தமிழகத்தில் 22 அரசு மருத்துவமனைகளில் தாய்ப்பால் வங்கிகள்: பச்சிளம் குழந்தைகளை காக்க புதிய திட்டம்!

சேமித்து வைக்கப்படும் இந்த தாய்ப்பாலை 6 மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.

Web Desk | news18
Updated: May 14, 2019, 6:27 PM IST
தமிழகத்தில் 22 அரசு மருத்துவமனைகளில் தாய்ப்பால் வங்கிகள்: பச்சிளம் குழந்தைகளை காக்க புதிய திட்டம்!
கோப்புப் ப்டம்
Web Desk | news18
Updated: May 14, 2019, 6:27 PM IST
ரத்த வங்கி, கண் வங்கி என்ற வரிசையில் தமிழகத்தில் 22 அரசு மருத்துவமனைகளில் தாய்ப்பாலையும் சேமித்துவைத்து பயன்படுத்தும் வகையில் வங்கிகள் இயங்கி வருகிறது.

குழந்தைகளின் தேவையை தாண்டி அதிகமாக பால் சுரக்கும் தாய்மார்களும், குழந்தை பிறந்த சில மாதங்களில் வேலைக்கு செல்லும் தாய்மார்களும் தன்னார்வத்துடன் தாய்ப்பால் தானம் செய்துவருகின்றனர்.

Also see... தாய்ப்பால் கொடுத்தால் இத்தனை நன்மைகளா....


பால் சுரக்காத தாய்மார்களின் குழந்தைகள், ஆதரவற்ற குழந்தைகள், குறைமாதம் மற்றும் எடை குறைவாக பிறந்த குழந்தைகள், எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்ட தாய்மார்களின் குழந்தைகளுக்கு தாய்ப்பால் வங்கிகள் தான் உதவி வருகின்றன.

தாய்மார்களிடம் இருந்து சேகரிக்கப்படும் தாய்ப்பால் 200 மி.லி. அளவுள்ள பாட்டில்களில் அடைக்கப்பட்டு 62 டிகிரி வெப்பநிலையில் 30 நிமிடங்கள் பதப்படுத்தப்படுகிறது. பாலில் கிருமித் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டபின் சேமித்துவைக்கப்படுகிறது. இந்த தாய்ப்பாலை 6 மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.

Also see...

Loading...

First published: May 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...