுள்ளது.

மூட்டு வலி ஆரம்ப நிலையில், வீட்டுமுறை மருத்துவத்தின் மூலமாக நாம் குணப்படுத்திவிட முடியும். ஆனால், தும்பை விட்டு வாலை பிடித்த கதையாக மூட்டு வலி பெரும் பிரச்சனையாக உருவாகும் வரையில் நாம் அசட்டையாக இருந்து விடுகிறோம். இதன் விளைவாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு விடுகிறது.

நிரந்தர தீர்வு கிடைக்குமா..?

மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வெல்லாம் கிடைக்காது. ஆனால், அது அடிக்கடி ஏறடாதபடி கட்டுப்படுத்தி வைக்கலாம். இதற்குப் பெரிய, பெரிய மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசியமோ, பெருமளவில் பணம் செலவழிக்க வேண்டிய தேவையோ இருக்காது.

வீட்டின் சமையல் அறையில் உள்ள பொருட்களைக் கொண்டு, பாட்டி முறை வைத்தியம் மேற்கொண்டாலே இதற்கு நிவாரணம் கிடைக்கும். மூட்டு வலியால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை இரு பிரிவுகளாக பிரித்து அவர்களில் ஒரு பிரிவினருக்கு தினசரி மஞ்சள் கொடுத்து வந்தனர். மற்றொரு பிரிவினருக்கு வலி நிவாரண மருந்து கொடுக்கப்பட்டது. இதில் மஞ்சள் சாப்பிட்டவர்களுக்கு நல்ல தீர்வு கிடைத்தது தெரியவந்தது.

Also Read : ஹெல்த்ல கவனம் ப்ளீஸ்! தினமும் அரைமணி நேர உடற்பயிற்சி செய்யும் மாயாஜாலம் தெரியுமா?

அனைத்து மூட்டு வலிகளுக்கும் மஞ்சள் தீர்வாக அமையுமா

மஞ்சள் உட்கொள்ளும்போது, அதற்கு ஒவ்வொரு மூட்டும் ஒவ்வொரு மாதிரியாக வேலை செய்யும். நமது முழங்கால் வலிக்கு கிடைக்கும் அதே நிவாரம் நமது கை மற்றும் தோள்பட்டை மூட்டுகளுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. மஞ்சளால் நிவாரணம் கிடைக்கும் என்றாலும் ஒரே அடியாக இதை மட்டும் சார்ந்திருக்கக் கூடாது.

உடற்பயிற்சி பலன் அளிக்குமா..?

மூட்டு வலியின்போது தசைகள் இறுக்கமாகி வலியை அதிகப்படுத்தும். நாம் உடற்பயிற்சி செய்தால் இந்த தசைகள் கொஞ்சம் விலகத் தொடங்கும். இதனால் வலி குறையும். ஆனால், இலகுவான பயிற்சிகளை மட்டுமே செய்ய வேண்டும். மிகக் கடினமான உடற்பயிற்சிகளை செய்தீர்கள் என்றால் மூட்டு வலி அதிகமாகக் கூடும். எளிய முறை யோகா பயிற்சிகள் நல்ல பலன் தரக் கூடும். வீட்டு முறை சிகிச்சைகளில் பலன் கிடைக்காவிட்டால் உரிய நேரத்தில் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Arthritis Pain, Bone health, Turmeric