Home /News /lifestyle /

Stress Eating என்றால் என்ன..? மன அழுத்தம் ஏற்படும் போதெல்லாம் தாறுமாறாக பசிப்பது ஏன்..?

Stress Eating என்றால் என்ன..? மன அழுத்தம் ஏற்படும் போதெல்லாம் தாறுமாறாக பசிப்பது ஏன்..?

ஸ்ட்ரெஸ் ஈட்டிங் (Stress Eating)

ஸ்ட்ரெஸ் ஈட்டிங் (Stress Eating)

மன அழுத்தம் மிக்க சூழ்நிலையில், நாம் இழந்த அனைத்து தாதுக்களையும் உடலுக்குத் திரும்பக் கொடுக்க, க்ரீன் மற்றும் லீஃபி வெஜிடபிள்ஸை உட்கொள்ள வேண்டும்

நம்மில் பலருக்கும் ஒரு பொதுவான பழக்கம் உள்ளது - அது மன அழுத்தத்தில் இருக்கும்போது நமக்கு மிகவும் பிடித்த உணவுகளை அதிகப்படியான பசியுடன் உண்பது. மனஅழுத்தம் நிறைந்த சூழ்நிலையில் ஒருவர் உணவினை நாடுவது - மனிதர்களின் ஒரு இயல்பான பண்பு தான்; ஆனாலும் கவனம் தேவை!

ஸ்ட்ரெஸ் ஈட்டிங் (Stress Eating) மீதான புரிதலை பெற, மன அழுத்தம் மிக்க சூழ்நிலையில் அல்லது மிகவும் கடினமான ஒரு வேலை நாளின் போது நாம் ஏன் அதிகமாக சாப்பிடுகிறோம்? குறிப்பாக ஏன் அதிக உப்பு மற்றும் இனிப்பான உணவுகளை விரும்பி உண்கிறோம்? என்பதற்கு மருத்துவர்கள் பல விளக்கங்களை அளிக்கின்றனர்.

மிகவும் டென்சன் ஆக அல்லது ஸ்ட்ரெஸ் ஆக வேலை பார்க்கும் ஒரு சக ஊழியர், ஒரு முழு சிப்ஸ் பாக்கெட்டை அல்லது ஒரு பெரிய சாக்லேட்டை அப்படியே சாப்பிடுவதை நாம் அடிக்கடி பார்ப்போம் - இது தான் ஸ்ட்ரெஸ் ஈட்டிங். இங்கே தான் பல வகையான கேள்விகள் பிறக்கின்றன. அதில் மிகவும் முக்கியமான ஒரு கேள்வி - மன அழுத்தத்தில் இருக்கும்போது நாம் ஏன் உணவுக்கு ஆசைப்படுகிறோம்?

ஊட்டச்சத்து நிபுணர் ஆன அஞ்சலி முகர்ஜி ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட் வழியாக பகிர்ந்த தகவல்களை வைத்து நாம் ஸ்ட்ரெஸ் ஈட்டிங் பற்றிய எளிமையான தெளிவையும், சில கேள்விகளுக்கான பதில்களையும் பெற முடிகிறது.

மன அழுத்தமும், ஆசையும் கைகோர்த்து செல்கின்றன என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் அஞ்சலி. மேலும் "நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தால், உங்களுக்கு நிறைய பசி எடுக்கும். அந்த நேரங்களில் உங்களுக்கு உப்பு அல்லது சர்க்கரை மீது ஆசை பெருகும்" என்கிறார். நாம் மன அழுத்தத்திற்கு ஆளாகும்போது, ​​​​உடலில் இருந்து நிறைய மெக்னீசியத்தை இழக்க நேரிடும் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். எனவே நமது உடல் தாதுப் பற்றாக்குறையை பற்றி நமக்குத் தெரியப்படுத்த பசியை பயன்படுத்தி கொள்ளுமாம்.



மன அழுத்தம் மிக்க சூழ்நிலையில், நாம் இழந்த அனைத்து தாதுக்களையும் உடலுக்குத் திரும்பக் கொடுக்க, க்ரீன் மற்றும் லீஃபி வெஜிடபிள்ஸை உட்கொள்ள வேண்டும் என்று அஞ்சலி பரிந்துரைக்கிறார். எப்போதெல்லேம் நமது உடல் தாதுக்கள் குறைபாட்டை எதிர்கொள்கிறதோ, அப்போதெல்லாம் நாம் உட்கொள்ளும் வைட்டமின்கள் உறிஞ்சப்படுவதில்லை என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

உங்களுக்கே தெரியாமல் உங்கள் இதய ஆரோக்கியத்தை பாதிக்கும் 4 விஷயங்கள்..!

மன அழுத்தத்தின் போது நாம் ஏன் உப்பு மற்றும் இனிப்பு உணவுகளை மிகவும் விரும்பு உண்கிறோம் என்பதை பற்றியும் ஊட்டச்சத்து நிபுணர் அஞ்சலி விளக்கி உள்ளார். அவரின் கூற்றுப்படி, "வழக்கமாக, உப்பின் மீதான பசி (சால்ட் கார்விங்) உடலில் தாதுக்கள் இல்லாததால் ஏற்படுகிறது மற்றும் சர்க்கரை மீதான ஏக்கம் (சுகர் கார்விங்) அதிக மைதா மற்றும் அதிகப்படியாக சர்க்கரையை உட்கொள்வதால் ஏற்படுகிறது". அதிக அளவிலான மைதா மற்றும் சர்க்கரையை சாப்பிடுவதனால் உடலில் 'இன்சுலின் ரெசிஸ்டென்ஸ்' ஏற்படும், இது சுகர் கார்விங்கிற்கு வழிவகுக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.



மன அழுத்தம் மிக்க சூழ்நிலைகளில் நாம் எந்த அளவில் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை உட்கொள்கிறோம் என்பதை நாமே கண்காணிக்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிடுவதாலும் தாதுப் பற்றாக்குறை ஏற்படுத்துமாம். இது முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும் என்கிற திடுக்கிடும் தகவலையும் அஞ்சலி பகிர்ந்து உள்ளார்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Food, Hungry, Stress

அடுத்த செய்தி