முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / நீங்கள் அடிக்கடி சுய இன்பம் காணும் நபரா..? பாதிப்புகளும், புரிதல்களும்.!

நீங்கள் அடிக்கடி சுய இன்பம் காணும் நபரா..? பாதிப்புகளும், புரிதல்களும்.!

சுய இன்பம்

சுய இன்பம்

ஆண்களோ, பெண்களோ இருவருமே சுயஇன்பத்தில் ஈடுபடுகின்றனர். ஆய்வின்படி, சுயஇன்பத்தை செய்பவர்கள் மிகுந்த குற்ற உணர்ச்சி, அவமானம் மற்றும் மன அழுத்தத்திற்கு ஆளாவதாக கூறுகிறது.

  • News18 Tamil
  • 3-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சுயஇன்பத்தை பற்றி யாரும் பொதுவாக வெளிப்படையாக பேச மாட்டார்கள். சுய இன்பம் என்பது நமக்கு நாமே உணர்வு கிளர்ச்சியை ஏற்படுத்தி சுகம் காண்பது தான். ஆண்களோ, பெண்களோ இருவருமே சுயஇன்பத்தில் ஈடுபடுகின்றனர். சுயஇன்பம் காண இவர்களுக்கு செக்ஸ் பார்ட்னர் யாரும் தேவையில்லை.

இந்த சுயஇன்பம் நபருக்கு நபர் வேறுபடுகிறது. சிலருக்கு வாரம் ஒருமுறை, சிலருக்கு தினமும், சிலருக்கு ஒரே நாளிலேயே பல முறை என வேறுபடும். ஒரு சிலர் தனது செக்ஸ் வேட்கைக்காகவும், வேறு சிலர் பல காரணங்களுக்காவும் கூட சுய இன்ப பழக்கத்திற்கு அடிமையாகி விடுகிறார்கள்.

சுய இன்பம் நல்லதா கெட்டதா? இதை பற்றி பல ஆய்வுகள் நடந்துள்ளன. சுய இன்பத்தால் ஏற்படும் நன்மைகளை பற்றி இப்போது பார்ப்போம்.

மருத்துவ ரீதியாகப் பார்த்தால், சுயஇன்பம் இயற்கையானது என்றாலும், கலாச்சார ரீதியாகவும், பெரும்பாலான மதங்களிலும், அது செய்யக்கூடாத ஒன்றாக பார்க்கப்படுகிறது. சுயஇன்பத்தைப் பற்றி 2011ல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, சுயஇன்பத்தை செய்பவர்கள் மிகுந்த குற்ற உணர்ச்சி, அவமானம் மற்றும் மன அழுத்தத்திற்கு ஆளாவதாக ஆய்வு கூறுகிறது.

பொதுவாக வாரத்திற்கு 4 நாட்கள், மாதத்திற்கு 20 முறைக்கும் மேல் பலர் சுய இன்பத்தை அனுபவித்து வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதனால் பெரும்பாலான ஆண்கள் மனதில் தொடர்ந்து சுய இன்பம் செய்வதால், ஏதேனும் பிரச்சனை வருமா? என்ற கேள்வியையும் கேட்கின்றனர். அதுமட்டுமின்றி இது திருமணமான பின்னர், சிக்கல்களை ஏற்படுத்துமா? என்ற அச்சமும் பலருக்கு உள்ளது. எதுவுமே அளவோடு இருந்து கொண்டால் நல்லது தான், அளவுக்கு மீறினால் தான் பிரச்சனை.

சுய இன்பத்தால் ஏற்படும் குறைவான பாதிப்புகள் :

அடிமையாதல்:

சுயஇன்பம் செய்வதால் அலுவலக வேலைகள், அன்றாட நடவடிக்கைகள், சமூக நிகழ்வுகள் மற்றும் பிற திட்டங்கள் போன்றவற்றைத் தவிர்த்தால், நீங்கள் சுயஇன்பத்தை செய்யலாம். இதனால் நீங்கள் சுயஇன்பத்திற்கு அடிமையாகலாம். மற்ற எல்லா வகையான போதைப்பொருட்களையும் போலவே, இது உற்பத்தித்திறன் குறைவதற்கும், உறவுகளுக்கு ஈடுசெய்ய முடியாத சேதத்திற்கும் வழிவகுக்கும்.

முதுகு வலி:

அதிக கைபழக்கம் பின்பக்க முதுகு வலியை ஏற்படுத்தலாம். இதற்கு காரணம் நரம்பியக்க வேதி பொருட்களான டெஸ்டோஸ்டீரான், ஆக்ஸிடோஸின், DHEA மற்றும் DHTல் ஏற்படும் குறைவு. இந்த வேதி பொருட்களின் குறைபாட்டினால் ப்ரொஸ்க்ளாண்டின் E2 என்ற ஹார்மோன் சுரந்து விடுவதால் இது வீக்கத்திற்கு காரணமாகி கீழ் முதுகு வலி உண்டாக வாய்ப்புகள் உண்டு.

Also Read : தினமும் உடலுறவு கொண்டால் என்ன ஆகும்..? தெரிந்துகொள்ளுங்கள்..!

மனநல கோளாறுகள்:

2015ம் ஆண்டில் Indian Journal of Psychological Medicineல் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் சுட்டிக்காட்டியுள்ளபடி, சுயஇன்பம் குறித்து கடுமையான குற்ற உணர்வு, அவமானம், ஒழுக்கக்கேடு மற்றும் களங்க உணர்வு ஆகியவை கடுமையான மனநோய்களுக்கு வழிவகுக்கும்.

