பண்டிகை விடுமுறைகள் பொதுவாக நம்மை மகிழ்ச்சி, உற்சாகம் மற்றும் கொண்டாட்ட மனநிலையில் வைத்திருக்கின்றன. மற்ற எல்லா பண்டிகைகளையும் விட தீபாவளி பட்டாசுகள் மற்றும் வகை வகையான இனிப்புகளால் நிரம்பி இருக்கும் பண்டிகை என்பதால் அனைவரும் அதீத உற்சாகத்தில் இருந்திருப்போம்.
எப்போது தீபாவளி வரும் கொண்டாடி தீர்க்கலாம் என்று வாரக்கணக்கில் காத்திருந்த காத்திருப்பு முடிந்த அடுத்த நாள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவது பலருக்கும் எரிச்சலூட்டும் அனுபவமாக இருக்கிறது. தீபாவளியை எந்த அளவிற்கு கொண்டாடினோமோ அதை விட பல மடங்கு தீபாவளிக்கு அடுத்த நாளை வெறுப்போம். இந்த அனுபவம் நிச்சயம் உங்களுக்கும் இருக்கும்.
இந்த உணர்வை மேற்கத்திய நாடுகளில் "ஹாலிடே ப்ளூஸ்" என்று குறிப்பிடுவார்கள். இயந்திரத்தனமான வாழ்க்கையில் இருந்து விடுபட்டு பண்டிகைகளை உற்சாகமாக கொண்டாடி தீர்த்த பிறகு, அடுத்த நாளே மீண்டும் அதே மெஷின் வாழ்க்கைக்குள் நுழைவது பெரும்பாலான மக்களுக்கு மிகவும் வேதனைக்குரிய ஒன்றாக இருக்கிறது. முதல்நாள் பண்டிகையின் போது இருந்த எனர்ஜி, அடுத்த நாள் மாயமாக மறைந்து எதையோ இழந்தது போன்ற உணர்வில் சிக்கி பல தவிக்கிறார்கள். தீபாவளி முடிந்தும் உங்கள் இயல்பு வாழ்க்கைக்குள் உங்களால் சரிவர கவனம் செலுத்த முடியவில்லை அல்லது எரிச்சல் மற்றும் சோகமாக உணர்கிறீர்களா?
கவலை வேண்டாம்.. தீபாவளி முடிந்து விட்டதே என்று நீங்கள் மனதளவில் டல்லாக இருந்தால் உங்கள் எனர்ஜியை பூஸ்ட் செய்வதற்கான டிப்ஸ்கள் இங்கே...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.