சுயஇன்பத்தில் ஈடுபடுவதன் மூலம் ஏற்படும் நன்மைகள்:

* சுயஇன்பத்தால் மனச்சோர்வு குறைகிறது. இதன் காரணமாகவே பெரும்பாலான ஆண்கள் சுயஇன்பம் தவறாமல் செய்கிறார்கள்.

* சுயஇன்பம் ஆண்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதாகவும், குளிருக்கு இதமாக இருப்பதகாவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

* சிலருக்கு புரோஸ்டேட் புற்றுநோய் தாக்கும் அபாயத்தில் இருந்து காத்துக் கொள்ளவும் இது உதவுகிறது.

* தங்கள் விருப்பத்தை நிறைவேற்ற, பெரும்பாலான ஆண்கள் சுய இன்பத்தை நாடுகிறார்கள்.

* பல ஆண்கள் நல்ல தூக்கத்திற்காக சுய இன்பம் செய்கிறார்கள். சுய இன்பத்தில் ஈடுபடுவதன் மூலம் நம் ஆழ்ந்த உறக்கத்தை பெற முடியும் என்பது பலரின் நம்பிக்கை

* பெரும்பாலான ஆண்கள் உடலுறவின் விருப்பமாக சுயஇன்பத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் அவர்கள் உடலுறுவு கொள்ள விரும்பும் போதெல்லாம் சுயஇன்பத்தில் ஈடுபடுகின்றனர். இதன் மூலம் அவர்களின் அந்த எண்ணம் குறையும்.

தனிமையை தவிர்த்து மன அழுத்தமின்றி இருங்கள் :

தனிமை தான் பலருக்கும் முதல் எதிரி. தனிமையில் இருக்கும் போது தான் சுயஇன்ப எண்ணங்கள் அதிகம் வரும். நீங்கள் தனியாக இருக்க வேண்டிய சூழ்நிலையில் வேறு ஏதாவது உங்களுக்கு பிடித்த வேலையை மேற்கொள்ளுங்கள். நடைபயிற்சி மேற்கொள்ளுதல், நண்பர்களை சந்தித்தல், படுக்கை அறையை தூங்கமட்டும் உபயோகபடுத்துதல், போன்றவற்றை செய்யலாம். சிலருக்கு மனஅழுத்ததைக் குறைக்க சுயஇன்பத்திற்க்கு அடிமையாகி விடுகிறார்கள்.

மன அழுத்தம் எனும் ஒருவித எதிர்மறை சக்தியை சுய இன்பத்தினால் மறக்க வென்றுவிட பார்க்கிறார்கள் ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக மன அழுத்தம் உங்கள் திடமனதை குலைத்து விடும். இது இப்படியே தொடர்வதால் சுயஇன்பத்திற்க்கு அடிமையாகும் சூழ்நிலை வந்து விடும். பல இயற்கையான முறைகள் மூலம் இதற்கு தீர்வு காணலாம். யோகா, தியானம், மூச்சு பயிற்சி, மசாஜ் போன்றவை நல்ல பலன் தரும். மேலும் இவை உங்கள் மனதையும், உடலையும் புத்துணர்ச்சியுடன் வைக்கும்.

சுயஇன்பம் பற்றிய பொதுவான தகவல்கள் :

* சுயஇன்பம் மிகவும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கிறது, பலரும் இதை செய்வதற்கான முதன்மைக் காரணமும் இதுதான்.

* சுயஇன்பம் என்பது அடிப்படையில் சுய ஆய்வின் ஒரு வடிவமாகும், எனவே உங்கள் பாலியல் தேவைகள் மற்றும் ஆசைகள் என்ன என்பதை நன்கு புரிந்துகொள்ள இது உதவுகிறது.

* இது ஒரு கூட்டாளருடன் உடலுறவை மேம்படுத்துகிறது, ஏனெனில் நீங்கள் விரும்புவதை நீங்கள் அறிந்தவுடன், உங்கள் கூட்டாளருக்கு உகந்த பரஸ்பர இன்பத்திற்கு இது வழிகாட்டலாம்.

* சுயஇன்பம் செய்வதின் விளைவு சிறந்த தூக்க தரத்தை மேம்படுத்தும்.

* சுய மற்றும் பரஸ்பர சுயஇன்பம் கர்ப்பம் மற்றும் பாலியல் மூலம் பரவும் நோய்த்தொற்றுகளை (STIs) தவிர்ப்பதற்கான நல்ல வழிகளாகும்.

* பெண்களில், சுயஇன்பம் கர்ப்ப காலத்தில் கூட மாதவிடாய் பிடிப்புகள் மற்றும் கருப்பை பிடிப்புகளை அகற்றுவதற்கான சிறந்த வேலையாகும் என்று ஆய்வுகள் காட்டுகிறது.

* Harvard Medical School ஆராய்ச்சியாளர்கள் 2019ம் ஆண்டு நடத்திய ஆய்வில், சுயஇன்பத்தால் மாதத்திற்கு குறைந்தது 21 முறை விந்து வெளியேறிய ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் வருவதற்கான ஆபத்தை 33% குறைந்துள்ளது என்றனர்.

Also Read : ஓரல் செக்ஸ் செய்யும் போது இந்த விஷயங்களில் கவனமாக இருங்க..!

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற வாக்கியத்திற்கு இணங்க எதையும் அளவோடு செய்து மகிழ்வோடு வாழ கற்றுக்கொள்ளுங்கள். தேவையற்ற மனக்குழப்பங்கள் மற்றும் சஞ்சலங்களை நீக்கி மனதை ஆரோக்கியமாகவும் நேர்மறை எண்ணங்களுடன் வைத்திருந்தால் வாழ்க்கை என்றும் இனிமையாக இருக்கும்.

First published:

Tags: Masturbation, Sex Addiction, Sexual Health